Wednesday, July 19, 2023

டெஸ்ட் கிறிக்கெற்றில் அஸ்வின் புதிய சாதனை

  மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக   டொமினிகாவில் நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில்  700 விக்கெற்களை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின்  புதிய சாதனை படைத்துள்ளார்.   டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்களையும், , ஒருநாள் போட்டிகளில் 151விக்கெட்களையும், , ரி20 போட்டிகளில் 72 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இந்திய வீரர்களான  அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

  முதல்  இன்னிங்சில் 5 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின்    702 விக்கெட்ட்களை வீழ்த்தியுள்ளார். 33 முறை 5 விக்கெட்களைக் கைப்பற்றி உள்ளார்.  இதேவேளை   மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக  நான்கு செஞ்சரிகளை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

 டெஸ்ட் கிரிக்கெட்டில்   தந்தையையும்,  மற்றும் மகனையும்  ஆட்டமிழக்கச் செய்த  இந்திய வீரர் என்ற சாதனையும்  படைத்துள்ளார்.   உலக அளவில் தந்தையின் விக்கெற்றையும்,  மகனின் விக்கெற்றையும் வீழ்த்திய  ஐந்தாவது வீரர் எனும் சாதனையையும்  படைத்துள்ளார். போட்டி துவங்கிய அரை மணி நேரத்திலேயே தக்நரேன் சந்தர்பாலை ஆட்டமிழக்கச் செய்தார் அஸ்வின். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு  மேற்கு இந்தியத்தீவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்  டோனி தலைமையிலான இந்திய அணியில்   அறிமுகமானார். அந்த முதல் தொடரிலேயே   ஜாம்பவான் சிவ்நரேன் சந்தர்பாலை வெளியேற்ரிய  அஸ்வின் தற்போது 12 வருடங்கள் கழித்து அவருடைய மகனையும் வெளியேற்றினார். 

தந்தையையும் மகனையும்  வெளியேற்ரிய பந்து வீச்சாளர்கள் 

 1. இயன் போத்தம் (இங்கிலாந்து) : லான்ஸ் – கிறிஸ் கேரின்ஸ்

 2. வாசிம் அக்கரம் (பாகிஸ்தான்) : லான்ஸ் – கிறிஸ் கேரின்ஸ்

3. மிட்சேல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) : சிவ்நரேன் சந்தர்பால் – தக்நரேன் சந்தர்பால்

 4. சைமன் ஹர்மார் (தென்னாப்பிரிக்கா) : சிவ்நரேன் சந்தர்பால் – தக்நரேன் சந்தர்பால்

 5. ரவிச்சந்திரன் அஸ்வின் : சிவ்நரேன் சந்தர்பால் – தக்நரேன் சந்தர்பால்

இடதுகை துடுப்பாட்ட வீரர்களுக்கு சின்ன சொப்பனமாகத் திகழ்பவர் அஸ்வின்.   450க்கும் மேற்பட்ட இடது கை வீரர்களின் விக்கெட்களை  சாய்த்து மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார்.       அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்  விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு  வழங்கப்படவில்லை.  ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் வன் பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. தொடர்ச்சியாக அஸ்வின் விளையாடி இருந்தா 700 எனும் மைல்கல்லை முன்னதாகவே எட்டி இருப்பார். 

No comments: