பெட்ரா க்விடோவா அதிருப்தி சர்வதேச டென்னிசில்
12வது இடத்தில் உள்ளவர் பெட்ரா க்விடோவா. இரண்டு விம்பிள்டன் பட்டங்களுக்கு சொந்தக்காரரான
இவர், ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் போட்டிகளை விளையாடுவதற்கு தொடர்ந்து அதிருப்தி
தெரிவித்து வருகிறார். இருந்தாலும், போட்டிகளே இல்லாமல் இருப்பதற்கு போட்டிகள் துவங்கப்பட்டு
நடத்தப்படுவது சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்
கடந்த வாரத்தில் நடைபெற்ற அனைத்து செக் எக்சிபிஷன் தொடரில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.
ரசிகர்கள் இல்லாமல் விளையாடியது விசித்திரமாக இருந்ததாகவும் க்விடோவா தெரிவித்துள்ளார்.
ஆயினும் திரும்பவும் போட்டிகளில் பங்கேற்றது சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.
ரசிகர்கள்
இல்லாத மைதானங்களில் நடத்தப்பட்ட முதல் போட்டியில் விளையாடியபோது தன்னுடைய கவனம் ஆட்டத்தில்
செல்லவில்லை என்றும், தனக்கு டவல் எடுத்துக்கொடுக்கக் கூட ஆளில்லாமல், வெற்றியின்போது
கைகுலுக்காமல் விளையாடியது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ள க்விடோவா,
அரையிறுதி போட்டியின்போதே தான் ஆட்டத்தில் முழுகவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனித்திருத்தல் கடுமையானது வரும் ஆகஸ்ட் மாதத்தில் டென்னிஸ் தொடர்கள் துவங்கப்பட்டால்
மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆயினும் வெளிநாடுகளில் போட்டிகள்
நடத்தப்பட்டால் இரண்டு வாரங்களுக்கு தனித்திருக்க வேண்டும் என்ற முடிவு மிகவும் கடுமையானது
என்றும் தெரிவித்துள்ளார். ஆயினும் போட்டிகள் இல்லாமல் இருப்பதற்கு மீண்டும் துவங்கப்படுவது
நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment