ஜார்ஜ் பிளாய்ட் பொலிஸ் காவலில் கொடூரமாக கொல்லப்பட்டதையடுத்து எழுந்த
நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஆதரவு தெரிவித்தவர்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை
விடுத்தார்.அதற்குப் பதிலடி கொடுத்த சியாட்டில் மேயர் ஜென்னி டுர்கன், பாதாள அறைக்குச் செல்லும்படி
ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கினார்
போராட்டம் வெள்ளை மாளிகை வாசலுக்குப்
பரவியபோது புலனாய்வு அமைப்பினர் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பான பாதாள
அறைக்கு ட்ரம்பை அழைத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகின.
கேப்பிடல்ஹில்
தன்னாட்சி மண்டலம் என்று சியாட்டில் மாகாணத்தின் ஒரு பகுதியை
ட்ரம்ப் அறிவித்தார். மேலும் ’உங்கள் நகரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் செய்யவில்லை எனில் நான் செய்வேன் என்றும் சியாட்டில் மேயர் ஜென்னி டுர்கன் என்பவரை மிரட்டும் தொனியில் பேசினார் ட்ரம்ப். இதே போல் வொஷிங்டன் கவர்னர் ஜேய் இன்ஸ்லி என்பவரையும் மிரட்டினார் ட்ரம்ப், அவர்கள் இருவருமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை உள்நாட்டு பயங்கரவாதிகள் என்று வர்ணித்த ட்ரம்ப் சியாட்டிலை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம் என்று ட்வீட் செய்தார்.
இதில் வாஷிங்டன் கவர்னரை தீவிர இடது சாரி கவர்னர் என்றும் ட்ரம்ப்
வர்ணித்தார். மேலும் போராட்டக்காரர்களை தன் ட்வீட்டில் ‘அசிங்கம்பிடித்த அராஜக வாதிகள்’ என்று வர்ணித்தார்.
இந்நிலையில் ஜானாதிபதி ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த
சியாட்டில் மேயர் ஜென்னி டுர்கன், “எங்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்க விடுங்கள், உங்கள் பதுங்கு குழிக்கே மீண்டும் செல்லுங்கள்” என்று பதிவிட வொஷிங்டம்
கவர்னர் இன்ஸ்லீ, “ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திறமை இல்லாத ஒரு நபர் வொஷிங்டன் மாநில விவகாரத்துக்குள் தலையிடக் கூடாது, என்று விமர்சித்தார்.
அமெரிக்காவில்
கறுப்பர்களுக்கு
எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து நிறவெறிப் போராட்டம் கடுமையாக நடைபெற்று வருகிறது, பெரும்பாலும் அமைதிப்போராட்டமாகவே நடைபெறுகிறது.
உலகம் ,போராட்டம், அமெரிக்கா,ட்ரம்ப்
No comments:
Post a Comment