அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பு இனத்தவர், கடந்த 25 ஆம் திகதி பொலிஸின் பிடியில் கொலை செய்யப்பட்டது கறுப்பு இன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கறுப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் முக்கிய குற்றவாளி டெரெக் சவ்வின் மற்றும் தொடர்புடைய மூன்று பொலிஸ்
அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்குபேரும் கைது செய்யபட்டு உள்ளூர் சிறையில் அடைக்கபட்டு இருந்தனர். இந்த நிலையில் சிறைசாலையில் இருக்கும் சவ்வின்வர் பிணையில் வெளியே வர முயற்சித்து வருகிறார்.
இந்த் நிலையில் ஹென்னெபின் கவுண்டி மாவட்ட நீதிமன்றம் அவரது ஜாமீனை நிபந்தனைகளுடன் 1 மில்லியன் டொலடும்,
நிபந்தனைகள் இல்லாமல் 1.25 மில்லியன் டொலரும் நிர்ணயித்துள்ளது.
நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவர் தனது துப்பாக்கிகளை வேண்டும், சட்ட அமலாக்கத்தில் அல்லது எந்தவொரு பகுதியிலும் பாதுகாப்பில் ஈடுபடக்கூடாது, மாநிலத்தை விட்டு வெளியேற கூடாது, குடும்பத்துடன்
தொடர்பு கொள்லக்கூடாது
போன்ற நிபந்தனைகளுக்கு
ஒப்புகொண்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளின்
தீவிரம் மற்றும் வழக்கின் வலுவான மக்கள் எதிர்வினை ஆகிய இரண்டின் காரணமாக அரசு வழக்கறிஞர் மத்தேயு பிராங்க் அதிக பிணை கேட்டுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை மீண்டும் ஜூன் 29 ஆம் திகதி நடைபெறும்.
No comments:
Post a Comment