Monday, June 1, 2020

அமெரிக்கரின் மரணத்துக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் வலுக்கிறது


அமெரிக்காவில் கறுப்பர் இனத்தினர், வெள்ளை இன  பொலிஸாரால் கொல்லப்படுவது அதிகரித்து  வருகிறது. அந்த வரிசையில், மின்னசோட்டா மாகாணம், மின்னபோலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கறுப்பர் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு நாடு மின்னசோட்டா, நியூயார்க், அட்லாண்டா என பல பகுதிகளிலும் கருப்பர் இன மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின்போது பொலிஸாருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்பட 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் ஜார்ஜ் பிளாய்டு  மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்திய லண்டனில் உள்ள டிரபால்கர் சதுக்கம் மற்றும் பட்டார்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளிப்புறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி வேண்டுமென கோஷமிட்டனர்

No comments: