தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குநர், கதாசிரியர் எனப் புகழப்பட்டவ்ர்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அவருடைய " சித்தி" படம் வெற்றி பெற்று ரசிகர்களால்
போற்றப் பட்ட நேரம், ஜி. பாலசுப்பிரமணியம்
எனும் கதாசிரியர் சென்று அவரைச் சந்தித்தார்.
தனக்கு அவசரமாக மூவாயிரம் ரூபா தேவைப் படுவதாகவும் அதற்குப் பதிலாக ஒரு கதையைத் தருவதாகவும்
தெரிவித்தார்.
சிவாஜியின் "அன்னை இல்லம்","பாலும் பழமும்", எம்.ஜி.ஆர் நடித்த"கலங்கரை விளக்கம்", "ரகசிய பொலீஸ் 115 ஆகியவற்றின் கதாசிரியர்தான் ஜி.பாலசுப்பிரமணியம். அவர் கேட்ட மூவாயிரம் ரூபாவைக் கொடுத்துவிட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிறிது நேரம் உரையாடினார்.அப்போது திமிர் பிடித்த பெண் பற்றிய ஒரு கதையை ஜி.பாலசுப்பிரமணியம் சொன்னார். ஏழைகள் முகத்தில் விழிப்பதே பாவம் என நினைத்து அவர்களை வெறுக்கும் பணக்கார பெண்ணின் கதை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குப் பிடித்து விட்டது.
இந்தக் கதை நன்றாக இருக்கிறது.இதையே
படமாக்குகிறேன் என்றார். கதாசிரியர்ஜி.பாலசுப்பிரமணியம்
சொன்ன திமிர் பிடித்த பணகாரியின் பாத்திரத்தைப்
பற்ரி பத்து நாட்களாக க் கதைக் கருவைச் சொன்னஜி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து தனது திரைக்கதையை
விவரித்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். ஜி.பாலகிருஷ்ணன்
திரைக்கதையைப் பாராட்டினார். இருவரும் ஒரு மாதம் விவாதித்ததில் வசனம் உருவாகியது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் அலுவலகத்துக்குச்
சென்ற கவிஞர் கண்ணதாசனிடம் திமிர் பிடித்த பணக்காரியின் கதையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
கூறினார். படம் பிரமாதமாக இருக்கிறது வெற்றி பெரும் என கண்ணதாசன் கூறினார்.
நம்பிக்கையுடன் நடிகர்களைத் தெரிவு செய்ய ஆரம்பித்தார் கே.எஸ்.கோபலகிருஷ்ணன்.
கதாநாயகன் ஜெமினி.கதாநாயகி சரோஜாதேவி. திமிர்பிடித்த
பணக்காரியாக எஸ்.வரலட்சுமி. எடுப்பான தோற்றம், எடுத்தெறிந்து பேசும் குணம் அனைத்தும் எஸ்.வரலட்சுமிக்கு கன கச்சிதமாகப்
பொருந்திவிட்டது. அப்பா வேடம் என்றால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கண்ணை மூடிக்கொண்டு எஸ்.வி
ரங்கராவைத்தான் தெரிவு செய்வார். ஆனால், பிரதான பாதிதிரமான எஸ். வரலட்சுமிக்கு கணவனாக
எஸ்.வி.ரங்கராவைத் தேர்வு செய்ய முடியாது. வரலட்சுமியின் கணவனாக ரங்கராவை ரசிகர்கள்
ஏற்ருக்கொள்ள மாட்டார்கள் என்பதால் கணவனாக டி.கே.பகவதியைத் தேர்வு செய்தார்.
ஜெமினி,சரோஜாதேவி,எஸ்.வரலட்சுமி,டி.கே.பகவதி,நாகேஷ் ஆகியோரின் படங்களுடன்
"பணமா பாசமா" எனும் புதிய திரைப்பட விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது.
விளம்பரத்தைப் பார்த பலரும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் அலுவலக தொலைபேசியில் எதிர்மறையான
விமர்சனங்களைத் தெரிவித்தனர்.
"கலியாணமானதும் சரோஜாதேவியின் மாக்கற் குறைந்து விட்டது. உனக்கென்ன
மூளைக் கோளாறா?"
"சித்தி படம் வெற்றி
பெற்றதால், நீ எடுக்கும் படம் எல்லாம் வெற்றிப்படமாகுமா?"
"வரலட்சுமியையும், பகவதியையும் யாருக்குத் தெரியும்?"
"உடனடியாக நடிகர்களை மாத்து. இல்லையேல் தோல்விப்படம்தான்."
எதிர் மறை விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் படப்பிடிப்பைத் தொடர்ந்தார் கோபாலகிருஷ்ணன். இயக்குநர்
எதிர்பார்த்தது போன்று வரலட்சுமி நடிக்கவில்லை. படத்தின் அச்சாணியே வரலட்சுமிதான்.இயக்குனர்
சொல்வதைக் காதில் வாங்காமல் ஏனோ தானோ என்று வரலட்சுமி நடித்தார்.கோபாலகிருஷ்ணனின் எதிர்பார்ப்பு
வீணானது. வரலட்சுமி இப்படி நடித்தால் படம் தோல்வியடைந்து விடும் என சக நடிகர்களும் கோபாலகிருஷ்ணனுக்கு நாசூக்காக எடுத்துச் சொனார்கள்.
இனியும் வரலட்சுமியை நம்பமுடியாது
என்பதால் வேறு ஒரு நடிகைஅயித் தேடினர் கோபாலகிருஷ்ணன் . சாவித்திரி இதற்குப் பொருத்தமாக
இருப்பார் என நினைத்த கோபாலகிருஷ்ணன், நேராக அவரிடம் சென்று தனது சிக்கலான பிரச்சினையைக் கூறினார். எல்லாவற்றையும்
பொறுமையாகக் கேட்ட சாவித்திரி, திமிர் பிடித்த
பணக்காரியின் பாத்திரத்தில் தான் நடிப்பதாக இருந்தா கதாநாயகனான ஜெமினியை மாற்ற வேண்டும் என்றார்.
கணவனான ஜெமினியை மருமகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். சாவித்திரி
சொன்னதன் பின்னரே அந்த உண்மை கோபாலகிருஷ்ணனின் மனதில் உதைத்தது.
சாவித்திரி பிரச்சினையைத் தீர்ப்பார் என கோபாலகிருஷ்ணன் எதிர்பார்த்தபோது
அவர் புதுப் பிரச்சினை ஒன்றைக் கிளப்பிவிட்டார்.அதில் இருந்து எப்படி மீளுவதெனத் தெரியாது
கோபலகிருஷ்ணன் குழம்பியபோது சாவித்திரி சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.
" எஸ். வரலட்சுமி சிறந்த நடிகை. பல படங்கலில் அதை நிரூபித்துள்ளார். நல்லதொரு பாடகி என்பது மேலதிக திறமை. அவர் என்ன பிரச்சினையில் இருக்கிறார் எனத் தெரியாது. நீங்கள் போய் நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கள் நாளை காலையில் நீங்கள் எதிர்பார்த்ததுபோல அவர் நடிக்க வில்லை என்றால் நான் நடிக்கிறேன். ஜெமினியை மாற்ரி விடுங்கள். ஜெமினிக்காக யர் நடிப்பதென்பதை ஜெமினி தீர்மானிக்கட்டும்" என சாவித்திரி கூறினார்.
இரவு முழுவதும் கோபாலகிருஷ்ணனுக்குத் தூக்கம் வரவில்லை. இரவு
11 மணிக்கு வரலட்சுமியின் வீட்டுக்கு கோபாலகிருஷ்ணனின்
கார் சென்றது. படப்பிடிப்புத் தளத்தில் கதைப்பதைவிட வீட்டில் கதைத்தால் சுமுகமாகத் தீர்க்கலாம் என்ற
எண்ணத்துடன் அங்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வரலட்சுமியின் வீட்டில் இருந்து
சாவித்திரி வெளியே வந்தார்.
"நீங்கள் எதிர் பாத்த மாதிரி நாளைக்கு வரலட்சுமி நடிப்பார்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாகத் தூங்குங்கள் " எனச் சொல்லி சாவித்திரி
அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்.
மறுநாள் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் வியந்தனர். நேற்று வரை சொதப்பிய வரலட்சுமியா இது என அதிசயத்துடன் பார்த்தனர்.
பணமா பாசமா படத்தில் வரலட்சுமியின் பாத்திரம் பேசப்பட்டது. அவரது நடிப்பின் பின்னால் சாவித்திரி இருந்தது எவருக்கும் தெரியாது. தான் ந்டிக்காத ஒரு படத்தில் இன்னொரு நடிகை சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக இரவு சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவரைத் தயார்ப் படுத்திய அந்தப் பெருந்தன்மை உள்ள ஒருவரைக் காண்பது அரிது.
“இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் பற்றி இன்றைய தலைமுறையினருக்குப்
பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘பேசும் தெய்வம்’, ‘பணமா பாசமா’, ‘ஆதிபராசக்தி’,
‘நத்தையில் முத்து’, ‘கை கொடுத்த தெய்வம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை எடுத்தவர்.
அந்தக் காலத்தில் குடும்பக்கதைகள் என்றால் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். இன்றைக்கு வரைக்கும்கூட
அவருக்கு இணையாக குடும்பக்கதைகள் எடுக்க ஆளில்லை. மதுரை தங்கம் தியேட்டரில்தான் படம் ரிலீஸானது.
அந்தக் காலத்தில் மிகப்பெரிய தியேட்டர் என்றால் தங்கம் தியேட்டர்தான். ‘பராசக்தி’ திரைப்படம்தான்
முதன்முதலில் அங்கு வெளியாகியது. மூன்று தியேட்டர்களை ஒரே தியேட்டர் ஆக்கியிருந்தார்கள்.
முதலில் திரையிடப்பட்ட ‘பராசக்தி’ திரைப்படம் அந்தத் திரையரங்கில் மட்டுமே நூறு நாட்களுக்கும்
மேல் ஓடியது. ‘பணமா பாசமா’ திரைப்படம் வெளியானபோதும் நூறு நாட்களுக்கும்மேல் ஓடி சாதனை
படைத்தது. கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு இயக்குநர் திலகம் என்று ஒரு பட்டமும் இருந்தது.
அந்தப் பட்டத்திற்கு முழுக்கத் தகுதியான அவர், உணர்வுப்பூர்வமான காட்சிகள் வடிவமைப்பதில்
மிகவும் திறமையானவர். ‘
No comments:
Post a Comment