Monday, July 17, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 74


 கமலும், ரஜினியும் உச்சத்தில் இருந்த காலத்தில் அவருக்குப் போட்டியாக வலம் வந்தவர்  மோகன். அதிகமான படங்களில் பாடகராக நடித்ததால் " மைக் மோகன்" என அழைக்கப்பட்டார்.  மோகன் மைக்கைப் பிடித்துப் பாடும்  போது நிஜமாக அவர் பாடுவது போல் இருக்கும். மோகன் நடைத்த படங்களில் அதிகமானவை வெள்ளிவிழாக் கண்டு கலக்கின.

மோகனின் படங்களில்  அடிதடி கிடையாது மசாலா  இருக்காது. ஆனாலும், அன்றைய  இளம்  பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்தார் . மோகன் திரைப்படங்களில் பேசியதில்லை. எஸ். என்.சுரேந்தர் மோகனுக்காக  குரல் கொடுத்தார்.  இவர் நடிகர்  விஜயின் மாமனாராவார்.  'பாசப் பறவைகள்' படத்தில் தனது குரலிலேயே பேசி நடித்தார். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை வசனகர்த்தாவான முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனாலும், அவரது குரலை ரசிகர்கள் ஏற்கவில்லை.

ரஜினிக்கு முன்னதாகவே கர்நாடகாவில் இருந்து  வந்து தமிழ் மக்களின் மனதை  வென்றவர்  மோகன்.கர்நாடகாவில் சிறிய  ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தவரை, அங்கு சாப்பிட வந்த கன்னட நாடகக் காரரான கரந்த் என்பவர் மேடை நாடக நடிகராக்கினார்.  இயக்குநர் பாலு மகேந்திரா மோகனை   சினிமாவுக்கு அழைத்துவந்தார். . 1977ல் வெளியான அவரது கன்னட படமான 'கோகிலா'வில் மோகன் நடித்தார். அந்த படத்தின் கதாநாயகன் கம.  பின்னர் கமலுக்குப் போட்டியாக கதாநாயகனாக நடித்தார்.  கன்னடத்தில் இருந்து மலையாளம், அங்கிருந்து தெலுங்குக்குச் சென்ரார்.

  1980 ஆம் ஆண்டு   'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில்இயக்குநர் மகேந்திரன்  தமிழுக்கு அரிமுகம் செய்தார்.    அடுத்த படமான 'மூடுபனி'யிலும் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் பிரதான பாத்திரட்ய்க்தில்  நடித்தார். இந்த படங்களில் மோகனை 'கோகிலா' மோகன் என்றால் தான் தெரியும். இந்த இரண்டு படங்களுமே சூப்பர்  ஹிட்.

கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை'   இரண்டுமே 200 நாட்களை கடந்து ஓடியவை. அதன் பிறகு தயாரிப்பாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாகிப் போனார் மோகன். 1980களில் அவரது படங்கள் எல்லாமே   குறைந்தது 175 நாட்களை தாண்டின.

1984ல் மட்டும் மோகன் நடித்த 19 படங்கள் வெளியாகின. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கரா முன்புதான் இருந்தார். ஒரே நாளில் இவரது மூன்று படங்கள் வெளியான  வரலாறெல்லாம் உண்டு. 1980களில் ரஜினி, கமல் படங்கள் ஓடுதோ இல்லையோ இவர் எத்தனை படங்கள் நடித்தாலும் ஹிட்டடித்தன. அந்த அளவுக்கு சாதனைக்கு சொந்தக்காரர்.

அடர்ந்த முடியுடன் டிஸ்கோ டைப் ஹேர் ஸ்டைல் (80ஸ் இளைஞர்களின் விருப்ப ஹேர் ஸ்டைல் இதுதான்), அப்பாவியான முகம், லேசாக பற்கள் தெரிய மென்மையான புன்னகை என 1980களின் ரசிகைகள் மோகனின் வசீகரத்தில் கிறங்கி கிடந்தனர். அதேநேரம் இளையராஜா, எஸ்பிபி உபயத்தால் இவரது படங்களின் பாடல்களில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் மயங்கி கிடந்தனர். ரொமான்டிக் ஹீரோவாக மிக உச்சத்தில் இருக்கும் போதே, மிகக் கொடூரமான கொலையாளியாக ஆன்ட்டி ஹீரோவாக 'நூறாவது நாள்' படத்திலும் இளம் பெண்களை கர்ப்பமாக்கி ஏமாற்றுபவராக 'விதி' படத்திலும் மோகன் நடித்தார். ஆச்சர்யமாக அந்த படங்களும் கூட 200 நாட்கள் 300 நாட்கள் என கடந்து சாதனை படைத்தன. அதிலும் 'விதி' படத்தின் வசன கேசட் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஸ்ரீதர், ரங்கராஜ், மணிரத்னம் என அன்றைய முன்னணி இயக்குநர்களின் படங்களில் மோகன் நடித்திருக்கிறார். ராதிகா, அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா, ரேவதி, அமலா, ஜெயஸ்ரீ, இளவரசி, சீதா, நதியா 80ஸ் முன்னணி நாயகிகளுடனும் மோகன் நடித்திருக்கிறார்.

வெறும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் சுமார் நூறு படங்களை எட்டிய மோகன் நடித்த படங்களில் 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'இளமைக் காலங்கள்', 'விதி', 'நூறாவது நாள்', 'நான் பாடும் பாடல்', '24மணி நேரம்', 'உன்னை நான் சந்தித்தேன்', 'தென்றலே என்னைத் தொடு', 'குங்குமச் சிமிழ்', 'இதய கோவில்', 'உதய கீதம்', 'மவுன ராகம்', 'மெல்ல திறந்தது கதவு', ' உயிரே உனக்காக', 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்', 'ரெட்டைவால் குருவி', 'பாடு நிலாவே' 'சகாதேவன் மகாதேவன்' என சூப்பர் டூப்பர் ஹிட் வரிசை படங்கள் ஏராளம். சின்ன பட்டியலுக்குள் அடங்காது.

இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள நடித்துள்ளார். கிட்டத்தட்ட 70 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தை விட்டுவிட்டு பொதுவாக நடிப்பிலும் மீடியாவிலும் தான் தன்னுடைய பொழுதைப் போக்கினார்.பொதுவாக தயாரிப்பாளர்களில் தங்க மீன் என்றால் அது நடிகர் மோகன் தான்.

இப்படி பிரபலமாக இருந்து வந்த நமது நடிகர் மோகன் வாழ்க்கையில் இடி விழுந்தது போல் ஒரு நடிகையின் பொய்யான தகவல் வெளிவந்தது. அதாவது அவர் கூறியது என்னவென்றால் நடிகர் மோகனை ஒரு நடிகை மிக ஆர்வமாக காதலித்து வந்தார்.ஆனால் நடிகர் மோகன் அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டார் இதனால் கடும் கோபம் கொண்ட அந்த நடிகை திடீரென நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் உள்ளது என புரளியை கிளப்பி விட்டார் இதனால் மோகனின் வாழ்க்கையே மாறிவிட்டது.அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் மோகன் அவதிப்பட்டார் ஆனால் தற்போது மருவத்தூர் வயதாகியும் நல்ல உடல் நலத்துடன் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தன்மீது குறை என்று கூறியது அனைத்தும் பொய் என்று நிரூபித்து உள்ளார்.

 இவருடைய சொந்த வாழ்க்கை பற்றி நிறைய குழப்பங்கள் நிலவி வருகின்றன.திருமணம் ஆகிவிட்டதா, குடும்பம் இருக்கிறதா மனைவி யார் என்று பல கேள்விகள் இருக்கின்றன.

நெடுங்காலமாக மோகனுக்கு திருமணமே ஆகவில்லை, அவர் சிங்கிளாகவே இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது ஆனால் 1987 ஆம் ஆண்டே பெங்களூரில் கௌரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும் இருப்பதாக பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் காணக் கிடக்கின்றன.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்ட போது, எனக்கு இருக்கும் பிரச்சினையால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நினைக்கிறேன், விரைவில் என் மகனின் திருமணம் நடக்கப் போகிறது, அப்போது நான் என் குடும்பத்தை வெளி உலகுக்குக் காட்டுவேன் என்று மோகன் குறிப்பிட்டதாகவும் செய்திகள் உலவின.

ஒருமுறை மோகன் இறந்துவிட்டதாக செய்தி பரவி, அதனால் அவருடைய ரசிகர்கள் மாலையும் கையுமாக அவருடைய வீட்டிற்கே சென்றிருக்கிறார்கள். நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கடுத்து தான் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்திருக்கிறார் மோகன்.

 

80களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மோகன். அவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் யோகி பாபு, குஷ்பு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் தற்போது வனிதா விஜயகுமார் இணைந்து இருக்கிறார். அவர் மோகன் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது கனவு நனவாகிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

மோகன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் டி-சர்டில் தான் இருக்கிறார். படத்தில் அவர் டெலிவரி வேலை செய்யும் ரோலில் தான் நடிக்கிறார் என தெரிகிறது.

No comments: