பரிஸில் நடந்த பிரெஞ்சு ஓபன் 2023 இல் மார்டன் ஃபுசோவிக்ஸுக்கு எதிரான இரண்டாவது சுற்று ஆட்டத்தின் போது சேர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் மார்பில் ஒரு சிறிய, மர்மமான பொருள் இருப்பது பலரால் கவனிக்கபட்டது. இது விளையாட்டில் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் நானோ தொழில்நுட்ப சாதனம் என்று கூறப்படும் நிலையில்,எனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியம். சிறுவயதில் நான் அயர்ன் மேனை மிகவும் விரும்பினேன், அதனால் நான் அயர்ன் மேனாக மாற செய்ய முயற்சிக்கிறேன்" என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.
தாவோ
டெக்னாலஜிஸ் என்ற இத்தாலிய நிறுவனம், "மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான
புதுமையான நானோ தொழில்நுட்ப சாதனங்களை காப்புரிமை பெற்று உருவாக்குவதில்" நிபுணத்துவம்
பெற்றுள்ளது, இதுவே ஜோகோவிச் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் பின்னாலும் இருப்பதாகக்
கூறியுள்ளது. Taopatch என்பது காப்புரிமை பெற்ற நானோ தொழில்நுட்ப சாதனமாகும், இது உங்கள்
உடலில் உள்ள வெப்பத்தை ஒளியாக மாற்றி அதனை, நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது என்று
ஜோகோவிச் நெஞ்சில் சிப் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலான பிறகு, அந்த நிறுவனம்
இந்த சாதனம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டது.
"உங்கள் உடலில் இருந்து வெப்பத்தை ஒளியாக மாற்றும் நானோகிரிஸ்டல்கள் இதில் உள்ளன (இது இருட்டில் ஒளிரும்). இந்த ஒளி உங்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட குத்தூசி மருத்துவப் புள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது, இது உடலின் மற்ற பகுதிகளுடன் இயற்கையாக எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை உங்கள் உடல் "நினைவில் கொள்ள" உதவுகிறது. இது உடல்நலத்தில் சமநிலை மற்றும் சிறந்த தூக்கம், கவனம், தடகள செயல்திறன், வலி நிவாரணம் மற்றும் பலவற்றிற்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது," என்று நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment