Tuesday, June 9, 2020

தற்கொலை செய்த எஜமானுக்காக நான்கு நாட்களாக காத்திருந்த நாய்


சீனாவின் உகான் நகரின் யாங்சே பாலத்தில் இருக்கும் நதியில், நபர் ஒருவர் கடந்த 30-ஆம் திகதி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆற்றில் குதிக்க சென்ற அவருடன் அவருடைய செல்லப்பிராணியான நாயை உடன் சென்றுள்ளது. தனது எஜமானர் தற்கொலை செய்து கொண்டது தெரியாமல்   அந்த விசுவாசமான நாய் இப்போது அவரின் வருகைக்காக கடந்த நான்கு நாட்களாக
பாலத்தின் நடைபாதையில் தனியாக காத்து கொண்டிருந்துள்ளது

இதை அந்த வழியே சென்ற சூ என்ற நபர் புகைப்படன் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அந்த நபர் அந்த நாயை தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அந்த நாய் அவரிடம் சிக்காமல் ஓடியுள்ளது.

பின்னர் மீண்டும் அந்த பாலத்தில் வந்து நின்றுள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்த்த உகான்  விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குனர் டு பேன், சூவின் பதிவைப் பார்த்து உள்ளூர் தன்னார்வலர்களுடன் அதனை தேடத் துவங்கினார்.

அன்று, சரியாக என்ன நடந்தது என்பதை சரிபார்க்க பாலம் அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால், அன்றைய தினம் இது மிகவும் இருட்டாக இருந்ததால், கண்காணிப்பு கேமிராவில் சரியாக பதிவாகவில்லை, ஆனால் அதில் அவர் குதிப்பதை பார்க்க முடிந்தது. அத்தகைய விசுவாசமான நாய் தெருக்களில் வழிதவறி வருவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.அதற்கான ஒரு புதிய உரிமையாளரைக் விரைவில் கண்டுபிடிப்போம் என்று நாங்கள் இன்னும் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

No comments: