இந்திய பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒன்பது மாதங்கள் இருக்கையில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும், எதிர்க் கட்சிகளும், தமது பலத்தைக் காட்டுவதற்கு ஏட்டிக்குப் போட்டியாக கூட்டங்களை நடத்தியுள்ளன. பான்டாவில் கடந்த மாதம் எதிர்க் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகள் பெங்களூரில்நடந்த இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டன.
காங்கிரஸுடன் இணைய மாட்டோம் என அடம் பிடித்த மம்தா பார்னஜியும், கெஜ்ரிவாலும் பங்களூரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு
ஆச்சரியப்பட வைத்தனர்.
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயக் கூட்டணி உள்ளது.
சுமார் ஒன்பது வருடங்களாக ஆட்சியில் இருக்கும்
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெறவில்லை. எதிர்க் கட்சிகள் ஒன்றிணைவதால்
தேசிய ஜனநாயக் கூட்டணியும் பிரிந்துபோன
கட்சிகளை ஒன்றிணைத்தது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் தலைமையில் அமைந்துள்ள என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் பங்கேற்றன. இஇந்தக் கூட்டணியில் பாரதீய ஜனதா மட்டும் பலமான கட்சியாக உள்ளது. மிகுதியான 37 கட்சிகளுக்கு 29 எம்.பிக்கள் தான் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட ஏழு கட்சிகள் தலா ஒரு எம்பியை மாத்திரம் கொண்டுள்ளனர். தேர்தலில் வெற்ரி பெற்ற ஒரே ஒரு எம்பியான ரவீந்திரநாத்தை அண்னா திராவிட முன்னேற்றச்க் கழகம் வெளியேற்ரி விட்டது. ஓ. பன்னீர்ச்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குடும்ப செல்வாக்கினால் தேர்தலில் வெற்றி பெற்றார். ஒற்றைத் தலைவராக இருக்கும் எட்பாடியின் செல்வாக்கு குறைந்துள்ளதை மோடி பெரிதாக எடுக்கவில்லை.
மோடிக்குப் பக்கத்தில் எடப்பாடிக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டனி அமைத்தால் தலைமைப் பதவியைத் தூக்கு எரியப்
பூவதாக கொக்கரித்த அண்னாமலை அமைதியாகி விட்டார். மோடியையும், அமித் ஷாவையும் முழுமையாக நம்பி இருந்த பன்னீர் கழற்றிவிடப்பட்டுள்ளார். இதில் அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகள்தலா ஒரு எம்பியையும், ஒன்பது கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. 25 கட்சிகளுக்கு எம்பிக்களே இல்லை. மாநிலத்தில் செல்வாக்கு இல்லாத கட்சிகளுடன் பாரதீய
ஜனதா கூட்டணி சேர்ந்துள்ளது.
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற த்தசில வாரங்களுக்குப்
பிறகு, பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 17, 18 தேதிகளில் இரண்டு நாட்களாக
நடைபெற்றது. வருகிற மக்களவைத் தேர்தலுக்கான
எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘ I-N-D-I-A என்று
பெயர் சூட்டப்பட்டுள்ளது. [ இந்திய தேசிய வளர்ச்சி
உள்ளடக்கிய கூட்டணி- Indian National
Developmental Inclusive Alliance ] இதில் காங்கிரஸ் திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்துள்ளன.
“அரசியலமைப்புச் சட்டத்தில்
பொதிந்துள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான” 26 கட்சிகளின் தீர்மானத்தைக்
குறிப்பிடுகிறது. “இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம்,
பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை முறையாகவும் அச்சுறுத்தும்
வகையிலும் சிதைக்கப்படுகின்றன” என்று அந்த ஆவணம் கூறுகிறது.
அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு “மத்திய முகமைகளை தவறாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களின் தேவைகளை புறக்கணிக்கிறது” என்று அந்த ஆவணம் கூறுகிறது. மேலும், மணிப்பூரில் மனிதாபிமான துயரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை எப்போதும் உயர்ந்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
“சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மற்றும்
வன்முறையைத் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்; பெண்கள், தலித்துகள் மற்றும்
ஆதிவாசிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை நிறுத்த வேண்டும்; சமூகம், கல்வி
மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களிடமும் நியாயமான முறையில் கோரிக்கைகளை
கேட்பது, முதல் கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும்” என, ஆவணங்களில்
கூறப்பட்டுள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம்,சிரோமணி அகாலி தளம்,பகுஜன் சமாஜ் கட்சி,பிஜூ
ஜனதா தளம்,பாரத ராஷ்ட்ரீய சமிதி,ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,
இந்திய தேசிய லோக் தளம் ,அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியன எந்தக் கூட்டணியிலும் இடம் பெறவில்லை.
காங்கிரஸுடனு, திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் ஒட்டி உறவாடிய
கமல் கழற்றி விடப்பட்டுள்ளார். மோடியின் தலைமையை
ஏற்ற விஜயகாந்தை டெல்லி கண்டு கொள்ள வில்லை.
I-N-D-I-A கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அந்த அந்த மாநிலங்களில்
அதிக செல்வாக்கு உள்ளது. பாரதீய ஜனதாவின் தலைமையில்
இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு அந்த மாநிலங்களிலேயே செல்வாக்கு இல்லை.தமிழகத்தில்
அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் செல்வாக்கை இழந்துள்ளது.வாசன், ராமதாஸ் ஆகியோர் வாக்குகளைச் சிதைப்பார்களே தவிர வெற்றி பெற மாட்டார்கள்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் வலுவாக உள்ளன.ஸ்டாலின், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்ற 10 மாநிலத்தின் முதல்வர்கள் இந்தக் கூட்டணியில் இருக்கின்றனர். இது அந்தக் கூட்டனிக்கு மிகப் பெரிய
பலமாகும்.
மோடி பிரதமராகக் கூடாது என்ற ஒற்றைச் சொல்லுடன் I.N.D.I.A கூட்டணி களம் இறங்கி உள்ளது.
No comments:
Post a Comment