அமெரிக்காவில் பொலிஸாரின்
வன்முறைக்கு ஜார்ஜ்
ஃபிளாய்ட் பலியானதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
அமெரிக்காவில்
பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த
ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ்
ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் பொலிஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பல
போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்ஜ்
ஃபிளாய்ட் மரணத்துக்கு மன்னிப்புக் கோரி
மியாமியில் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டனர். மேலும் போராட்டக்காரர்களைக் கட்டித் தழுவியும் ஆறுதல் கூறினர்.
ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்குக் காரணமாக இருந்த மினியா பொலிஸ் அதிகாரியின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மியாமி பொலிஸாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.
No comments:
Post a Comment