Saturday, June 16, 2018

ஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்



செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்  நடந்த 3 ஆவது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பிடித்த மொராக்கோவை எதிர்த்து  ஈரான் விளையாடியது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இரு நாடுகளும் களம் இறங்கின. இதே பிரிவில் உள்ள போத்துகல்,பெல்ஜியம் ஆகியவற்றுக்கி எதிரான போட்டிகளில் வெற்றி கிடைக்காது என்பதால் ஒரு வெற்றியுடன் நாடு திரும்பஇரு அணிகளும் எண்ணியிருந்தன. கோலுக்குப் போகும் பந்தைத் தடுப்பதாக நினைத்து தலையைக் கொடுத்த மொராக்கோ வீரரின் செயலால்  ஈரானுக்கு ஒரு கோல் கிடைக்க 1 - 0 கோல்கனக்கில் ஈரான் வெற்றி பெற்றது.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலககிண்ணப் போட்டியில் விளையாடும்    மொராக்கோ  இந்த ஆட்டத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் சரி (64 சதவீதம்)இ ஷாட் அடிப்பதிலும் சரி (13 ஷாட்) ஈரானை விட மொராக்கோவின் கை ஓங்கி நின்றது. கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு கோட்டை விடுவதுமாக ஆட்டத்தின் போக்கு அமைந்தது. மொராக்கோ முன்னணி வீரர் ஹகிம் ஜியேச் அடித்த  அருமையான ஒரு ஷாட்டை ஈரான் கோல் கீப்பர் அலிரெஜா பிரன்வன்ட் பாய்ந்து விழுந்து தடுத்து தன்னை கடந்து செல்லாமல் பார்த்துக் கொண்டார்.

இரு அணிகளிலும் சில வீரர்கள் அவ்வப்போது  முரட்டுத்தனமாக விளையாடின.  குறிப்பாக  இரான் வீரர்கள் மூன்று பேருக்கும்  மொராக்கோ வீரர் ஒருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரு அணிகளிலும் சில வீரர்கள் காயத்தால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 போட்டி முழுவதும் மொராக்கோவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 2 ஆவது  நிமிடம் தொடங்கி 90 ஆவது நிமிடம் வரை மொராக்கோ  தாகுதல் நடத்தியது. அந்தத் தாகுதலுக்கு பதிலளிப்பதிலேயே ஈரான் நேரத்திச் செலவிட்டது. 13 முறை கோல் அடிக்கும் சந்தர்ப்பம் மொராக்கோவுக்குக் கிடைத்தது. அதில் மூன்று முறை பெனால்ரி பொக்ஸினுள் கிடைத்த சந்தர்ப்பத்தை வீண்ணடித்தது. 
 
இரண்டாம் பாதியிலும்  தொடர்ந்து கோல் அடிக்கப் போராடிக்கொண்டிருந்தது மொராக்கோ. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்கூட இரான்  கோல் பாக்ஸ் வரை முன்னேறுவதும் பிறகு பந்தை இழப்பதும்  மீண்டும் பந்தைப் பெறுவதும் பிறகு இரான் கோல் பாக்ஸ் வரை முன்னேறுவதும் என கோல் அடிக்க மொராக்கோ முயன்றுகொண்டேதான் இருந்தது. சில முயற்சிகள் வீணாகின. இரான் கோல்கீப்பர் அலிரெஸா பெய்ரன்வன்ட், சிறப்பாகச் செயற்பட்டு மீறிவந்த மொராக்கோவின் சில வாய்ப்புகளையும் தடுத்துவிட ஆட்டம் சம நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

ஸ்டாப்பேஜ் டைம். ஆட்டத்தின் 95 ஆவது நிமிடம். ஆட்டம் முடிய இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே உள்ள நிலையில் கிடைத்த ஹஃப்ரீ கிக் வாய்ப்பில்  மொராக்கோவின் கோல் பாக்ஸுக்கு வெளியே  இடதுபுறத்திலிருந்து    இரானின் எஷன் ஹாஜி சஃபி அடித்தார். ஈரான் வீரரிடம் பந்து சிக்குவதற்கு  அதை தடுப்பதற்காக   எண்ணி மாற்று வீரராகக் களம் இறங்கிய மொராக்கோவின் பகத்தூஸ்   பந்தை நோக்கிப் பாய்ந்து  தலையால் தடுக்க  யாருமே எதிர்பார்க்காத வகையில் பந்து துரதிர்ஷ்டவசமாக மொராக்கோவின் வலைக்குள்ளேயே சென்று  ஓன் கோலா'கத் தஞ்சமடைந்தது.

20 வருடம் கழித்து உலகக்கிண்ணப் போட்டியில்  வெற்றிபெற்ற சந்தோஷத்தில் இரான் வீரர்களும் கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போன அதிர்ச்சியில் மொராக்கோ வீரர்களும் கண்ணீர் விட்டபடியே மைதானத்தைவிட்டு வெளியேறினர். உலகக்கிண்ண வரலாற்றில் ஈரானின் இரண்டாவது வெற்றியாகும். முன்னதாக, 1998 உலகக்கிண்ணப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்த ஈரான், 20 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது
2014 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டிக்குப் பின்னர் ஈரான் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லையென்பது கார்லோஸின் பயிற்சியைப் பறைசாற்றும் ஓர் உதாரணம். இதற்கு முன்பு கார்லோஸ் கியூரோஸ் ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகவும்  மான்செஸ்டர் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் 2010-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியின் போது போத்துகல்  அணியின் பயிற்சியளராகக் கடமையாற்றியவர்.

மொராக்கோவுக்கு இது கொஞ்சம் போதாதகாலம்தான்.   2026 உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் உரிமைகோரும் போட்டியில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணை நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. போட்டியை வெல்லுமளவுக்கு முயன்றபோதும்  துரதிர்ஷ்டவசமாக  ஈரானிடம் தோற்றிருக்கிறது.

முதல் போட்டியில் வெற்றி பெற்றது உருகுவே


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 1970 ஆம் ஆண்டுக்கு பிறகு   முதல் போட்டியில்  உருகுவே வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை மாற்றி .

ரஷ்யாவின் யேகேத்ரின்பர்க் மைதானத்தில்   ஏ பிரிவுப் போட்டியில் எகிப்தை எதிர்த்து விளையாடிய உருகுவே  1- 0  என்றகோல்கணக்கில் வெறியிடன் உலகக்கிண்னப் போட்டியை ஆரம்பித்தது.

  எகிப்து அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும்இ உருகுவே அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கியது. காயத்தில் இருந்து குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எகிப்து அணியில் நட்சத்திர வீரரான முகமது சாலா களமிறக்கப்படவில்லை. அந்த அணி 28 வருடங்களுக்கு பிறகு களமிறங்கியதால் ரசிகர்களிடையே சற்று எதிர்பார்ப்பு இருந்தது.  

ஆட்டத்தின் தொடக்கத்தில் எகிப்து அணி துடிப்புடன் ஆடி பந்தை அதிக நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. எகிப்து அணி வீரர் டிரெஸ்குயட் கோலை நோக்கி அடித்த பந்தை உருகுவே அணியின் கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெரா தடுத்து நிறுத்தினார். அடுத்து கிடைத்தபிரிகிக்வாய்ப்பை எகிப்து அணி கோலுக்கு வெளியே அடித்து வீணடித்தது.

உருகுவே அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் சோபிக்கவில்லை. 4 முறை அவருக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதில் ஒன்றை கூட அவர் கோலாக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் அடித்த ஒரு அருமையான ஷாட் எகிப்து அணியின் கோல்கீப்பர் முகமது அல் ஷெனாவின் முழங்காலில் பட்டு மயிரிழையில் கோல் கம்பத்தை விட்டு வெளியே சென்றது. உருகுவே அணிக்கு கிடைத்த பிரிகிக் வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

பின்பாதி ஆட்டத்தில் உருகுவே அணியின் பிடியே சற்று மேலோங்கி இருந்தது. இரு அணிகளும் தலா 3 மாற்று ஆட்டக்காரர்களை களம் இறக்கி கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார்கள். இருப்பினும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் வெற்றிகரமான முடிவை கொடுக்கவில்லை. எகிப்து அணி வீரர் அகமத் பாத்தி அடித்த அருமையான ஷாட்டை  உருகுவே அணியின் கோல் கீப்பர் லாவகமாக தடுத்து நிறுத்தி அசத்தினார். இரு அணியின் கோல் கீப்பர்களின் அபாரமான செயல்பாட்டை பார்க்கையில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்ட நேரம் முடிய ஒரு நிமிடம் இருக்கையில் (89-வது நிமிடம்) உருகுவே அணிக்கு மீண்டும்பிரிகிக்வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி உருகுவே அணி வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் வலது புறத்தில் இருந்து கோல் எல்லையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதனை எகிப்து அணியின் 3 வீரர்கள் துள்ளிக்குதித்து தலையால் முட்டி தடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட உயரமாக குதித்த உருகுவே வீரர் ஜோஸ் ஜிமென்ஸ் தலையால் அற்புதமாக முட்டி கண் இமைக்கும் நேரத்தில் பந்தை கோலுக்குள் திணித்து எகிப்து அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு பதில் கோல் திருப்ப எகிப்து அணி எல்லா வகையிலும் மும்முரம் காட்டினாலும்இ எஞ்சிய நேரத்தில் அதற்கு பரிகாரம் எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பு ஆட்டத்தில் தலைசிறந்து விளங்கிய எகிப்து அணி கடைசி கட்ட சறுக்கலால் டிரா செய்யும் நல்ல வாய்ப்பை கோட்டை விட்டது. முடிவில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

ஃபீபா உலகக்கிண்ண வரலாற்றில் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக உருகுவே தோல்வியடைந்ததில்லை. அதே நேரத்தில் மற்றொரு ஆப்பிரிக்க நாடான எகிப்து இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் 2 போட்டிகளைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில்  தோல்வியடைந்தது. 1934 ஆம் ஆண்டின் பின்னர் 1990 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் எகிப்து பங்கேற்றது. ஆனால் முதல்சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது சாலாஹை நம்பி அவருடைய உதவியால் உலகக்கிண்ணப் போட்டியில்விளையாடத் தகுதி பெற்றது. 1930, 1950 ஆம் ஆண்டுகளில் சம்பியனான உருகுவே கடந்த உலகக்கிண்ணப் போட்டியில்காலிருதிக்கு முன்னைய சுற்றுடன் வெளியேறியது.

இரு அணிகளும் துவக்கம் முதலே கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தில் 58 சதவீத நேரம் பந்து முன்னாள் சாம்பியனான உருகுவே வசமே இருந்தது. இரு அணிகளுக்கும் தலா மூன்று முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  . பிரிவில் ரஷ்யா ஏற்கனவே 3 புள்ளிகளுடன் உள்ளது. தற்போது உருகுவேவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆட்டங்களில்தான் அடுத்தச் சுற்றுக்கு நுழையப் போவது யார் என்பது தெரியவரும்.


Friday, June 15, 2018

ரஷ்யாவுக்கு முதல் வெற்றி


.

 .மாஸ்கோவில்உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக்கிண்ன  முதலாவது போட்டியில் சவூடி அரேபியாவை எதிர்த்து விளையாடிய ரஷ்யா ,  5- 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதுஇரு அணி வீரர்களும் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடினர். பந்து அரேபியாவின் கட்டுப்பாட்டில் சற்று அதிகமாக (60 சதவீதம்) வலம் வந்தாலும் ரஷ்யா வீரர்கள் தாக்குதல் பாணியை கையாண்டு  அவர்களின் தடுப்பு அரணை எளிதில் உடைத்தனர்.

12-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை ரஷ்யாவின் யுரி காஜின்ஸ்கி தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார். இதன் மூலம் இந்த உலகக்கிண்ணப் போட்டியில் முதல் கோலை அடித்தவர் என்ற சிறப்பை காஜின்ஸ்கி பெற்றார். 14-வது நிமிடத்தில் இன்னொரு கோல் விழுந்திருக்க வேண்டியது. அந்த ஷாட்டை அரேபியா கோல் கீப்பர் அப்துல்லா பாய்ந்து தடுத்து விட்டார்.

ரஷ்யா முன்னணி வீரர் ஆலன் ஜாகோவ் தசைப்பிடிப்பு காரணமாக 23-வது நிமிடத்தில் வெளியேறினார். ஆனாலும் ரஷ்யா நிலைமையை சமாளித்து திறம்பட ஆடியது.  மாற்று ஆட்டகாரராகக் களம் இறங்கிய ரஷ்ய வீரர்    டெனிஸ் செரிஷிவ் 43-வது நிமிடத்தில் இடது காலால் பந்தை உதைத்து வலைக்குள் அனுப்பி அசத்தினார். இதையடுத்து முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ரஷ்யா முன்னிலை பெற்றது.

71-வது நிமிடத்தில் ரஷ்யாவின் மற்றொரு மாற்று ஆட்டக்காரர் ஆர்ட்டெம் டிஸ்யூபா தலையால் முட்டி கோல் போட்டார். வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த 5 நிமிடங்களில் ரஷ்யாவின் வீரர் டெனிஸ் செரிஷி  இன்னொரு கோலை அடித்தார். கடைசி நேரத்தில் கிடைத்த பிறீகிக்கை அலெக்சாண்டர் கோலோவின் கோலாக்க 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வெற்றி பெற்றது. உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் நாடு தோல்வியடைவதில்லை என்றசரித்திரத்தில் ரஷ்யாவும் இணைந்தது.  கோலாக்கினார். மாற்று வீரர்கள் ஒரு போட்டியில் மூன்று கோல்கள் அடித்தது இதுவே முதல் முறை

 . இரு அணி தரப்பிலும் தலா ஒரு வீரர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள். இந்த ஆட்டத்தை மொத்தம் 78 ஆயிரத்து 11 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்   

உலகக்கிண்ணம் 2018 ஜி பிரிவு பெல்ஜியம்


பெல்ஜியம்,இங்கிலாந்து,துனீஷியா, பனாமா ஆகியன உலகக்கிண்ணப் போட்டியில் ஜி பிரிவில் விளையாடுகின்றன.  இந்தப் பிரிவில் இருந்து முதல் நாடாக பெல்ஜியம் இரண்டாவது சுற்றுக்கு எளிதாகச்சென்றுவிடும். இரண்டாவது நாடாக இங்கிலாந்து தகுதி பெறுவதற்கு அதிக சந்தர்ப்பமுள்ளது. துனிஷியாவும் பனாமாவும் அதிர்ச்சியளித்தால் இங்கிலாந்தின் நிலை சிக்கலாகிவிடும்.

ஐரோப்ப்பியக்கண்டத்தில் எச் பிரிவில் விளையாடிய பெல்ஜியம் 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியது. தகுதிகாண் போட்டிகளில் தோல்வியடையாத பெல்ஜியம்,43 கோல்கள் அடித்தது. எதிராக 6 கோல்கள்  அடிக்கப்பட்டன. ஆறு போட்டிகளில் எதிரணி  கோல் அடிக்கவில்லை. கிரீஸுக்கு எதிரான போட்டி 1 - 1 என்ற கோல்கனக்கில் சமனிலையில் முடிந்தது. எஸ்தோனியாவுகு எதிரான போட்டியில் 9-0 ,ஜிப்ரல்டல்க்கு எதிரான முதல் போட்டியில்  9 -0 இரண்டாவது போட்டியில் 6-0 என்ற கோல்கணக்கில் சுவீடன் வெற்றி பெற்றது.

 சுவீடன்  12 முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. கடந்த முறை கால் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்தது. 1968 ஆம் ஆண்டு நான்காவது இடத்தைப் பெற்றது.
கிளப் மட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட ரோபேட்டோ மார்ட்டின்ஸ் பெல்ஜியத்தின் பயிற்சியாளராகக் கடமையாற்றுகிறார். அவருடைய செயற்பாடுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கெவின் டி புரூனே பெல்ஜியத்தின் நம்பிக்கை நட்சத்திரமாவார். பெல்ஜியத்தின் வீரரான கெவின் டி புரூனே உலகின்  மிகச்சிறந்த 5 மிட்ஃபீல்டர்களில் ஒருவர்  மான்செஸ்டர் சிட்டி அணி வரலாற்றுச் சாதனையோடு ப்ரீமியர் லீக் பதக்கம் வெல்ல மிக முக்கியக் காரணமாக விளங்கியவர். அட்டா, டிஃபன்ஸ் இரண்டிலும் இவரது பங்களிப்பு அணிக்குக் கைகொடுக்கும். அசிஸ்ட் செய்வதில் நம்பர் 1. ஃப்ரீ கிக் எடுப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட். இப்படி இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பெல்ஜியம் அணியை ஹடார்க் ஹார்ஸ்' என எல்லோரும் கருத முக்கியக் காரணமே இவர்தான். ஹசார்ட், லுகாகு, மெர்டன்ஸ் போன்ற முன்கள வீரர்கள் இவரின் பாஸ்களைப் பயன்படுத்திக்கொண்டால் பெல்ஜியம் நிச்சயம் ஆச்சரியமளிக்கும்.


உலகின் மிகச் சிறந்த நடுக்கள வீரர்களான செல்சியாவின் எடன் ஹசார்ட், மான்செஸ்டர் சிட்டியின் கெவின் டி புருனே ஆகியோர் பெல்ஜியம் அணிக்காக விளையாடுகின்றனர். 2017-18 பிரீமியர் லீக் ஆட்டங்களில் புருனே 21 கோல்களை அடித்ததுடன், 21 கோல்கள் அடிப்பதில் உதவி புரிந்துள்ளார். ஹசார்ட் 17 கோல்களை அடித்ததுடன், 13 கோல்களை அடிக்க உதவி செய்துள்ளார்.

இவர்களுடன், முன்கள வீரர்களான ரோமேலு லுகாகு,டிரைஸ் மெர்டன்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால், பெல்ஜியம் காட்டில் கோல் மழைதான். உலகின் மிகச் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவரான தியாவுத் கோர்டோயிஸ் உள்ளது பெல்ஜியம் அணிக்கு மிகப் பெரிய பலம். ரெட் டெவில்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியம் அணி வீரர்  ரோமலு லகாகு 11 கோல்கள் அடித்திருந்தார். கப்டன் ஈடன் ஹஸார்டு 6 கோல்கள் அடித்த நிலையில்இ 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தார்.
ஹஸார்டு, டிரஸ் மெர்டன்ஸ் ஆகியோர் தலைசிறந்த விங்கர்களாக உள்ளனர். இவர்கள் முன்களத்திலும் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஸ்டிரைக்கரான ரோமலு லகாகு, இந்த சீசனில் பிரிமீயர் லீக் தொடரில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். இம்முறை அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள்தான் கடந்த 2014 உலகக் கிண்ணத் கோப்பை தொடரிலும், 2016-ம் ஆண்டு யூரோ கோப்பையிலும் விளையாடினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

வெற்றிக்கான மனப்பாங்கும், வியூகங்களும் இல்லாதது நட்சத்திர வீரர்களையே ஏமாற்றம் அடையச் செய்தது. இதனால் இம்முறை உயர்மட்ட அளவிலான ஆட்டத்தை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் பெல்ஜியம் வீரர்கள்.

மற்ற நாடுகள் பயப்படும் அளவுக்கு, பொறாமைப்படும் அளவுக்கு மிகச் சிறந்த நடுகள வீரர்களை பெல்ஜியம் கொண்டுள்ளது. ஆனால், மிகவும் முக்கியமான போட்டிகளில் பெல்ஜியம் மொத்தமாக சொதப்பிவிடும்.
2014 உலகக்கிண்ண  காலிறுதி, 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் என பல உதாரணங்களைக் கூறலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்தால் பெல்ஜியத்தின் வெற்றியை தடுக்க முடியாது.


உலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு தென். கொரியா



 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாகும் எனக் கருதப்படும் ஜேர்மனி,சுவீடன்,மெக்ஸிக்கோ ஆகியவறுடன் எஃவ் பிரிவில் தென்.கொரியா இடம் பிடித்துள்ளது

ஆசியக்கண்ட தகுதிச்சுற்றில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகலைச் சமப்படுத்தியது. 3 போட்டிகளில் தோல்வியடைந்த தென்.கொரியா 11 கோல்கள் அடித்தது. எதிராக 10 கோல்கள் அடிக்கப்பட்டன. 15 புள்ளிளுடன் இர்ரண்டாவது இடத்தைப் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

தரவரிசையில் 57 ஆவது இடத்தில் இருக்கும் தென்.கொரியா  1954 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை 9 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது. 2002 ஆம் ஆண்டு  நான்காவது இடத்தைப் பிடித்தது.

  , தென்.கொரியாவின் வயது குறைந்த அணியில் பயிற்சியாளராக இருந்த ஷின் டேயங்   ஜூலை 2017 இல் தேசிய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் தென் கொரியா விளையாடுகிறது.   இந்த சாதனையை இதுவரை எந்த ஆசிய அணியும் செய்ததில்லை.

சான் ஹூங்க்மின்,குவான் குயிங்க் வான்,ஜா சியோல் கூ. ஆகியோர் பிரபலமான வீரர்களாவர். லீ சுங்க் யங்க், கிம் ஜின் சூ ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அதனால் ஷின் ஹூங்க்மினை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் அணி உள்ளது.

ஆசியாவில் நடைபெற்ற தகுதிகாண் ஆட்டங்களில் தடுப்பாட்டத்தில் தென்.கொரியா திணறியது. ஆதலால் முதல் சுற்றைத் தாண்டுமா என்ற சந்தேகம் உள்ளது.

Thursday, June 14, 2018

உலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு


மெக்ஸிக்கோ
வட ,மத்திய அமெரிக்க கண்டத்தில் இருந்து உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற  மெக்ஸிக்கோ, பிறேஸில்,சுவீடன்,தென்.கொரியா ஆகியவற்றுடன் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ளது. பிறேஸில் இலகுவாக இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும் இரண்டாவது  சுற்றுக்குச் செல்வதற்காக சுவீடனுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையே போட்டி இருக்கும்.

தகுதிகாண்சுற்றில்  6 போட்டிகளில் வெற்றி பெற்ற மெக்ஸிக்கோ,  3 போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. 16 கோல்கள் அடித்த மெக்ஸிக்கோவுக்கு எதிராக  7 கோல்கள் அடிக்கப்பட்டன. 21 புள்ளிகளுடன் உலகக்கிண்ணத்தில் விளையாட மெக்ஸிக்கோ தகுதி பெற்றது.

தர வரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் மெக்ஸிக்கோ 1930 ஆம் ஆண்டு முதல் 15 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது.1970.1986 ஆம் ஆண்டுகளில் கால் இறுதிச் சுற்றுவரை சென்றது. 1994 ஆம் ஆண்டுகுப் பின்னர் தொடர்ந்து 6 முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் மெக்ஸிக்கோவும் ஒன்று.

பல் வேறு கிளப்களுக்கு பயிற்சியாளராகக் கடமையாற்றிய ஜுவான் கார்லோஸ் ஒசோரியோ 2015 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் சர்வதேசப் போட்டிகளில் மெக்ஸிக்கோ முன்னேற்றமடைந்துள்ளது. ஒசோரொயோவின் பயிற்சியில் 45  போட்டிகளில் விளையாடிய மெக்ஸிக்கோ, 38 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.தகுதிகாண் போட்டியில் மூன்று போட்டிகள் மீதமிருக்கையில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி  பெற்றது.

தகுதிகாண் போட்டியில் மூன்று முறை இரண்டு கோல்கள் அடித்த ஜெவியர் ஹமாண்டஸ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.  ஹிர்விங் லோசானோ,ஜொனதன் டாஸ் சாண்டஸ், கோல் கீப்பர் குல்லிர்மோ ஒசோ, ஹெக்டர் மொரேனொ, கார்லோஸ் வேலா,ஜேசுஸ் கொரானோ,அண்ட்ரிஸ் குராடோ,இளம் வீரர்களான ஒஸ்வால்டோ அலனிஸ், ஹுகொ அயலா, எட்சன் அல்வரிஸ்,  ஆகியோர் மெக்ஸிக்கோவின் முக்கிய வீரர்களாவ.
நெஸ்ரொர் அரஜு, கார்லோஸ் சலாடோ ஆகிய இருவரும் காயமடைந்ததால் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது  32 வருடங்களின் பின்னர் கால் இறுதிப்போட்டியில் விளையாடும் நோக்குடன் மெக்ஸிகோ ரஷ்யாவுக்குச் சென்றுள்ளது.


                  சுவீடன்

மெஸ்ஸி,ரொனல்டோ,நெய்மர் வரிசையில் உதைபந்தாட்ட ரசிகர்களால் போற்றப்படுபவர் இப்ராஹிமோவிச்.சுவீடனின் உதைபந்தாட்ட அடையாளமாகப் பார்க்கப்படும் இப்ராஹிமோவிச் இல்லாத சுவீடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுகிறது.


ஐரோப்பாவிலிருந்து உலகக்கிண்னப் போட்டிக்குத் தகுதி பெற்ற சுவீடன்,பலம் வாய்ந்த ஜேர்மனி, மெக்சிக்கோ,தென்.கொரியா ஆகியவற்றுடன்  எஃவ் பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தப்பிரிவில் இருந்து ஜேர்மனி முதல் அணியாக இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும். இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்காக மெக்ஸிக்கோவுடன் முட்டி மோத வேண்டிய நிலையில்  சுவீடன் இருக்கிறது.
தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியது. மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சுவீடன் 26 கோல்கள் அடித்தது. எதிராக 9 கோல்கள் அடிக்கப்பட்டன்.19 புள்ளிகளுடன் ஏ பிரிவில் இரண்டாவது இடத்திப் பிடித்ததால் பிளேஃஓவ் போட்டியில் வெற்றி பெற்று உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது
.

தரவரிசையில் 24 ஆவது இடத்தில் இருக்கும் சுவீடன், 1924 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை 11 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது. 4 அரை இறுதிப் போட்டிகளில் விளையாடிய சுவீடன் 1958 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.


சுவீடனுக்கு எதிரான பிளேஃஓவ் பீட்டியில் தோல்வியடைந்ததால் 4  சம்பியனான இத்தாலி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை  இழந்தது. 2010, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடாத சுவீடன் இந்தமுறை தகுதி பெற்றது. ஜேன் அண்டர்சனின் பயிற்சியில் முன்னேற்றம்டைந்த சுவீடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.
மார்கஸ் பெக், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.எமில் போர்ஸ் பெக்,விக்டர் லிண்டலோப், இப்ராஹிமோவிச் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் கிரான் குவிஸ்ட், கோல் கீப்பர் ரொபின்  ஒஸ்லென் ஆகியோர்  அணியில் இடம் பிடித்துள்ளனர்.
சுவீடன் அணியின் வீரர்கள் பலர்  விளையாடும் திறன் குறைந்து காணப்படுகின்றனர். கடைசியாக விளையாடிய போட்டிகளிலும் பயிற்சிப் போட்டிகளிலும் திணறியது. அதனால் முதல் சுற்றைத் தாண்டுவதற்கு சுவீடன் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.

Wednesday, June 13, 2018

உலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு ஜேர்மனி




உலகக்கிண்ண சம்பியன் ஜேர்மனியுடன் மெக்சிகோ,சுவீடன்,தென் கொரியா ஆகியன எஃப் பிரிவில் இடம் பிடித்துள்ளன.  தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜேர்மனி சம்பியன் கிண்ணத்தை தக்கவைக்கும்  திட்டத்துடன் ரஷ்யாவுகுச் சென்றுள்ளது.  எஃவ் பிரிவில் பலமான  நாடான ஜேர்மனி இலகுவாக இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும்.   இந்தப் பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கு மெக்சிக்கோவுக்கும் சுவீடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.


ஐரோப்பிய தகுதிகாண் போட்டியில் சீ பிரிவில் இடம் பிடித்த ஜேர்ம்னி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.  43 கோல்கள் அடித்த ஜேர்மனிக்கு எதிராக 4 கோல்கள் அடிக்கப்பட்டன. தகுதிகாண்  சுற்றில் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக கோல்கள் அடித்தாணியாக ஜேர்மனி விளங்குகிறது. ஜேர்மனிக்கு எதிராக நான்கு அணிகள் தலா ஒரு கோல் அடித்தன. 6 நாடுகள் ஜேர்மனிக்கு எதிராக ஒரு கோல்கூட அடிக்கவில்லை. சன்மாரியோவுக்கு எதிரான முதல் போட்டியில்  7-0 கோல்கணக்கிலும் இரண்டாவது போட்டியில் 8-0 கோல்கணக்கிலும் நோர்வேக்கு எதிராக 6 -0 கோல்கணக்கிலும் அசர்பைசானுக்கு எதிரான போட்டியில் 5-1 கோல்கணக்கிலும் ஜேர்மனி வெற்றி பெற்றது.

தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜேர்மனி 1934 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 18 முறை உலகக்கிண்னப் போட்டியில் விளையாடியது. 13 முறை அரை இறுதிப்போட்டியிகளிலும் 8 முறை இறுதிப் போட்டிகளிலும் விளையாடிய ஜேர்மனி 1954,1974, 1990, 2014 ஆம் ஆண்டுகளில் சம்பியனாகியது.

ஜேர்மனியின் துணை பயிற்சியாளராக இருந்த ஜொச்சிம் லோ, 2006 ஆம் அண்டு முதல் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 2008 ஆம் ஆண்டு யூரோ கிண்ணப்போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அரை இறுதிப்போட்டிவரை சென்றது. 2014 இல்  உலகக்கிண்ண சம்பியனாகியது.  2017 ஆம் ஆண்டு கொன்படரேசன் கிண்ணத்தை தாய் நாட்டுக்குக் கொண்டுவந்தது ஜேர்மனி. இம்முறையும் சம்பியனாகி 56 வருட சாதனையை சமப்படுத்தும் எண்ணத்துடன் இருக்கிறது ஜேர்மனி. 1958,1962 ஆம் ஆண்டுகளி பிறேஸில் தொடர்ச்சியாக சம்பியனாகியது.  உலகக்கிண்ண சம்பியன்,கொன்படரேசன் சம்பியன், மீண்டும் உலகக்கிண்ண சம்பியன் என தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன் பட்டங்களை முதன் முதலில் பெற வேண்டும் எனவும் ஜேர்மனி  விரும்புகிறது.

ஜொச்சிம் லோவின் 12 வருட பயிற்சி  ஜேர்மனியை பலப்படுத்தியுள்ளது. கொன்படரேசன் கிண்ணப் போட்டியில் விளையாடிய 10 வீரர்கள் ஜேர்மனியில் இடம் பிடித்துள்ளனர்.எதிரணியின் களவியூகங்களை உள்வாங்க் உடைத்தெறிவதில் ஜேர்மனி முன்னிலையில் உள்ளது.

ரசிகர்களின் நம்பிக்கையான வீரராக தோமஸ் முல்லர்   உள்ளார். ஜோஷூவ கிமிமிச், டொனி கிராஸ்,மேசட் ஒசில்,மார்க் ஆந்தரே டெர், ஸ்டீகன்,மேட்ஸ் ஹம்மல்ஸ்,ஜெரோம் போடங்,லோரோ சானே, லியோன் கோரட்கா,டிமோ வெர்னர், ஷமி கெதிரா,  மெசூட் ஓஸ்வில் ஆகியோரின் அனுபவம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல்  போட்டிகளில் விளையாடாத  கோல் கீப்பர்  மனுவல் நொயர் அணியில் இணைந்து பயிற்சிப் போட்டியில் விளையாடினார். இது ஜேர்மனிக்கு  புதுத் தெம்பை அளித்துள்ளது. சிறந்த நடுக்கள வீரரான லராய் சானே, கோல்கீப்பர் பெர்ட் லினோ, முன்கள வீரர் நில்ஸ் பீட்டர்சன்,பின்கள வீரர் ஜொனதன்,நடுக்கள வீரர் செர்ஜியோ பெனோ ஆகியோர் ஜேர்மனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 22 போட்டிகளில் தோல்வியடையாத ஜேர்மனி அடுத்த வெற்றிக்காகக் காத்திருக்கிறது.