ரோகித் 47, கோலி 117, ஸ்ரேயாஸ்
ஐயர் 105 ஓட்டங்கள் எடுத்தனர். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 80, ராகுல் ஆட்டமிழக்காது
39 ஓட்டங்கள் எடுத்தனர்.
நியூஸில்லாந்து வீரர் மிட்செல்
134 , கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்கள்
எடுத்த பின்னர் இந்தியாவின் கை ஓங்கியது.க்சமி 7 விக்கெட்கள் எடுத்துமிரட்டினார். 48 . 5
ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த நியூஸிலாந்து 327 ஓட்டங்கள்
எடுத்தது
நியூஸிலாந்தின் சாதனையை உடைத்த இந்தியா.
மேற்கு இந்தியாவுக்கு எதிராக 2015 உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்து 6 விக்கெர்களை இழந்து 393 ஓட்டங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். இந்தியா 4 விக்கெற்களை இழந்து 397 ஒட்டங்கள் எடுத்து நியூஸிலாந்தின் சாதனையைத் தகர்த்தது.
50வது சதத்தை அடித்து ஒருநாள்
கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் உலக
சாதனையை உடைத்தார். சச்சின் 452 இன்னிங்ஸில் 49 சதங்கள் அடித்தார். விராட் கோலி 259 இன்னிங்சிலேயே 50 ஓவர் கிரிக்கெட்டில்
50 சதங்கள் அடித்தார்.
இந்த உலகக்
மொத்தம் 700* ஓட்டங்கள் அடித்து உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிகஒட்டங்கள்
அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை
உடைத்தார்.
2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் 673 ஓட்டங்கள் அடித்தார்.
ஒரு உலகக் கிணப் போட்டியில் அதிக முறை (8*) 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் (2003இல்),சாகிப் அல் ஹசன் (2019இல்) தலா 7 முறை 50+ ஓட்டங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்
கெயிலை முந்திய ரோஹித்
3 புதிய உலக சாதனை
5 ஓவர்கள் முடிவதற்குள் 3 சிக்சர்களை தெறிக்க விட்ட அவர் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 27 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2015 உலகக் கிண்ணப் போட்டியில்26 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய உலக சாதனையாகும்.
உலகக் கிண்ண வரலாற்றில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் , அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். றிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
தொடர்ச்சியாக இரண்டாவது சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர்
கடைசி லீக்
போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக
சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்துக்கு எதிராகவும் சதம் அடித்துள்ளார்.
67 பந்துகளில் அவர் சதத்தை எட்டினார்.
இதன் மூலம் ஒருநாள் உலகக்
கிண்ணத்தில் தொடர்ச்சியாக ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர்
என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்னதாக ரோஹித்
சர்மா (3) 2019 , ராகுல் டிராவிட் (2) 1999
சதமடித்திருந்தனர்.
ஒருநாள் உலகக்கிணத்தில் ஒரு சீசனில் நம்பர் 4 அல்லது
அதற்கு கீழே களமிறங்கியவர்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர்
படைத்துள்ளார்.
முழு பட்டியல்
511* - ஷ்ரேயாஸ் ஐயர்
(2023)
499 - ஸ்காட் ஸ்டைரிஸ்
(2007)
482 - ஏபி டி வில்லியர்ஸ்
(2015)
23 வருட காத்திருப்பு
2000 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல், 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல், 2021 சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய தோல்விகளை தொடர்ந்து 23 வருடங்கள் காத்திருந்த இந்தியா ஐசிசி நாக் அவுட் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து சரித்திரம் படைத்துள்ளது.
ஷமி அள்ளிய விக்கெற்கள்
உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது வீரர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார். இவருக்கு முன் கிளென் மெக்ராத் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன் 2வது இடத்திலும், 59 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 3வது இடத்திலும், 56 விக்கெட்டுகளுடன் மலிங்கா 4வது இடத்திலும், 55 விக்கெட்டுகளுடன் வாசிம் அக்ரம் 5வது இடத்திலும், 53 விக்கெட்டுகளுடன் போல்ட் 6வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா.. விக்கெட் வேட்டையாடிய ஷமி.. 4வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறி சாதனை! அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையையும் படைத்துள்ளார். இவருக்கு முன் மிட்செல் ஸ்டார்க் 19 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரின் சாதனையை முகமது ஷமி முறியடித்துள்ளார். அதேபோல் உலககோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. மிட்செல் ஸ்டார்க் 941 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், முகமது ஷமி 795 பந்துகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
No comments:
Post a Comment