ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி அக்டோபர் 5 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. 48 போட்டிகள் 10 ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் கடைசியாக 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலகக் கொண்ணப் போட்டி நடைபெறும்
ஈடன் கார்டன் மைதான ரிக்கெற் விலை விபரம் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன்
கார்டன் ஸ்டேடியத்தில் 63,500 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. ஐந்து உலகக்கிண்ணப்
போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.
உலகக் கிண்ண இரண்டாவது இறுதிப் போட்டி நவம்பர் 16ஆம் திகதி
தி பெங்கால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பெங்கால் கிரிக்கெட் சங்கம் திங்கள்கிழமை
வெளியிட்ட அறிக்கையில், அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ..900 [இந்திய விலை] முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ், நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்களின் விலை குறைவாக இருக்கும். ரூ..650 (மேல் அடுக்கு) முதல் ரூ..1500 (பி, சி,
கே, எல் பிளாக்) இருக்கும். மேலும், டி மற்றும்
எச் பிளாக்கிற்கு ரூ..1,000 டிக்கெட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அரையிறுதி மற்றும்
இந்தியா- தென்னாப்பிரிக்கா போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ.900 முதல் ரூ.3,000
வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த டிக்கெட் விலையாக ரூ. 900 மேல்
அடுக்குக்கும், B, ள் பிளாக் டிக்கெட்டின் விலை 3000 ரூ.பாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு போட்டிகளுக்கு ரூ. 1500 (டி, எச் பிளாக்) மற்றும் ரூ. 2500 (சி, கே
பிளாக்) இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பங்களாதேஷ்
ஆகியவற்ருக்கு எதிராக பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில்
விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ.800 (மேல் அடுக்கு),
ரூ.1200 (டி, எச் பிளாக்), ரூ.2000 (சி, கே பிளாக்) ,ரூ..2200 (பி, எல் பிளாக்) என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறினால், நவம்பர்
16-ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அதிகாரப்பூர்வ ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இணையதளம் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் . கூடுதலாக, BookMyShow, Paytm , Paytm Insiders போன்ற பிரபலமான தளங்களில் டிக்கெட் கிடைக்கும். மேலும், ரசிகர்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதை தடுக்கும் வகையில், குறைந்த எண்ணிக்கையிலான ஆஃப்லைன் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment