Friday, June 5, 2020

ட்ரம்பை எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்..


கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு மரணம் காரணமாக அமெரிக்காவில் இப்போதும் போராட்டம் நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதனால் அங்கு ஏற்பட்ட போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு ராணுவம் தற்போது வரை களமிறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் விதிப்படி அமெரிக்க மண்ணுக்குள் ராணுவத்தை களமிறக்க முடியாது. Insurrection Act என்ற அவசர சட்டத்தை அமலுக்கு கொண்டு வராத வகையில் அந்நாட்டு மண்ணில் ராணுவத்தை களமிறக்க முடியாது.

 இந்த நிலையில் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் ராணுவத்தை களமிறக்க ட்ரம்ப் முடிவு செய்து இருந்தார். Insurrection Act சட்டத்தையே கையில் எடுத்து, வாஷிங்டன் உள்ளே ராணுவத்தை களமிறக்க டிரம்ப் முடிவு செய்து இருந்தார். இதனால் 700 வீரர்கள் விமானம் மூலம் வேகமாக வாஷிங்டன் வந்தனர். விமானப்படை மூலம் இவர்கள் வாஷிங்டன் உள்ளே களமிறங்கினர்.

 ஆனால் இவர்கள் களமிறங்கிய 30 நிமிடத்தில் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். வாஷிங்டனில் இருந்து வேகமாக இவர்கள் திருப்பி வாஷிங்டனுக்கு வெளியே இருக்கும் ராணுவ மையத்திற்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்னணியில்  அந்நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் இருப்பதாக கூறுகிறார்கள். ராணுவத்தை களமிறக்குவது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முடிவை அந்நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் கடுமையாக எதிர்த்து உள்ளது

 அமெரிக்க மண்ணில் ராணுவத்தை கொண்டு வர கூடாது என்று பென்டகன் மிக உறுதியாக கூறி உள்ளது. பென்டகன் தலைவர் , பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இது தொடர்பாக நேரடியாக எதிர்த்து இருக்கிறார். என்ன நடந்தாலும் ராணுவத்தை உள்ளே கொண்டு வர கூடாது என்று கூறியுள்ளார். முதல்முறை பென்டகன் இப்படி நேரடியாக டிரம்பை எதிர்த்து உள்ளது. இது ட்ரம்பை நிலைகுலைய வைத்துள்ளது.

 Insurrection Act சட்டம் மூலம் யாருடைய அனுமதியும் இன்றி ஜனாதிபதி ராணுவத்தை நாட்டிற்குள் கொண்டு வர முடியும். ஆனால் ட்ரம்ப் அந்த சட்டத்தை பயன்படுத்த முயன்றும் கூட முடியாமல் போய் உள்ளது. அதோடு ட்ரம்பை எப்போதும் ஆதரிக்கும்  மார்க் எஸ்பர் கூட அவரை எதிர்த்துள்ளார். அந்நாட்டு ராணுவ தலைமையகமே அதிபர் ட்ரம்பின் பேச்சை கேட்கவில்லை. 

No comments: