Saturday, July 7, 2018

உருகுவேயின் காப்பரணை உடைத்தது பிரான்ஸ்



ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோராட் ஸ்ரேடியத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டகாலிறுதிப் போட்டியில் உருகுவேயை எதிர்த்து விளையாடிய பிரான்ஸ் 2-0  என்ர கோல்கனக்கில் வெற்றி பெற்று 12  வருடங்களின் பின்னர் அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

இந்த உலகக்கிண்ணப் போட்டியில் தோல்வியடையாத உருகுவேயின் பலம் பின்கள வீரர்கள்தான். கப்டன்  டியாஜோ கோடின், ஜோஸ் ஜிமனெஸ், மார்டின் காசரெஸ், டியாஜோ லக்சால்ட் ஆகியோரின் பலமான தடுப்பரனைத் தாண்டிச் சென்றாலும் கோல் கீப்பர் பெர்னான்டோ முஸ்லீரா வின் கைகளில் இருந்து பந்து தப்ப முடியாது.


போத்துகலுக்கு எதிரான போட்டியில் போது தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு போட்டியில் இருந்து வெளிய்ந்ந்றிய நட்சத்திர வீரரான கவானி விளையாடவில்லை அவருக்குப் பதிலாக கிறிஸ்டியன் ஸ்டுவானி களம் இறங்கினார். சுவாரஸ், லூக்காஸ் டொரிரா, ஜோஸ் கிம்மென்ஸ் , நஹிடன் நந்தேஸ் ஆகியோர் முன் களத்தில் திறமையாக செயற்படுகின்றனர்.

கிரீஸ்மேன்,லுகாஸ், ஹெர்ணான்டஸ்,ரபேல் வாரன் , 19 வயதான  இளம் புயல் கிளியான் மாப்பே  கோல்கீப்பர்  மையப்பகுதியில் ஹியூகோ லோரிஸ் ஆகியோர்  பிரான்ஸுக்கு பலமாக  உள்ளனர்.  

போட்டி ஆரம்பிப்பதற்கான விசில் ஊதப்பட்ட ஐந்தாவ்து நிமிடத்தில் உருகுவே வீரர் அடித்த பந்து கோல் கம்பட்துக்கு மேலால் சென்றது

.
  7-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மேனிடம் பந்தைப் பெற்ற லூக்காஸ் ஹெர்னாண்டஸ் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு கு வலது புறமாகச் சென்றது.

 11-வது நிமிடத்தில் கீரிஸ்மேனின்  தூக்கி அடித்த பந்தை ரபேல்  வாரன் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். அதுவும்  வெளியே  போனது. நிமிடத்துக்கு  நிமிடம் பந்து இரண்டு கோல்கம்பங்களையும் உரசியபடி சென்றது.

 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது.   கீரிஸ்மேன் அடிக்கத் தயாரானார். இரண்டு அணி ரசிகர்களும் பதற்றத்துடன் நட்ப்பதை அரிய ஆர்வமாக இருந்தனர். பந்தை நோக்கி ஓடிச்சென்ற கிரீஸ்மேன் திடீரென நின்ரார் அப்போது டிபண்ட் பொக்ஸினுள் நின்ற வீரர்கள் சிதறினர். இடது காலால் கிரீஸ்மேன் அடித்த பந்து சுழன்றபடி உயரே சென்றது. உயரமாக வந்த பந்தை நோக்கி அனைவரும் எம்பினர். ரபேல் வானரின் தலயில் பட்ட பந்து கொல்ல் வலையில் தஞ்சமடைந்தது. 1=0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.


61 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பிரீகிக் கிடைத்தது. கிரீஸ் மேன் பிரீகிக்கை அடித்தார். கோல் கம்பத்தை விட்டு வெகு தூரம் முன்னே நின்ற கோல்கீப்பர் முஸ்லரா அதனி உயரே தட்டி விட முயன்றார். அவரின் கையைப்  பரித்துக்கொண்டு சென்ற பந்து கோலாகியது. கோல்கீப்பரின் அஜாக்கிரதையால் இரண்டாவது கோல் பெறப்பட்டது. 2-0 என  பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

கோல் அடிப்பதற்காக உருகுவே செய்த முயற்சிகள் அனைத்தும் விரயமாகின. 2- 0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரை  இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

உலகக்கிண்ந்த் தொடரில் ஆறாவது முறயாக அரை இறுதிக்குள் பிரான்ஸ் நுழைந்துள்ளது. முன்னதாக  1958 ஆம் ஆண்டு மூன்ராமிடம்,1982 ஆம் ஆண்டு நான்காவது இடம், 1986 ஆம் ஆண்டு மூன்ராவது இடம், 1998 ஆம் ஆண்டு சம்பியன்  2006 ஆம் ஆண்டு  இறுதிப்போட்டி.

  34வது நிமிடத்தில் உருகுவேயின் நான்டெஸ் 'ஜெர்சியை' கிழித்து 'பவுல்' செய்த பிரான்சின் லுகாஸ் ஹெர்ணான்டஸுக்கு மஞள் அட்டை காண்பிக்கப்பட்டது.


  67வது நிமிடத்தில் உருகுவேயின் கிறிஸ்டியன் ரோட்ரிக்ஸ் கை லேசாக பட்டதில் பிரான்சின் மபே மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதற்கு உருகுவே அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்த நடுவர்  ரோட்ரிக்ஸ், மப்பே ஆகிய இருவருக்கும் மஞ்சள் அட்டை கான்பித்தார்.வுக்கு 'எல்லோ கார்டு' வழங்கினார்.

  3 கோலடித்துள்ள கிரீஸ்மேன் 'கோல்டன் ஷூ' விருதை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.  


Thursday, July 5, 2018

காலிறுதிப் போட்டியில் கலக்கப்போகும் நாடுகள்


 உலகக்கிண்ணப் போட்டியின் நொக் அவுட் சுற்றுகள் முடியடைந்து காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்த நாடுகள் வெளியேறி புதியவை காலிறுதியில் மோதுகின்றன. 2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் விளையாடிய பிறேஸில்,பிரான்ஸ்,பெல்ஜியமாகியவை இம்முறையும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

  . 21 ஆவது  ஃபிபா உலகக்கிண்ணப் போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. இவை தலா 4 நாடுகள் என  8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஜூன் 14 ஆம் திகதி துவங்கிய பிரிவு சுற்று லீக் ஆட்டங்கள் 28 ஆம் திகதியோடு முடிந்தன.

 ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. நொக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30 ஆம் திகதி ஆரம்பமாகி  ஜூலை 3 ஆம் திகதி வரை நடந்தன. இதில் வெற்றி பெற்று பிரான்ஸ், உருகுவே,  பிரேசில்,  பெல்ஜியம்,  ரஷ்யா,  குரேஷியா,  சுவீடன்,  இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு நுழைந்துள்ளன. முன்னாள் சாம்பியன் இத்தாலி உலகக்கிண்ணப் ஓட்டியில்விளையாடத் தகுதி பெறவில்லை.
. நடப்பு சாம்பியன் ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. சம்பியனாகும் என  கருதப்பட்ட முன்னாள்  சம்பியன்களான ஸ்பெயின்,ஆர்ஜென்ரீனாவுடன் போத்துகலும் நொக் அவுட்டில் வெளியேறின. முன்னாள் சம்பியன்களான பிரான்ஸ், உருகுவே, பிறேஸில், இங்கிலாந்து ஆகியவை காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தற்போது காலிறுதியில் உள்ள பெல்ஜியம், ரஷ்யா,குரேஷியா ஆகியவை இதுவரை  விளையாடியதில்லை. . முதல் முறையாக பைனல் நுழைவதற்கான வாய்ப்பு இந்த அணிகளுக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்து,ஸ்வீடன், உருகுவே ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில்  இறுதிப்போட்டியில் விளையாடியதில்லை. . அதனால், கடந்த 50 ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடாத ஒரு அணி  இந்த முறை இறுதிப் போட்டியில்  விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அல்லது ஒரு புதிய அணி முதல் முறையாக சம்பியனாகும் நிலை ஏற்பட்டுள்ளது..
காலிறுதியில் விளையாடும் பிரேசில், பிரான்ஸ் ஆகியவை  மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்குள் சம்பியனாகின.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் உருகுவேயை எதிர்த்து பிரான்ஸ் விளையாடுகிறது. இந்தப் போட்டியின் முடிவில் முன்னாள் சம்பியன் ஒன்று வெளியேறிவிடும். இரண்டாவது போட்டியில் பிறேஸிலை எதிர்த்து பெல்ஜியம் விளையாடுகிறது. பிறேஸில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதியானால் இரண்டு முன்னள் சம்பியன்களில் ஒன்று வெளியேறிவிடும். மாறாக பிறேஸிலை பெஜியம் வென்றால் சிலவேளை இறுதிப் போட்டியில் பெல்ஜியம் விலையாடலாம்
நானை நடைபெறும்  முதலாவது காலிறுதியில் குரோஷியாவும் ரஷ்யாவும் மோதுகின்றன.  இரண்டாவ்து காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும்  சுவீடனும் மோதுகின்றன. இவறில் இங்கிலாந்து மட்டுமே  இறுதிப் போட்டியில் விளையாடியது. காலிறுதி அல்லது அரை இறுதியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் புதிய நாடு ஒன்றுஇறுதிப் போட்டியில் விளையாடி சாதனை செய்யும்.
 காலி இறுதி  அட்டவனை.
 போட்டி எண் 57. ஜூலை 6 - இரவு 7.30 - நிஷ்னி நோவ்கோராட் : உருகுவே - பிரான்ஸ்
போட்டி எண் 58. ஜூலை 6 - இரவு 11.30 - கசான் : பிறேஸில் - பெல்ஜியம்
போட்டி எண் 59. ஜூலை 7 - இரவு 11.30 - சோச்சி : ரஷ்யா - குரேஷியா
போட்டி எண் 60 ஜூலை 7 - இரவு 7.30 - சமாரா : ஸ்வீடன் - இங்கிலாந்து



Wednesday, July 4, 2018

நம்முடன் பயணம் செய்பவர்களை அடையாளம் காட்டும் “அல்வாய்ச் சண்டியன்”


இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து விட்டது. பிரச்சினைகள் இல்லாத நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னரான சமூக நடைமுறைகளை “அல்வாய்ச் சண்டியன்” என்ற சிறுகதைத் தொகுதி மூலம் பரணீதரன் வெளிக்கொணர்ந்துள்ளார்.

எழுத்தாளர்,ஜீவநதி சஞ்சிகை ஆசிரியர், தொகுப்பாசிரியர் , வெளியீட்டாளர் ,உளவள ஆலோசகர்  எனப் பன்முக ஆளுமைமிக்கவர் க. பரணீதரன். பரணீதரனின் தார்மீகக் கோபம் அவரது கதைகளினூடாக வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது. நம்முடன் பயணிக்கும்  மனிதர்களின் உண்மையான முகங்களை நாம் அடையாளம் காண்பதில்லை. “அல்வாய்ச் சண்டியன்” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அவர்களை நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

யுத்தம் தந்த ஏக்கத்துடனும்,வடுக்களுடனும் வாழ்பவர்களை பரணீதரன் அடையாளம் காட்டுகிறார். வறுமை, புலம் பெயர் வாழ்வு, ஏமாற்றம்,காதல்,  தீண்டாமை, உளவியலால் ஏற்படும் தாக்கம், ஒடுக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை முறை என்பனவற்றை “ அல்வாய்ச் சண்டியன்” எனும் தொகுப்பில் உள்ள கதைகளின் மூலம்  பகிரங்கப்படுத்தப்படுகிறது.

 வங்கி முகாமையாளரான  குடிகாரக் கணவனைப் பிரிந்து வாழும் ஆசிரியையின்  வாழ்க்கையை “ படமுடியாது இனித் துயரம்”  சொல்கிறது. இரண்டு பிள்ளைகளின் இழப்புடன் இருக்கையில்  மூன்றாவது பெண்பிள்ளை போராடப் போகிறது. இறுதி யுத்தத்தின் பின்னர் அப்பிள்ளையின்  நிலை என்னவென்று தெரியவில்லை. மகளைத் தேடி அலையும் பெண்ணின் மன ஓட்டத்தைச் சொல்லும் கதை.


பிணத்தை எரிக்கும் ஒருவனின் வாழ்வின் ஏற்படும் சோதனைகளை “வெட்டியான்கதை கூறுகிறது.  மரண ஊர்வலத்துடன் சுடலைக்குச் செல்பவர்கள் பலதையும் பத்தையும் கதைப்பார்கள். இறுதிக் கிரியை முடிந்து திரும்பும்போது பிணத்தை எரிப்பவர்களுக்கு இண்டைக்கு கொண்டாட்டம் எனச் சொல்வார்கள். “வெட்டியான் கதையைப் படித்தபின் அவர்கள்மீது பரிதாபம் ஏற்படும். ஆய்வுமையங்களைப் பற்றிய புதியதொரு கோணத்தை “நினைந்ததுமற்று நினையாமையுமற்றுவெளிப்படுத்துகிறது. யாருமே எளிதில் தொடமுடியாத பக்கத்தை பரணீதரன் தொட்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு புதியதொரு விடியலைப் பெற்றுத்தரப் போராடியவர்கள், ஒருகாலத்தில் மறைவாக இயங்கினார்கள். பின்னர் மக்கள் மத்தியில் தம்மை அடையாளம் காட்டிக்கொண்டு மிடுக்காகப் பவனி வந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர் மிடுக்கிழந்தவர்களாகத் தமது அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் வாழ்வதற்காகப் போராடுவதை “மீளப்பிறந்தவர்கள் கதையில் பதிவு செய்துள்ளார் பரணீதரன்.  காணாமல் போவதும் இனம் தெரியாதவர்களினால் கொல்லப்படுவதும் தொடர்ந்து கொண்டிருப்பதை “எழுதிச் செல்லும் விதியின் கைவெளிப்படுத்துகிறது.

“ஏக்கம்”,வேர் கொண்ட உறவுகள்”, :மானுடம் வென்றதம்மாஆகிய மூன்று கதைகளும் புலம் பெயர் நாட்டில் இருந்து தாய் நாட்டுக்குத் திரும்பியவர்களைப் பற்றிய கதைகள். மூன்று கதைகளும்  மூன்று உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. பல வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய தம்பி, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றதை நினைத்து வருந்தும் அண்ணனின் மனத் துயரத்தை “ஏக்கம்வெளிப்படுத்துகிறது.  வயது போன நிலையில் இனி தம்பியைக்  காணமுடியுமா என்ற அண்ணனின் ஏக்கம் அனைவருக்கும் பொதுவானதுதான்.

பத்து வருடங்களின் பின்னர் தாயகத்துக்கு வரும் தவராசா,முறிகண்டியில் தன்னுடன் படித்த சிவகுமாரைப்  பிச்சைக்காரனாகச் சந்திக்கிறார். தன்னுடன் வருமாறு சிவராசா அழக்க, சிவகுமார் சொல்லும் காரணம் மண்ணின் மகத்துவத்தை எடுத்தியம்புகிறது. கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் பணமாகவோ பொருளாகவோ கொடுக்காது அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை பரணீதரன் சுட்டிக்காட்டுகிறார். சாதியின் காரணமாக முறிக்கப்பட்ட காதலை “மானுடம் வென்றதம்மாதொட்டுக்காட்டுகிறது.
“இடமாற்றம்” ”அல்வாய்ச் சண்டியன்ஆகிய இரு கதைகளும் உளவியல் ரீதியாகப் பாதிப்படையும் மன ஓட்டங்களைக் காட்சிப்படுத்துகின்றன. ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் மாணவர்கள் பாதிப்படைவதையும் தப்புச் செய்யும் மாணவர்களை நல்வழி காட்டும் ஆசிரியர்களையும் இக்கதைகளினூடு சந்திக்கலாம். அல்வாய்ச் சண்டியன் யார்? பிறந்த உடனே அவன் செய்த சண்டித்தனம் என்ன? அவன் எப்படிப்பட்ட மிரட்டல்களை விடுத்தான்? எத்தனை பேருக்கு அடித்தான்? அவனது மிரட்டலில் பணிந்தவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலைப் பரணீதரன் தந்துள்ளார்.

பரணீதரனின் கதைத் தலைப்புகள் வித்தியாசமானவை. கதையை நகர்த்தும் பாங்கும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் களமும் வாசிக்கும் ஆவலத் தூண்டுவதாக உள்ளன.

அம்மாவுக்கு சித்திரைப் புது வருஷம், தீபாவளி, தைப்பொங்கல் கொண்டாட்டம் நான்கு ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறைதான்வரும்...பாவம் அம்மா...அவவை நினைத்தால் இப்பவும் எனது கண்களில் நீர் உடைப்பெடுக்கும்....... வறுமையின் வெளிப்பாடு.
என் காதல் தோற்றிருக்கலாம்.... ஆனால்மனிதம் சாகவில்லை....மனிதம் வென்று விட்டது......மனதினில் எந்தசஞ்சலமும் இன்றி என் மிதி வண்டியை உழக்குகிறேன்.....எனக்காகவே வாழ்ந்த என் மனைவியின் முகம் நெஞ்சமெல்லம் நிறைந்திருக்கிறது.மானுடத்தின் வெற்றி.

இப்போதும் எனக்கு கந்தசாமி சேரின் நினைவே வருகிறது. அரைவிட நான் என்ன பெரிய கவுன்சிலர் என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்.மானசீகமாக என நெஞ்சம் கந்தசாமி சேரை ஆராதிக்கிறது. ஆசிரியருக்கு மரியாதை.   பரணீதரனின் மனதில் இருந்து வெளிப்பட்ட அக் கருத்துகள் சிந்தனையைக் கிளறியுள்ளன.
வர்மா
காலைக்கதிர்
ஜூன் 30 

பெனால்ரி என்றால் அச்சப்படும் இங்கிலாந்து வெற்றி பெற்று சாதித்தது.


ரஷ்யாவின் ஸ்பாக்ரக் ஸ்ரேடியத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண நொக் அவுட் போட்டியில் கொலம்பியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து பெனால்ரியில் வெற்றி பெற்று காலிறுப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

இரண்டு அணி வீரர்களும் மிகவும் மூர்க்கத்தனமாக மோதினர். வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்ற ஒரே ஒரு குறுக்கோளுடன் மோதியதால் ஃபவுலுக்குப் பஞ்சமில்லாதிருந்தது. கொலம்பிய வீரர்கள் 14 முறையும் இங்கிலாந்து வீரர்கள் 16 முறையும் கோல் அடிக்க முயன்றனர். கொலம்பிய கோல்கீப்பர் மூன்று முறையும் இங்கிலாந்து கோல்கீப்பர் ஐந்து முறையும்  பந்தைத் தடுத்தனர். கோல் எதுவும் இல்லாமல் முதல் பாதி முடிந்தது.

இரண்டாவது பாதி ஆரம்பித்த 57 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்தது.  இங்கிலாந்துக்கு கோனர் வாய்ப்பு கிடைத்தது.அப்போது கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்சேஸ்,இங்கிலாந்தின் ஹரி கேனை முறையற்ற வகையில் தடுத்தபோது நடுவர் பெனால்ரி கொடுத்தார். இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஹரி கேன் அதனை கோலாக்கினார். தங்கக் காலணிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்   ஹரி கேனின் 6 ஆவது கோலாகும்.  இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது. பதில் கோல் அடித்து சமப்படுத்த கொலம்பிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

90 நிமிடம் முடிந்து மேலதிக நேரம்  போட்டி தொடர்ந்தது.இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. கொலம்பிய ரசிகர்கள் கண்ணீருடன் சோகமாக இருந்தனர். 93 ஆவது  நிமிடத்தில் கொலம்பிய ரசிகர்கள் துள்ளிக் குதித்து உற்சாகமடைந்தனர்.

93 ஆவது நிமிடத்தில் 25 அடி தூரத்திலிருந்து  கொலம்பிய வீரர் யூரிபி அடித்த   ஷாட் வலது புறம் கோல் மேல் மூலையை நோக்கி உள்ளுக்குள் சென்று கொண்டிருந்த போது இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு அருமையாக எம்பித் தட்டி விட்டார். இதன் விளைவாக கொலம்பியாவுக்குக் கார்னர் வாய்ப்புக் கிடைத்தது கொலம்பிய வீரர் மினா வலுவாக பந்தை முட்ட பந்து தரையில் பட்டு ட்ரிப்பியருக்கும் மேல் எழும்பி கோலுக்குள் சென்றது.  கொலம்பியா அடித்த கோலால்   1-1 என போட்டி சமமானது.

கொலம்பிய ரசிகர்கள் உற்சாகமானார்கள். வெற்றிக்கொண்டாட்டத்தில்  மகிழ்ந்திருந்த இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடைசி விசில் ஊதும் வரை சந்தோசம் நீடிக்காது வெற்றி பறிக்கப்படலாம் என்பதை இந்தப் போட்டி மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தியது. மேலதிகமாக வழங்கப்பட்ட  30 நிமிட நேரத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாமையால்  இரண்டு அணிகளுக்கும் தலா ஐந்து பெனால்ரி வழங்கப்பட்டது.

பெனால்ரி என்றால் இங்கிலாந்துக்கு தொடை நடுக்கம். 1990, 1998, 206 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் பெனால்ரியில் தோல்வியடைந்து இங்கிலாந்து வெளியேறியது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் கலக்கமடைந்தனர். மெக்ஸிகோ ரசிகர்கள் உற்சாகமாகினர்.
1 கொலம்பியாவின் ஃபால்கோ முதல் பெனால்டியை அடித்தார். கோல் 1-0 
1 இங்கிலாந்தின் ஹரி கேன் அடுத்து அடித்தார். கோல் 1-1

2   கொலம்பியாவின் குவாட்ராடோ கோல் அடிக்க 2-1

2 இங்கிலாந்து  ராஷ்போர்ட் அடித்தது கோலானது. 2-2.

3 கொலம்பியாவின் மியூரியல் கோலுக்குள் செலுத்தினார்   3-2.

3 இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சன் அடித்த பக்கவாட்டு பாத உதையை ஆஸ்பினோ இடது புறம் பாய்ந்து தட்டிவிட கொலம்பியா 3- இங்கிலாந்து 2  கொலம்பியா முன்னிலை பெற்றது. யூரோ கிண்ணப் போட்டியிலும் இவர் பெனால்ரியை கோலாக்கவில்லை. 

4  கொலம்பியாவின் யூரிபி அடித்த பந்து மேலே கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.  கொலம்பியா 3- இங்கிலாந்து 2.

4 இங்கிலாந்தின் டிரிப்பியர் அடித்த பந்து கோலானது.   3-3 இங்கிலாந்து ரசிகர்கள் திருப்தியடைந்தனர்.

5 கொலம்பியாவின் கார்லோஸ் பாக்கா அடித்த பந்தை  இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு தடுக்க 3-3. எனும் சமனிலை தொடர்ந்தது.

5 இங்கிலாந்தின் வெற்ரிக்காக எரிக் டயரின்  காலை அனைவரும் உற்று நோக்கினர்.   அது கோலாக வேண்டும் என இங்கிலாந்து ரசிகர்காலௌம் கோல் போகக்கூடாது என கொலம்பிய வீரர்களும் எதிர்பார்த்தனர் இங்கிலாந்தின் எரிக் டயர் தாழ்வாக கோல் நோக்கி அடிக்க kool kiippar ஆஸ்பினோ வலது புறம் பாய்ந்தார். அடித்தார் பந்து அவர் விரல்களில் பட்டு வலையில் தஞ்சமடைந்தது 4-3 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இங்கிலாந்து   பெனால்ரியில் வெற்றி பெற்றதை அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
 மெக்ஸிகோ 23 ஃபவூல் செய்ததது. 6 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இங்கிலாந்து 13 ஃபவூல் செய்ததது.2 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.



 பெக்கம்,ரூனி வரிசையில் இந்தத் தொடரில் 7  கோல் அடித்த ஹரி கேன்  இங்கிலாந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். காலிறுதிப் போட்டியில் சுவீடனுடன் இங்கிலாந்து மோதுகிறது. சுவீடனைச் சந்திக்கிறது.,

1966 ஆம் ஆண்டு சம்பியனான இங்கிலாந்து,இதுவரை நடைபெற்ற  உலகக்கிண்ண    நொக் அவுட் சுற்றுகளில் மிகவும் வலுவான ஐந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.   1970, 1990,2010,  ஜெர்மனியிடம்  2006 ஆம் ஆண்டு போத்துகலிடமும்  1962,  2002, ஆம் ஆண்டுகளில் பிறேஸிலிடமும் 1986, 1998 ஆம் ஆண்டுகளில் ஆஜென்ரீனாவிடமும்.   1954 ஆம் ஆண்டு உருகுவேயிடமும்  நொக் அவுட் சுற்றில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

Tuesday, July 3, 2018

பெல்ஜியத்தை மிரட்டியது ஜப்பான்


உலகக்கிண்ண நொக் அவுட் சுற்றில் ரஷ்யாவின் ரோஸ்டோவ்  அன்ரான் நகரில் பெல்ஜியத்துக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய ஜப்பான் 3-2 என்ற கோல்கணக்கில் பரிதாபமாகத்  தோல்வியடைந்தது
ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த பெல்ஜியம் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. பனாமாவுடன் 3-0, துனீஷியாவுடன் 5-2, இங்கிலாந்துடன் 1-0   என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது.
  எச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஜப்பான் கொலம்பியாவை 2-1 என வென்றது. செனகலுடன் 2-2 என சமப்படுத்தியது.. போலந்திடம் 1-0 என தோல்வியடைந்தது. கடைசியில் ஃபேர் பிளே அடிப்படையில் செனகலை பின்னுக்கு தள்ளி முன்னேறியது செனகலும் ஜப்பானும் ஒரு போட்டியில் வெற்றிபெற்று, ஒரு  போட்டியில் தோல்வியடிஅந்து, ஒரு போட்டியைச் சமப்படுத்தின. அடித்த கோல்கள்,வங்கிய கோல்கள்,  புள்ளிகள் அனைத்தும் சமமாக இருந்தமையினால் குரந்த மஞ்சள் அட்டைகளைப் பெற்ற ஜப்பான் ஃபேர் பிளே அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. உலகக்கிண்ண வரலாற்றில் ஃபேர் பிளேயில் தகுதி பெற்ற ஒரே ஒரு நாடு ஜப்பான்தான்

ஜப்பானைவிட பலம்வாய்ந்த  ஐரோப்பிய அணியான பெல்ஜியம் இலகுவாக  வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் இரண்டு கோல்கள் அடித்ஹ்டு முன்னிலை பெற்ற ஜப்பான் கடசி நிமிடம் வரை பெல்ஜியத்தை மிரட்டியது.
முதல் பாதி நேரம் முடியும் வரை கோல் அடிக்கும் முயற்சிகள் எஅவையும் வெற்றி பெறவில்லை.. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார். 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது. ஜப்பன் ரசிகர்கள் உற்சாகமாகினர். பெல்ஜிய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன்  69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.  அதைத்தொடர்ந்து    74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு அணிவீரர்களும் எதிரணியின் கோல்கம்பத்தை முற்றுகையிட்டனர்.

காயம்,நேரவியரம் ஆகியவற்றுக்காக கூடுதலாக நான்கு நிமிடம் வழங்கப்பட்டது.அந்த சந்தர்ப்பத்தில்பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது தோல்வியடைந்தாலும் இரண்டாவது சுற்றுவரை முன்னேறிய மகிழ்ச்சியுடன் ஜப்பான் வீரர்கள் மைஅதானத்தை விட்டு வெளியேறினர்.

பிறேஸில் வீரர்களுடன் தனி ஒருவனாகப் போராடிய கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா



ரஷ்யாவில் நடைபெற்ற உலககிண்ண நொக் அவுட் சுற்றில் மெக்ஸிகோவை எதிர்த்து விளையாடிய பிறேஸில் புதிய சாதனைகளுடன் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. மெக்ஸிக்கோவுக்கு எதிராக பிறேஸில் தோல்வியடைந்ததில்லை.   மூன்று போட்டிகளில்  வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.  

51 ஆவது நிமிடத்தில்  நெய்மர்  முதல் கோல் அடித்தபோது பிறேஸிலின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் நம்பினர் பிறேஸிலுக்காக முதலாவது கோலை நெய்மர் அடித்தால் வெற்ரி நிச்சயம் என்பது வரலாறு. இதனால் வீரர்கலும் ரசிகர்களும் நம்ப்பிக்கையுடன்  இருந்தனர்.  2-0  என்ற கோல்கணக்கில்  பிறேஸில்  வெற்றி பெற்றது.

ஃபிபா உலகக்கிண்ண காலிறுதிக்கு ஐந்து முறை சாம்பியனான பிறேஸில் 16 ஆவது முறையாக நுழைந்து சாதனை புரிந்துள்ளது. ஜேர்மனி மட்டுமே 16 முறை காலிறுதிக்கு நுழைந்துள்ளது. . தற்போது அதை பிரேசில் சமன் செய்துள்ளது.  இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும்  பங்கேற்றுள்ள ஒரேஒரு நாடு பிறேஸில். ஜேர்மனி 4 முறை சம்பியனாகியது.  பிரேசில் 5 முறை வெற்றிக் கிண்ணத்தை  முத்தமிட்டது.

பிஒறேஸீலுக்கு எதிரான போட்டியில் மெக்ஸிகோ தோல்வியடைந்தாலும், கடுமையாகப் போராடியது. பிறேஸீல் வீரர்களின் தாக்குதல்களைச் சமாளித்து கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா இரண்டு கோல்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். கோல்கம்பத்தை நோக்கி எட்டு முறை பிறேஸில் வீரர்கள் பந்தை அடித்தனர். சிலவற்றைப் பிடித்து சிலவற்றைத் தட்டி விட்டு அதிக கோல்கள் பெறாமல் காப்பாற்றினார் கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா. இந்த உலகக்கிண்ணப் போட்டியில்    ஜேர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 9 கோல்களை தடுத்து நிறுத்திய கீப்பர் கிலர்மோ ஓச்சா  20 கோல்களைத்  தடுத்துள்ளார். உலகக்கிண்ண வரலாற்றில் 7 ஆவது முறையாக நொக் அவுட் சுற்றுடன் மெக்ஸிகோவின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது.

 5, 15, 26, 29, 32, 52, 64, 67,69 ஆவது நிமிடங்களில் பிறேஸில் வீரர்கள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளை மெக்ஸிகோவின் கோல் கீப்பர் அபாரமாகத் தடுத்தார். இவற்றில் சில பந்துகள் கோல் கம்பங்களை உரசிச் சென்றது. முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவுற்றது.

இரண்டாவது பாதியில் 51வது நிமிடம் வில்லியன் அடித்த பந்து கோல் கீப்பரை தாண்டி சென்றது. இதை அருகில் இருந்த ஜீசஸ் தவற விட, வாய்ப்புக்காக காத்திருந்த நெய்மர் பந்தை வலைக்குள் தள்ளி கோல் அடித்தார். பிறேஸீல் 1-0 என முன்னிலை பெற்றது. நெய்மர் கோல் அடித்த போட்டிகளில் பிரேசில் தோற்றது இல்லை என்பதால்இ சக வீரர்கள் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டனர்.

  71வது நிமிடம் மெக்சிகோவின் லாயுன் நெய்மரை 'பவுல்' செய்ததால் நெய்மர் வலியால் துடித்தார். இதனால் 2014 தொடரைப் போல நெய்மர் பாதியில் வெ ளியேறி விடுவாரோ என ரசிகர்கள் பயந்தனர். நல்லவேளையாக சிகிச்சைக்குப் பின் மீண்டும் களம் புகுந்தார்
86வது நிமிடத்தில் பிலிப் கூட்டினியோ வெளியேற அவருக்குப் பதிலாக   ஃபர்மினோ களமிறங்கினார்.. போட்டியின் 88வது நிமிடம் மின்னல் வேகத்தில் பந்தை கொண்டு சென்ற நெய்மர், சக வீரர் பெர்மினோவிடம் 'பாஸ்' செய்தார். இதை அவர் அப்படியே கோலாக மாற்ற  பிரேசில் வெற்றி (2-0) உறுதியானது.  

கடைசியாக மோதிய ஐந்து உலககிண்ணத் தொடரில் மெக்ஸிகோவுக்கு பிறேஸில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுத்தது இல்லை. அதேநேரம் 13 கோல் அடித்துள்ளனர்.

உலகக்கிண்ந்த் தொடரில் அதிக கோல் அடித்த ஜேர்மனியை  முந்தி  முதலிடம் பிடித்தது பிறேஸில். ஜேர்மனி 226கோல்கள் அடித்தது பிறேஸில் இதுவரை 228 கோல்கள் அடித்ஹ்டுள்ளது.
  மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்த நெய்மர்  உலகக்கிண்ணப் போட்டியில் 38 முறை முயற்சி செய்து  6வது கோல் பதிவு செய்தார். முன்னாள் வீரர்கள் ராபர்டோ ரிவலினோ (6), ரெபேட்டோ (6) .ஆகியோரின் எண்ணிக்கையை சமப்படுத்ஹ்டினார். எண்ணிக்கையை சமன் செய்தார்.

அர்ஜென்டினாவின் மெஸ்சி 67, போர்ச்சுகலின் ரொனால்டோ 74 முயற்சிகளில் தான்  முதல் 6 கோல்கள் அடித்தனர்.

பிறேஸில்  அணிக்காக கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் நெய்மர் 20 கோல்கள் அடித்தார். 11 கோல்கள் அடிக்க சக வீரர்களுக்கு உதவியாக இருந்தார். ஒட்டுமொத்தமாக 89 போட்டியில் 57 கோல்கள் அடித்த நெய்மர், 35 கோல் அடிக்க உதவினார்.
பிறேஸிலின்  நட்சத்திர வீரர் நெய்மரை  'பவுல்' செய்வதில் எதிரணிகள் அதிக அக்கறை காட்டுகின்றன. சமீபத்தில் தான் வலது கால் காயத்தில் இருந்து மீண்டார். தற்போது    4 போட்டிகளில்  விளையாடிய நெய்மரை 21 முறை இடித்து தள்ளினர். 

Monday, July 2, 2018

குரோஷியாவின் வெற்றிக் கொண்டாட்டம்


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் நொக் அவுட் சுற்றில் குரோஷிய கோல்கீப்பர் சுபாசிச்தான் பெனால்ரிகளைத் தடுத்தாட்கொண்டமையால் 3-2 என்ற கோல்கனக்கில் வெற்றி பெற்ற குரோஷியா கால் இறுதிப்  போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போட்டி ஆரம்பிது  நான்கு நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி  சூடு பிடித்தது
.
டென்மார்க்குக்காக மத்தியாஸ் ஸாங்கா ஜோர்கென்சன்  1 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, 4 ஆவது நிமிடத்தில் குரேஷிய வீரர் மரியோ மண்ட்சூகிக் பதிலடி கொடுத்துச் சமன் செய்தார். பரபரத் தொடக்கம் இறுதி வரைக் காக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் கோல் அடித்து  முன்னிலை பெறுவதற்கு முயற்சித்ததால் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவில்லை.  நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் வெற்றிக் கோல் அடிக்கப்படாமையால் மேலதிகமாக 30  நிமிடம் வழங்கப்பட்டது.

  30 நிமிட நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரோஷியாவுக்கு பெனால்ரி வாய்ப்பு கிடைத்தது. மோட்ரிச்  அடித்த பந்து டென்மார்க் கோல் கீப்பர் காஸ்பர் ஷ்மீச்செலுக்கு சற்று நெருக்கமாகச் சென்றதால் தடுக்கப்பட்டது.  . யூரோ 2008-ல் காலிறுதியில் துருக்கியிடம் பெனால்டியில்தான் தோற்றது குரேஷியா.மீண்டும் அதே போன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. மேலதிக 30 நிமிடத்திலும் வெற்றிக் கோல் அடிக்கப்படாமையால்   இரண்டு அணிகளுக்கும் தலா ஐந்து பெனால்ரி வழங்கப்பட்டது.

டென்மார்க் அடித்த முதல் பெனால்ரியை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த பெனால்ரியையும்டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக் மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.

டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன.
டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார்.  குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது.

டென்மாக் வீரர்களான கிறிஸ்டியன் எரிக்சன், போல் லாஸோஷீனி, நிகோலய் ஜோர்ஜ்கென்சன் ஆகியோர் அடித்த பெனால்ரிகளைகுரோஷிய கோல் கீப்பர் டானியல் சுபாசிச் தடுத்தார்.
குரேஷியாவின் மிலன் படேலி, ஜோஸிப் பிவாரிச் ஆகியோரின்  பெனால்ரிகளை டென்மாக் கோல்கீப்பர் ஷ்மெய்ச்சல் பிவாரிச் தடுத்தார்.
டென்மாக்கின் ஐந்தாவது பெனால்ரியும் தடுக்கப்பட்டது. 2-2 என்ற சமனிலை நீடித்தது.

  குரேஷியாவின் இவான்  ஐந்தாவ்து பெனாரிடியை அடிக்கத் தயாரானபோது பதற்றம் அதிகரித்தது.அது கோலானதும் கொரூஷியார்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது.கால் இறுதிப் போட்டியில்ரஷ்யாவும் குரோஷியாவும் மோதுகின்றன.