Tuesday, June 9, 2020

உலகளவில் கடந்த மாதத்தில் முதலிடம் பிடித்த டிக் டாக்


கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது. குறிப்பாக ஏப்பரல் மற்றும் மே மாதத்தில் உலக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இந்தக் காலத்தில் வீட்டில் இருந்தபடி புதிய பொழுது போக்குகளை மக்கள் நாடினர்

லாக்டவுன் காலக்கட்டத்தில் மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு செல்போன்தான். பெரும்பாலானோர் விளையாட்டு செயலிகளை தரவிறக்கம் செய்து   நேரத்தை கழித்தனர். பலர் டிக் காட் செயலியை தரவிறக்கம் செய்து  செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் மே மாதத்தில் உலகம் முழுவதும் அதிகமாக தரவிறக்கம் செய்து  செய்யப்பட்ட செயலி எது என்பது குறித்து சென்சார் டவர் என்ற கணக்கெடுத்தது.

இதில் டிக் டாக் செயலியை உலகளவில் 11.2 கோடி பேர் தரவிறக்கம் செய்து  செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  கூகுள் பிளே-ஸ்டோர் மூலம் டிக் டாக் செயலி அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி 2-வது இடத்தில் உள்ளது. ஜூம் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ஆப்பிள் ஆப்-ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து  செய்ததில் ஜூம் முதல் இடத்தை பிடித்துள்ளது. டிக்டாக் 2-வது இடத்தையும், யூடியூப் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

No comments: