கொரோனா தொற்று நோய் காலத்தில் இந்தியாவில் முகேஷ் அம்பானியை விட ஒருவர் அதிகம் சொத்து சேர்த்துள்ளார். 'தடுப்பூசி மன்னர்' என அழைக்கப்படும் 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா'வின் நிறுவனர் சைரஸ் பூனவாலா தான் கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகளவில் சொத்து சேர்த்துள்ளார்.
அதுமட்டுமல்ல;
உலகளவி இக்காலகட்டத்தில் அதிகளவு செல்வம் சேர்த்த நபர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்.கடந்த நான்கு
மாதங்களில் இவரது சொத்து மதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை அடுத்து மே 31 ஆம் திகதி நிலவரப்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 57 இடங்கள் முன்னேறி 86வது இடத்தை பிடித்துள்ளார்
என 'ஹுருன்' ஆராய்ச்சி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
புனேவை
சேர்ந்த பூனவாலாவின் 'சீரம்' நிறுவனம் ஏற்கனவே உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாக
உள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் வணிகம் மேலும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்து வழங்க 'அஸ்ட்ராசெனெகா' நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை 'சீரம்' மேற்கொண்டது. இதன்படி 'சீரம்' நிறுவனம் 100 கோடி தடுப்பூசி மருந்தை தயாரித்து கொடுக்க வேண்டும்.
முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற நிலையை தொடர்கிறார்.முதல் இரண்டு மாதங்களில் கடுமையான இழப்பை அவர் சந்தித்தாலும் அடுத்த இரு மாதங்களில் 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்தது. இதையடுத்து உலக பணக்காரர் வரிசையில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.இருப்பினும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா காலத்துக்கு முன் இருந்ததைவிட 1 சதவீதம் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment