உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், “வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு உட்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே பீஜிங்கில் சீன அறிவியல், தொழில்நுட்ப மந்திரி வாங் ஜிகாங் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர்,
“தடுப்பூசி மேம்பாடு, மருத்துவ பரிசோதனைகள், பயன்பாடு ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், பாதுகாப்பு, செயல்திறன், கிடைக்கும் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment