Monday, June 8, 2020

கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது நியூஸிலாந்து


 
  கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுத திணறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கொரோனா தொற்று இல்லாத நாடாக நியூஸிலாந்து உருவெடுத்துள்ளளது.   இதற்கெல்லாம் காரணம்  அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தான்.
  
 இந்தச்  செய்தி நியூஸிலாந்து நாட்டின் சாதனை என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் தெரிவிக்கிறார்,
. "கடந்த பிப்ரவரி 28 க்குப் பிறகு எங்கள் நாட்டில் பெரிய அளவிலான தொற்று பாதிப்பு இல்லை.. இதுவே எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாகும்.. ஆனால் நாங்கள் ஏற்கனவே சொன்னது போல இந்த கோவிட்-19 க்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு தொடர்ந்து அவசியம்" என்று ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

துவக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸை கையாண்ட விதத்திற்காக நியூசிலாந்து பல்வேறு நாடுகளின் பாராட்டை பெற்று வருகிறது.. குறிப்பாக பிரதமர் ஜெசிந்தாவின் செயல்பாடுகள் பாராட்டுக்களைப் பெற்றன. 7 வாரங்கள் லாக்டவுன் போடப்பட்டது.. இந்த லாக்டவுன் கடந்த மாதம்தான் தளர்த்தப்பட்டது.. இதுவரை 1,154 பேருக்கு பாதிப்புகளும், 22 உயிரிழப்புகளையும் நியூஸிலாந்து சந்தித்துள்ளது.. ஆனால் 17 நாட்களுக்கு புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்பது பெரிய விஷயம். தொற்றில் இருந்த கடைசி நோயாளியும் மீட்கப்பட்டுவிட்டார்..

  பிரதமர் ஜசிந்தா தளர்வு குறித்த அறிவிப்புகளை விரைவில் எடுப்பார் என நம்பப்படுகிறது.. அதன்படி, சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.. ஆனால் இறுதி உள்நாட்டு கட்டுப்பாடுகள் - பொதுக் கூட்டங்கள் மீதான வரம்புகள் மற்றும் கட்டாய சமூக விலகல் போன்றவை தளர்த்தப்படும் என தெரிகிறது.  

No comments: