அமெரிக்கா அதன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் என ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவ்சாவி தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் கூறும்போது,
“ அமெரிக்க மக்களே உங்கள் மீதான அரசின் அடக்குமுறைகளை உலகம் கேட்கிறது. உலக நாடுகள் உங்களுடன் நிற்கிறது.அமெரிக்க அதிகாரிகளே உங்கள் மக்கள் மீதான வன்முறையை நிறுத்துங்கள், அவர்களை சுவாசிக்க அனுமதியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈரானில் நடந்த போராட்டங்களின் போது ஈரான் மக்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குரல் கொடுத்தார். இந்த நிலையில் ஈரானும் இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment