Sunday, July 2, 2023

செந்தில் பாலாஜியை முடக்கிய பாரதீய ஜனதா


 இது நம்ம ஏரிய என  தூள் கிளப்பிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், பாரர்தீய ஜனதாக் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய செந்தில் பாலாஜியைக் குறி வைத்து  டெல்லித் தலமை காய் நகர்த்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில்  திராவிட முன்னேற்றக் கழகக்கொடி  பட்டொளி வீசிப் பறக்கிறது. அண்ணாமலையின்  திருகு தாளங்களை சந்தியில் நிருத்தி கேள்வி கேட்ட செந்தில் பாலாஜி பழி வாங்கப்பட்டுள்ளார்.

2014-ல் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது நடந்த குற்றத்தின் ஆவணங்களை தேடி,2023-ல் மின்சாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். சகலவித  ஒத்துழைப்பையும்  வழங்குவதாக செந்தில் பாலாஜி உறுதியளித்த  பின்னரும், அவருக்கு எதிராக  மிக மோசமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை

  காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடத்தியது. தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரத்தில் 17 மணிநேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா இல்லை கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் செய்யப்பட்டது. இதில் நடந்த முறைகேடு, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களின் மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

இதன் தொடர்ச்சியாக  ஜூன் 13 காலை அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரின் அலுவலகம், மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரின் சகோதரர் அசோக்குமார் வீடு, கரூரில் இவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை எட்டு மணிக்கு மேல் தொடங்கிய சோதனை இரவு 1:30 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 17 மணி நேரங்களுக்கு மேல் நடைப்பெற்ற இந்த சோதனையை அடுத்து நள்ளிரவு 2.15 மணிக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி என்ற தகவல் வெளியானது.

கைது குறித்த செய்து கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்தவரது கண்கள் தடதடத்தது. நெஞ்சை பிடித்துக் கொண்டு ‘அய்யோ... அம்மா...’ என்று சத்தம் போட்டதும், உடனே அங்கிருந்து ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 2:15 மணிக்கு அழைத்து சென்றோம். அருகில் உள்ள நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த, ஒரு நீதிபதியை தொடர்பு கொண்டோம். அவரோ, ‘இது அரசியல் ரீதியாக செல்லும்... காலை அழைத்து வாருங்கள் என்று சொல்லியதால், நுங்கம்பாக்கத்திலிருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைப்பதுதான் எங்கள் திட்டம். ஆனால், உடல் நிலை காரணமாக இப்போது மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்கிறார்கள்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலஜியின் உடல் நிலை பரிசோதிப்பதற்காக டெல்லி எய்ம்ஸிலிருந்து மருத்துவ குழு வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். இவரது உடல் நிலை ஆரோக்கியமான பிறகு அண்டை மாநிலத்தில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என் நேரு, சேகர் பாபு, பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வந்து சென்றிருக்கிறார்கள். இரவு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் அங்கேதான் இருக்கிறார். ஐ.சி.யு வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இப்போது வரைக்கும் பாதுகாப்புப் படையின்  கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருக்கிறார்.கரூர் மாவட்டம்  ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர் வே. செந்தில்குமார் என்னும்  செந்தில் பாலாஜி. எண் கணிதம், ராசிபலன்களின் மீது நம்பிக்கை கொண்ட அவர் தனது பெயரை செந்தில் பாலாஜி என்று மாற்றிக்கொண்டார். தொடக்கக் கல்வியினை ராமேஸ்வரப்பட்டியிலும், மேல்நிலை கல்வியை கரூரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.

அதன் பின்னர் கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை படித்தார். அரசியல் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக 1995ம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு மதிமுகவில் இணைந்தார். சிறிது காலத்திலேயே மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். பின்னர் 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக முதல் முதலாக மக்கள் பிரதிநிதியானார். 

அதன் பிறகு செந்தில்பாலாஜி, 2006ம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். துடிப்பாக செயல்பட்டதன் காரணமாக கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், கரூர் மாவட்ட  செயலாளர் என அடுத்தடுத்த பொறுப்புகளை ஜெயலலிதா அவருக்கு வழங்கினார்.

திமுக ஆட்சிக்கு எதிராக மணல் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டதால் , ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பட்டியலில் செந்தில் பாலாஜி இடம் பெற்றார்.

இதனையடுத்து 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில்  கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரை போக்குவரத்து துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். 2015 ம் ஆண்டு முறைகேடாக பணம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், அவரது  அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றை ஜெயலலிதா பறித்தார்.

2016ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க Mஇனிச்டெர் ஸெந்தில் Bஅலஜி ஆர்ரெச்டெட் ளிவெ ணெந்ச் | செந்தில்பாலாஜியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்?

அரவக்குறிச்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 

அதிமுக பொது செயலாளர்  ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக அதிமுக பிரிந்து சட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக  எம்எல்ஏக்கள் பட்டியலில் செந்தில் பாலாஜியும் தகுதி நீக்கம் செய்யபட்டார்.

டிடிவி தினகரனுடன் துவங்கிய அமமுகவில் கரூர் மாவட்ட செயலாளராகவும், அமமுக மாநில அமைப்பு செயலாளராகவும் செயல்பட்ட செந்தில்பாலாஜி , பின்னர்  திமுகவில் 2019ம் ஆண்டு இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்ட  இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2021ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும்  மின்சார துறை ஆகியவை வழங்கப்பட்டது.

ஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான தீவிர அரசியலில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வந்த நிலையில் , 2015 ஆம் ஆண்டு அதிமுக அமைச்சராக போக்குவரத்து துறையில் இருந்தபோது நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தற்பொழுது அமலாக்க துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை போலவே வேறு சில அமைச்சர்களும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றனர் என்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை போலவே வேறு சில அமைச்சர்களும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் இருக்கின்றனர் என்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

கர்நாடகத்தில் இன்றைக்கு காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது எனில் அதில் துணை முதல்வர் டிகே சிவகுமாரின் பங்களிப்பு பிரதானமானது என்பது மிகை அல்ல. ஆனால் இதே டிகே சிவகுமார்தான் பாஜகவுக்கு நெடுங்காலமாக சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறார். டிகே சிவகுமாரை கண்ட்ரோல் செய்வதற்காகவே அமலாக்கத்துறை ரெய்டுகள், கைதுகள், குடும்பத்தினருக்கு நெருக்கடி என எல்லாம் அரங்கேற்றமானது. ஓட ஓட விரட்டப்பட்டார் டிகே சிவகுமார். ஆனால் அவருக்கு அது ஆகப் பெரும் அனுதாபத்தை கொடுத்தது. மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அண்டை மாநிலத்து- மகாராஷ்டிரா மாநிலத்து நாராயண் ரானே போலவோ அஸ்ஸாம் மாநிலத்து ஹிமந்த பிஸ்வாஸ் போலவே பாஜகவுக்கு ஓடிப் போயிருந்தால் டிகே சிவகுமார் மீதான அத்தனை வழக்குகளும் இன்று காணாமலே போயிருக்கும். ஆனாலும் பாஜகவை முழு வீச்சோடு நின்று எதிர்த்தார். பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் வியூகம் வகுத்து செயல்பட்டார். இதன் விளைவாக தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்கிற ஒற்றை மாநிலம் கர்நாடகா எனும் பெருமையை காலி செய்து கரி பூசி அனுப்பிவிட்டார் டிகேஎஸ். இப்போது கர்நாடகா மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார் டிகே சிவகுமார்.

இன்று தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை கைது செய்திருக்கக் கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோவை மண்டலம் எனப்படும் மேற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருப்பவர். இந்த மேற்கு மண்டலத்தைத்தான் பாஜக மலைபோல நம்பி இருக்கிறது. இந்த மேற்கு மண்டலத்தைதான் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதவி ஏற்ற போது கொங்கு நாடு அதிகாரப்பூர்வமற்ற தனி மாநிலமாக மத்திய அரசு எழுதியிருந்தது. இந்த கொங்கு மண்டலம், திமுகவுக்கு சவாலாக இருந்தது. இந்த சவால்களை காலி செய்து பாஜகவுக்கு மிரட்சியை தந்து கொண்டிருப்பவர் செந்தில் பாலாஜி. ஆகையால் அவருக்கு நெருக்கடி தந்து கைது செய்துவிட்டது; ஆனால் டிகே சிவகுமார் போல மீண்டும் வந்து பாஜகவை இன்னும் வெலவெலக்க வைப்பார் அண்ணன் செந்தில் பாலாஜி என நம்பிக்கையுடன் எழுதுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

No comments: