தமிழகத்தில் எதிர்க் கட்சியாக இருந்தபோது பாரதீய ஜனதாக் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது மென்மையான போக்கைக் கடைப் பிடிக்கிறது. எதிர்க் கட்சி அரசியலுக்கும் ஆளும் கட்சி அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசாங்கம் மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளது.
பிரதமர் மோடியை மேடையில்
வைத்துக் கொண்டு மத்திய அரசை
விமர்சிப்பதையும், சந்தர்ப்பம்
கிடைக்கும்போது பாராட்டுவதையும் எப்படிக்
கணக்கில் எடுப்பது எனத் தெரியாமல் திராவிட
முன்னேற்றக் கழகத்தை விமர்சிப்பவர்கள் தடுமாறுகின்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா
நாயுடுவை வாழ்த்தி வரவேற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்
தலைவர்கள் பிரதமர் மோடியை
ஈவு இரக்கம் இல்லாமல் விமர்சிக்கின்றனர்.
இரு கட்சிகளுக்கும் இடையே நீடிப்பது, ‘சண்டையா சமாதானமா?’
என்கிற கேள்வியை விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.. இந்தக் குழப்பத்தைத் தீர்க்கும்
முயற்சியாக, ‘ஒரே நாடு, ஒரே
மொழி’ கொள்கைக்கு எதிராக மீண்டும் உரக்கப்
பேசியிருக்கிறார் ஸ்டாலின். பா.ஜ.க
தலைவர் அண்ணாமலையிடமிருந்தும் தி.மு.க-வைக் கண்டித்து அறிக்கை
வந்திருக்கிறது.
பா.ஜ.க-வை தி.மு.க விமர்சித்த அளவுக்கு வேறெந்த மாநிலக் கட்சியும் கடுமையாக விமர்சித்ததில்லை. பிரதமரின் கடந்தகால வருகையின்போது, கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டதில் தொடங்கி, சமூக வலைதளங்களில் ‘GoBackModi’ பதிவுகளை உலகளவில் டிரெண்ட் செய்தது வரை தி.மு.க-வின் தாக்குதல்கள் அதிரடியாகவே இருந்தன. 2022, மே 26 ம் திகதி மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகளைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோதுகூட, முதல்வர் ஸ்டாலினின் உரையில் சூடு பறந்தது. பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டே, 16 முறை ‘ஒன்றிய அரசு’ என அழுத்தமாக உச்சரித்தார் முதல்வர். ஜி.எஸ்.டி நிதிப் பங்கீடு, அலுவல் மொழியாகத் தமிழ் மொழி எனக் கோரிக்கைகளை அடுக்கினார். அந்தத் தீப்பொறிப் பேச்சுகளெல்லாம், செஸ் ஒலிம்பியாட் விழாவுக்காக பிரதமர் மோடி வந்தபோது இல்லை. அதைப்போலவே, தொட்டதுக்கெல்லாம் தி.மு.க அரசை விமர்சிக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவைச் சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு, பா.ஜ.க-வினரையே அதிரவைத்தார். சிந்தாந்தப் போராக நீடித்த பா.ஜ.க - தி.மு.க மோதலில், தலைமைகளின் இந்த மனமாற்ற நடவடிக்கைகளால் தொண்டர் களிடையே குழப்பம் அதிகரித்திருக்கிறது. கூட்டணிக்குள்ளும் சலசலப்புகள் எழுந்திருக் கின்றன.
செஸ் ஒலிம்பியாட்டுக்கு பிரதமர்
மோடி வந்ததில் இருந்து இரன்டு கட்சிகளும்
கூட்டணி சேரப்போவதாக யூகங்கள் கிளம்பின. ராகுல்
காந்தி அண்னா திராவிட முன்னேற்றக்
கழகத்துடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் வதந்திகள்
பரவின. காங்கிரஸை வெளியேற்றி விட்டு பாரதீய ஜனதாவை
உள்ளுக்குக் கொண்டுவர
திமுக முயற்சிப்பதாக செய்திகள் பரவின.
ர்வதேச செஸ் ஒலிம்பியாட்
போட்டிக்காக சென்னை நகரம் முழுவதும்
விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், பிரதமர் மோடி படம்
இடம்பெறவில்லை என்பதற்காக, ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தை பா.ஜ.க-வினர் ஒட்டினர். இதற்கு,
பலவாறாக எதிர்ப்புகள் கிளம்பியபோதும், தமிழ்நாடு பொலிஸார் பா.ஜ.க-வினரை எங்குமே தடுத்து
நிறுத்தவில்லை. ஆனால், தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், ஒட்டப் பட்ட மோடி
படத்தின்மீது கறுப்பு மையைப் பூசினார்கள்.
உடனே மை பூசியவர்களைக் கைதுசெய்தது
காவல்துறை. இந்தக் கைது நடவடிக்கையைக்
கண்டித்து, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமிருந்து சூடான அறிக்கையும் வந்தது.
செஸ் ஒலிம்பியாட்டுக்கு பிரதமர்
மோடி வந்ததில் இருந்து இரன்டு கட்சிகளும்
கூட்டணி சேரப்போவதாக யூகங்கள் கிளம்பின. ராகுல்
காந்தி அண்னா திராவிட முன்னேற்றக்
கழகத்துடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் வதந்திகள்
பரவின. காங்கிரஸை வெளியேற்றி விட்டு பாரதீய ஜனதாவை
உள்ளுக்குக் கொண்டுவர
திமுக முயற்சிப்பதாக செய்திகள் பரவின.
ர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை நகரம் முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என்பதற்காக, ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தை பா.ஜ.க-வினர் ஒட்டினர். இதற்கு, பலவாறாக எதிர்ப்புகள் கிளம்பியபோதும், தமிழ்நாடு பொலிஸார் பா.ஜ.க-வினரை எங்குமே தடுத்து நிறுத்தவில்லை. ஆனால், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், ஒட்டப் பட்ட மோடி படத்தின்மீது கறுப்பு மையைப் பூசினார்கள். உடனே மை பூசியவர்களைக் கைதுசெய்தது காவல்துறை. இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமிருந்து சூடான அறிக்கையும் வந்தது.
மோடியும் ஸ்டாலினும் மெடையில் சிரிதுப்
பேசியது பலரையும் கலங்கடிக்கச் செய்துள்ளது. எடப்பாடியுடனோ அல்லது பன்னீருடனோ மேடையில்
இப்படி கையைப் பிடித்து மோடி
பேசியதில்லை. செஸ் விழா மேடையில்
பிரதமருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின், தனது பேச்சின்போது, ‘20,000 வீரர்களை வைத்து
இதற்கு முன்பாக செஸ் போட்டியை
நடத்தியவர் மோடி’ என்று புகழ்ந்து
தள்ளினார். செஸ் போட்டிக்கான நிதியை
மத்திய அரசு கொடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது,
போட்டி நடப்பதற்கு உறுதுணை வகித்ததாக மத்திய
அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டிய அவசியமென்ன
என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘கோ பேக் மோடி’
என்கிற வாசகத்தை உலக அளவில் டிரெண்ட்
செய்தது தி.மு.க.
ஆனால், இந்த முறை பிரதமருக்கு
எதிரான பதிவுகள் கண்காணிக்கப்படுவதாக சென்னை பொலிஸ் கமிஷனரைவைத்து
எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.. சொந்தக் கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட்
செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அமைச்சர் ஐ.பெரியசாமியை ஆறு
மணி நேரம் அமலாக்கப் பிரிவு
விசாரித்திருக்கிறது. தன் கட்சிக்கு எதிராக
இப்படியொரு நடவடிக்கையை பா.ஜ.க
அரசு எடுத்துவரும் நிலையில், முதல்வரும் பிரதமரும் நீண்டகால நண்பர்கள்போல அளவளாவியது, தி.மு.க-வுக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் தேவையற்ற குழப்பத்தை விதைத்திருக்கிறது. அதேநேரம், விழா மேடை யிலேயே,
‘குறுகியகாலத்தில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தமிழ்நாடு அரசுக்குப்
பாராட்டுகள்’ என்று புளகாங்கிதம் அடைந்திருக்
கிறார் மோடி.
அரசியலில் இதெல்லாம் சகஜம் எனபது கவுண்டமணியின்
தத்துவம் ஸ்டாலினும், மோடியும் அதைத்தான் செய்துள்ளனர். ‘பா.ஜ.க-வும் தி.மு.க-வும் சமாதான
கீதம் பாடுகிறார்கள்’ என்கிற கருத்துரு பரவிய
நிலையில், காங்கிரஸ் வட்டாரத்தில் அனல் கிளம்பியது. தவிர,
தி.மு.க-வின்
தொண்டர்களும், திராவிட மாடல் சித்தாந்தத்தை
ஆதரித்துப் பேசும் அமைப்புகளும் குழம்பிப்போயின.
குழப்பத்தைத் தீர்க்கும்விதமாக, ஜூலை 30-ம் தேதி
கேரள மலையாள மனோரமா சேனல்
நடத்திய கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
மலையாளத் திலும் உரையாடி பார்வையாளர்களைக்
கவர்ந்த வர், மாநில சுயாட்சி
தொடங்கி ஜி.எஸ்.டி.,
புதிய கல்விக் கொள்கையின் தாக்கங்கள்
குறித்தும் உரையாற்றினார். ‘ஒரே நாடு, ஒரே
மொழி என்று கூறுவோர் இந்தியாவின்
எதிரிகள்’ என்று முதல்வர் பேசியது
டிரெண்ட் ஆனது. ‘ஆளுநர்கள் மூலம்
இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது
பா.ஜ.க தலைமை’
என்று முதல்வர் குறிப்பிட்டது தேசிய அளவில் கவனம்
ஈர்த்தது. நிகழ்ச்சியில், தி.மு.க
கூட்டணி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,
“இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. கொள்கைக்கான
கூட்டணி. தி.மு.க
தலைமை யிலான ஆரோக்கியமான கூட்டணி
தொடரும்” என விளக்கம் கொடுத்தார்
ஸ்டாலின்.
தன் நிலைப்பாட்டை முதல்வர்
விளக்கி விட்டாலும், பா.ஜ.க-வினர்தான் பெரிய அளவில் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
செல்லுமிட மெல்லாம், ‘நாங்கள்தான் தி.மு.க-வுக்கு மாற்று... நாங்கள்தான்
பிரதான எதிர்க்கட்சி’ என்று கூறிவந்தார் அண்ணாமலை.
ஆனால், முதல்வ ருடன் பிரதமர்
மோடி அளவளாவிய விதமும், தி.மு.க
அமைச்சர் துரைமுருகனின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்
உடல்நலத்தை விசாரித்ததும், தி.மு.க
எம்.பி கனிமொழியிடம் அவர்
தாயின் உடல்நலத்தைப் பாசத்தோடு கேட்டறிந்ததும் பல குழப்பங்களை பா.ஜ.க-வுக்குள்
ஏற்படுத்தியிருக்கின்றன. உச்சகட்டமாக, ஜூலை 31-ம் திகதி
குடியரசுத் தலைவரின் கொடியைத் தமிழ்நாடு காவல்துறைக்கு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கில்
நடைபெற்றது. விழாவில் பேசிய குடியரசு துணைத்
தலைவர் வெங்கைய நாயுடு, ‘தமிழ்நாடு
இந்தியா வின் எலைட் மாநிலமாகத்
திகழ்கிறது. இந்தியா விலேயே சிறந்த
காவல்துறையாகத் தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது’ என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.
மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார். இடையில் இருப்பவர்கள் விடும் அறிக்கையினால் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
No comments:
Post a Comment