அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம்
திகதி ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு மக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வரும் நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக பதவி வகித்த 77 வயதான ஜோ பிடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட ஏதுவாக நடைபெற்ற பிரைமரி தேர்தலில் மூவாயிரத்து 979 வாக்குகளில் ஆயிரத்து 991 வாக்குகளை பெற்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகி உள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.
இதேவேளை, ட்ரம்புக்கு ஆதரவளிக்க மாட்டேன் என அமெரிக்காவின்
முன்னாள் ஜனாதிபதி புஷ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment