அத்தியாவசியப்
பொருட்களின் தட்டுப்பாடு விலை ஏற்றம் என்பனவற்றைத்
தடுக்க அரசங்கம் எடுத்த முயற்சிகள் எவையும்
கைகொடுக்கவில்லை. அரிசி,சீனி,பருப்பு,பால்மா,எரிவாயும்,எரிபொருள்,
மருந்து என்பனவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும்,
அதே விலையில் அவற்றைப் பெறுவது மிகவும் சிரமமாக
உள்ளது. சில பொருட்கள் கள்ளச்
சந்தையில் தாராளமாகக் கிடைக்கிறது. இரண்டு மூன்று நாட்கள்
வரிசையில் நின்று டீசல்,
பெற்றோல் வாங்குவதை விட கூடுதல் விலையில்
அவற்றை வாங்க பலர் விரும்புகிறார்கள்.
முட்டைவிலை
கிடு கிடு என உயர்ந்து விட்டது. அதனைக் கட்டுப்படுத்த
அரசாங்கம் எடுத்த கடும்
முயற்சி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முட்டையின்
விலையை வர்த்தமானியில் வெளியிட்டதால்
பண்ணையாளர்கள் கடுப்படைந்துள்ளனர். இலங்கையின் வரலாற்ரில் முதன் முதலாக முட்டைக்குக்
கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. புரதம், விற்றமின்
அடங்கிய விலை குறைவான போஷாக்கு
உணவான முட்டையை
வைத்து அரசியல் செய்யப்படுகிறது. சிறுவர்,நோயாளிகள், முதியவர் என அனைவருக்கு தேவையான
உணவு முட்டை. அதே வேளை,
மிக இலகுவாகவும், முறைந்த விலையிலும் வாங்கக்கூடிய
பொருள்.
ஒரு
வெள்ளை முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை (MRP)ரூ.
43 மற்றும் பழுப்பு முட்டைக்கு ரூ.
45 விதித்தது. இதனால், சந்தையில் முட்டை
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர்
விவகார ஆணையத்துடன் (CAA), முட்டை உற்பத்தியாளர்கள் நடத்திய
கூட்டத்தில், இரண்டு வகையான முட்டைகளையும்
ஒரு முட்டையின் திருத்தப்பட்ட விலையான 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய அனுமதிக்க
ஒப்புக்கொண்டனர், வர்த்தக
அமைச்சர் நளின் பெர்னாண்டோவும் அந்தக்
கூட்டத்தில் கலந்து கொண்டார்.
திருத்தப்பட்ட புதிய விலையில் முட்டையை உடனடியா விற்க முடியாத நிலை உள்ளது. விலை முறைப்பு பற்ரிய அறிவித்தலை வர்த்த மானியில் வெளியிட வேண்டும். உடனடியாக வெளியிடுவதால் அரசாங்கத்தின் அவசரம் பகிரங்கமாகிவிடும் என்ற நிலை உருவாகி உள்ளது. அடிக்கடி வெர்தமானிவெளியிட்டவர் கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கக 'வர்த்தமானி ஜனாதிபதி' என்று அழைக்கப்பட்டார், சில நாட்களுக்குப் பிறகு மக்கள் எதிர்ப்பு காரணமாக அதை ரத்து செய்தார். எனவே, முட்டை விலை தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்து, புதியவர்த்தமானி வெளியிடப்பட்டால் தமக்குக் அப்பெயர் சூட்டப்படுமோ என அச்ச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்லது போலும்.
தங்களின்
ஈகோவை முதன்மைப் படுத்தும் இதுபோன்ற புசிஃபூட் அதிகாரிகளுக்கு எதிராக அவர்களின் அந்தஸ்து
பாராமல் நடவடிக்கை எடுக்க சட்டங்கள் அரசிதழில்
வெளியிடப்பட வேண்டும்.
இலங்கைக்குத்
தேவையான முட்டை, கோழி என்பன சுதந்திரத்துக்கு
முன்னர் இந்தியாவில்
இருந்து இ?றக்குமதி செய்யபட்டது.
1953 இல்
இலங்கையின் முதல் அந்நியச் செலாவணி
(Fக்ஷ்) நெருக்கடியுடன் இணைந்து, அத்தகைய இறக்குமதிகள் கைவிடப்பட்டு
உள்ளூர் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. தற்போது, முட்டை மீதான இறக்குமதி
வரிகள் ஒரு கிலோவுக்கு ரூ.110
என்ற பொது வரியாகவும், 12 சதவீத
வாட் கட்டணமாகவும், 10 சதவீத 'பிஏஎல்' வரியாகவும்
இருப்பதால், முட்டை இறக்குமதியை 'திறம்பட'
தடுக்கிறது.
மோசமான
பொருளாதார நெருக்கடி இருப்பதால முட்டைக்கான இறக்குமதி
வரி குறைக்கபடுவதற்கான சாத்தியப்பாடு இல்லை.
இந்த நிலையில் தொலைபேசி,கணினி,பிரெய்லி தட்டச்சுப்பொறிகள், மின்சார
உபகரணங்கள் போன்ற பல பொருட்களின் இறக்குமதிக்கு அரசாங்கம்
தடை விதித்குள்ளது. இந்தத் தடையால் கையிருப்பில்
உள்ள பொருட்கள் மாயமாக
மறைந்து விடும். கண்ணுக்குத் தெரியாத
வகையில் அவற்றின் விலை கிடு கிடு
என உயர்ந்து
விடும்.
கால்நடை
தீவன தட்டுப்பாடு காரணமாக கோழி, முட்டை
என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி
மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.டொலர் தட்டுப்பாடு காரணமாக
கடன் கடிதம் வழங்க முடியாமல்
கோழி தீவனம் உள்ளிட்ட பொருட்களை
இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.நாட்டில் உள்ள பல கோழி
மற்றும் முட்டை பண்ணைகள் ஏற்கனவே
மூடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல மூடப்படும்
என கால்நடை தீவன உற்பத்தியாளர்
சங்கத்தின் செயலாளர் சுசில் குமார ஹீன்கெந்த
தெரிவித்தார்.
மக்காச்சோள
தட்டுப்பாடு ,மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்கு
காரணம் என சங்கத்தின் தலைவர்
அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.விலங்கு
தீனிக்காக வருடந்தாந்தம் 300 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது. இவ்வாறான
நிலையில் மாதாந்தம் 30 மில்லியன் டொலராவது விலங்கு உணவிற்காக வழங்குமாறு
நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை உணவுப் பொருட்கள் கிடைக்காமையால் பண்ணையாளர்கள் சிரமப்ப்டுகின்றனர். போதிய உணவு இல்லாமையால் பால் சேகரிப்பு குறைந்துள்ளது. பெற்றோல் டீசல் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசங்கம் இவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment