இதற்கிடையே
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனாதிபதி டிரம்ப்
மூன்று மாதங்களுக்கு முன் தன் தேர்தல் பிரசாரத்தை
நிறுத்தியிருந்தார். ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று
இதுபற்றித் தெரிவிக்கையில்
:”தேர்தல் பிரசாரத்தை ஓக்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரில் இருந்து மீண்டும் துவங்குகிறோம். அடுத்து புளோரிடாவில் பிரமாண்ட பேரணியை நடத்துகிறோம்.அதைத்
தொடர்ந்து டெக்சாஸ் , அரிசோனா, வட கரோலினா
மாகாணங்களிலும் பெரிய அளவில் பேரணி நடத்துகிறோம்” என்றார்.
குடியரசு
கட்சி வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் மாநாடு வட கரோலினாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் ஜனநாயக கட்சி வசமிருக்கும் அம்மாகாணத்தில்
கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாததா
அம்மாநாட்டை வேறு மாகாணத்தில் நடத்த ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்துஉள்ளார். நிகழ்ச்சி
நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில்
வெளியிடப்படும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஜனாதிபதி
ட்ரம்பின் பேரணிகளில் ஜனநாயக கட்சி வேட்பாளரான
ஜோ பிடன் பேரணிகளில் கூடும் கூட்டத்தை விட அதிகமாகவே காணப்படுகிறது. எனினும் செய்தி நிறுவனங்களால் எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான
கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடன் முன்னிலை
வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே
அமெரிக்காவில் ராணுவ அதிகாரிகளின் பெயர்களுடன் உள்ளஇ 10 ராணுவ தளங்களின்
பெயர் மாற்றம் செய்யப்படும் என வெளியான செய்தியை ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர்
கூறுகையில் “இந்த சக்தி வாய்ந்த தளங்கள் அமெரிக்க பாரம்பரியத்தின் அங்கமாக மாறிவிட்டன. ஆகையால்
இவற்றின் பெயர்களை மாற்ற என் நிர்வாகம் ஒருபோதும் நினைக்காது ” என்றார்.
No comments:
Post a Comment