Saturday, June 20, 2020

மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு

ஒடிசாவின் மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கு மாறியதை அடுத்து 11 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்த கோவில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

1933ஆம் ஆண்டு மகாநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிராமங்கள் சில தண்ணீரில் மூழ்கிப்போனது, அப்போது இந்த கிராமங்களில் இருந்த பழமையான கோவில்களும் மூழ்கிப்போனது. கட்டாக் அருகே பத்மாவதி பகுதியில் உள்ள பைதேஸ்வர் கிராமத்தின் அருகே ஓடும் மகாநதி ஆற்றில் இந்த பாரம்பரியம் மிக்க கோவில் வெளிப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியிருந்த அந்த கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என பாரம்பரிய இடங்கள் குறித்த ஆவணமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை ஆய்வாளர்கள் குழுவினர் இதுபோன்று நீரில் மூழ்கிய பழங்கால பொக்கிஷங்களை தேடி தேடி ஆவணப்படுத்தி வருகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த கோவில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. . 

 இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (INTACH) திட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் திர், இந்த கோவிலைப் பற்றிய முக்கிய தகவல்களை கூறியுள்ளார். மஸ்தகாவின் கட்டுமான பாணியை கொண்டுள்ள இந்த கோயில் 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 16ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். வெள்ளத்தில் மூழ்கிய கோவில் பழங்காலத்தில் இந்தப் பகுதி சதாபதனா என அழைக்கப்பட்டதாகவும், வெள்ளத்தால் நதி அதன் பாதையை மாற்றிக் கொண்டதால் கிராமம் முழுவதும் நீரில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய இடங்கள் குறித்த ஆவணமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்தில் இதுவரை 65 கோயில்களை கண்டுபிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் உள்ள தெய்வங்கள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டன. மகாவிஷ்ணு கோவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது கோபிநாத் தேவ் கோயிலாகும். மகாவிஷ்ணுவை வணங்குபவர்கள் கட்டிய பாரம்பரியமிக்க இந்த கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் அவர்களிடம்தான் உள்ளது என கூறியுள்ளார். மகாநதி பாயும் கோவில் இந்த திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட 800 நினைவுச் சின்னங்கள் குறித்த அறிக்கைகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதே போல் மகாநதி பாயும் 9 மாவட்டங்களிலும் பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நினைவுச்சின்னங்களை மீட்டெடுக்கும் ஆய்வு பழங்கால நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் அழிந்து விட்டதாகவும், சில சின்னங்கள் சிதைந்த நிலையில் கிடைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளம், இயற்கை சீற்றங்களால் ஆற்றின் போக்கு மாறி அதில் நிறைய கோயில்கள் மூழ்கியிருக்கலாம் என்றும், பல்வேறு நதிகளில் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

  இதுபோல இந்த பகுதியில் 22 கோவில்கள் மூழ்கியிருக்கலாம் என கிராம மக்கள் நம்புகின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் மஸ்தகா மட்டும் வெளிப்பட்டது. அதே போல தற்போதும் இந்த கோவில் மஸ்தகா வெளிப்பட்டுள்ளது. நம் ஊரில் கோவில் கோபுரங்கள் போல மஸ்தகா 60 அடி உயரம் வரை கட்டப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: