ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மலிங்க தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான நியூயார்க் அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த தொடருக்காக அமெரிக்கா
சென்றுள்ள அவருடன் மலிங்காவின் மகனான டுவின் மலிங்காவும் உடன் சென்றுள்ளார். அங்கு
நியூயார்க் அணி வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்து கொண்டிருக்கும் வேளையில் அவரது மகன்
டுவின் மலிங்கா அவரைப் போன்று அச்சசலாக பந்து வீசும் பயிற்சி வீடியோ ஒன்றினை எம்.ஐ
நியூயார்க் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில் பந்துவீசும் தன்
மகனை பார்த்து : ஆக்சன் எல்லாம் ஒழுங்காக வருகிறது. சரியான வேகத்துடன் நேராக பந்துவீச
தொடங்கினால் இன்னும் திறனை மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். மலிங்க அப்படி சொல்லிக்
கொண்டிருக்கும்போதே டுவின் மலிங்கா வீசும் பந்து ஸ்டம்பை தட்டி செல்கிறது. தந்தையை போன்றே பந்துவீசும் டுவின் மலிங்கவின் வீடியோ து தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு
மட்டுமின்றி மும்பைக்கு அடுத்த மலிங்கா ரெடி என ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை
பதிவிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment