எம்.ஜி.ஆரின் வெற்றிப் பட வரிசையில் "நாடோடி மன்னன்" - க்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு,இயக்கம்,நடிப்பு ,இரட்டை வேடம் , அரசபடம் போன்ற பல சிறப்புகள் உள்ள படம். கன்னடத்துப் பைங்கிளி என பின்னாளில் செல்லமாக அழைக்கப்பட்ட சரோஜாதேவி கதாநாயகியாக அறிமுகமான படம். மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற "நாடோடிமன்னன்" மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வெளியானது.
கதாநாயகியாக நடித்த பி.பானுமதி யுடனான பிரச்சினை., இரண்டு இயக்குநர்கள் இடையில் கைவிட்டமை,
இசையமைப்பாளர் மாற்றம் என பல தடங்கல்களுக்கு மத்தியில் படப்புடிப்பு நடைபெற்றதால் நாடோடி
மன்னன் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. படம் தோல்வியடைந்தால் நாடோடி. வெற்றி
பெற்றால் மன்னன் என எம்.ஜி.ஆரை பலரும் கிண்டல்
செய்தனர். வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் என்பதை நினைவூட்டிய படம் நாடோடி மன்னன்.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை பானுமதி. அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர். தமிழ்,தெலுங்கு என இரண்டு சினிமாக்களிலும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். அன்றைய கதாநாயகனை விட மதிப்பிலும் மரியாதையிலும் உயர்ந்து நின்றவர். மிகச் சிறந்த பாடகி. பி.பானுமதியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கதாநாயகர்கள் ஆசைப்பட்டனர். கையைத் தொட்டு நடிப்பதானாலும் அவரிடம் அனுமதி பெற வேண்டும்.
பி.பானுமதி, எம்.ஜி.ஆர் ஜோடி நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் நாடோடி
மன்னனிலும் பானுமதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மதனா என்ற கழைக்கூத்தாடி வேடம் பானுமதிக்கு
கொடுக்கப்பட்டது. முத்துக் கூத்தன் எழுதிய
"ஆண்டவன் எங்கே? அரசாண்டவன் எங்கே?" என்ற பாடலுக்கு என்.எஸ். பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். பாடல் ஒலிப்பதிவின் போது இசையில் சில மாற்றங்களைச் செய்யும்படி எம்.ஜி.ஆர்
வேண்டுகோள் விடுத்தார். அப்படி மாற்றினால்
ராகத்தின் தன்மை மாறிவிடும் என பானுமதி சொன்னார்.
இது சினிமா . மேடைக் கச்சேரி இல்லை. ரசிகர்களுக்கு புரியும்படி இருக்க வேண்டும். ராகம்
மாறினால் பரவாயில்லை என்றார் எம்.ஜி.ஆர். பாடகியான
பானுமதி , இசையைப் பற்ரி எனக்கு உங்களை விட அதிகம் தெரியும் என்றார். அதன் பின்னர் எதுவும் சொல்லாத எம்.ஜி.ஆர் எழுந்து போய்விட்டார்.
பிரச்சினைக்குரிய அந்தப் பாடல் படத்தில் இருந்து
நீக்கப்பட்டது. படம் வெளியானபோது எம்.எஸ்.சுப்பையா
நாயுடு இசையமைத்தார்.
நாடோடி மனனை இயக்குவதற்கு
கொஞ்சும் சலங்கை பட இயகுநர் வி.ராமனை எம்.ஜி. ஆர் தேர்ந்தெடுத்தார். வேறு ஒரு
படத்தை இயக்குவதில் அவர் தீவிரமாக இருந்ததால், எம்.ஜி.ஆர் இயக்குவதற்கு முடிவெடுத்தார். இயக்குநர் கே.சுப்பிரமணியத்தை
மேற்பார்வை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். இரண்டு மூன்று நாட்கள் எம்.ஜி.ஆர் இயக்குவதை மேற்பார்வை
செய்த கே.சுப்பிரமணியம் , நீங்கள் சிறப்பாகச் செயற்படுகிறீர்கள். மேற்பார்வை தேவையில்லை
. தொடர்ந்து இயக்குங்கள் என உற்சாகமூட்டினார். படப்பிடிப்புவேகமாக நடந்தது.
பானுமதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையிலான மோதல்களும் அடிக்கடி நடை பெற்றன. எம்.ஜி.ஆர் எதிர்
பார்த்தது போல பனுமதி நடிக்கவில்லை. பல முறை
படமாக்கப்பட்டும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் கோபமடைந்த பானுமதி, சுப்பிரமணியம் போன்ற நல்ல இயக்குநரிடம் படத்தை கொடுத்திருக்கலாம் எனப் பொருள்
படப் பேசினார். எம்.ஜி.ஆர் நேரடியாக பனுமதியைப் பகைக்கவில்லை. ஆனால், அவர் மனதில் கோபம் இருந்தது. கதாநாயகி இல்லாமல் கதை எழுத முடியாதா
எனக் கதாசிரியரிடம் கேட்டார்.
பானுமதிக்கும் , எம்.ஜி.ஆருக்கு இடையேயான பிராசினையால் கதையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் பகுதியில் தங்கையைத்
தேடி ரத்தினபுரிதீவுக்குச் செல்வதாக கதை மாற்றப்பட்டது.
தங்கையாக நடிக்க புஷ்பலதா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ரத்தினபுரி இளவரசி எம்.ஜி.ஆரைக் காதலிப்பதாக
கதையில் மாற்றம்செய்யப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அது பிடித்துவிட்டது. ரத்தின புரிதீவு
இளவரசியாக யாரைப் போடுவது என ஆலோசிக்கப்பட்டபோது பலரும் சரோஜாதேவியைச் சிபார்சு செய்தார்கள். ஏற்கெனவே
ஒரு பாடல் காட்சிய்ல் சரோஜாதேவி நடித்ததால் என்ன செய்ததென்ற குழப்பம் ஏற்பட்டது. அந்தப்
பாடல் காட்சியை மீன்டும் படமாக்க வேன்டும்
என்ற யோசனையை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ளவில்லை.தயாரிப்பு
செலவு அதிகமானதால் தயங்கினார். எம்.ஜி.ஆரின் மனம் மாரியதால் சரோஜாதேவி எனும் கதாநாயகி கிடைத்தார்.
அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் நடித்தபோது, ’தி பிரிசனர்
ஆஃப் ஜெண்டா’ படத்தின் கருவைக் கொண்டு தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக பானுமதியிடம்
தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அதைக் கேட்டதும், தனது நிறுவனத்தில் அந்த கதையை அப்படியே
படமாக்கவிருப்பதாகப் பதிலளித்தார் பானுமதி.பிடிவாதம் அதிகமுள்ளவர் பானுமதி என்பது திரையுலகத்தில்
அப்போது கோலோச்சியவர்கள் அறிந்த விஷயம். ஆனாலும், இரட்டை வேடங்களின் பின்னணியை மட்டுமே
ஆங்கிலப் படத்தில் இருப்பது போல அமைப்பதாகத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
மாற்றான் மனைவியுடன் கூடுவது உள்ளிட்ட ஒரிஜினல் படத்தில் இருந்த காட்சிகளை, தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றவாறு தான் மாற்றியதாக விளக்கமளித்தார். அதைக் கேட்டு மனம் மாறிய பானுமதி, பல நாட்களுக்குப் பின் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.மிகுந்த நிம்மதியுடன் தனது படத்தின் டைட்டிலை தினசரிகளில் வெளியிட்டார் எம்.ஜி.ஆர். அவர் தேர்ந்தெடுத்த டைட்டில் ‘உத்தமபுத்திரன்’. அவருக்கு ஜோடியாக சாவித்திரி நடிப்பதாக இருந்தது.
அதே நாளில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘உத்தமபுத்திரன்’ பட விளம்பரமும்
வெளியானது. ஏற்கனவே பி.யு.சின்னப்பா நடிப்பில் ’உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளியாகியிருந்த
நிலையில், அதே கதை சில மாற்றங்களுடன் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.அதனால்,
டைட்டிலை மாற்றி ‘நாடோடி மன்னன்’ என்ற பெயருடன் வாஹினியிலும் விஜயாவிலும் ஏகப்பட்ட
செட்கள் அமைத்து படமாக்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை
போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை
அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன். 1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.
தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய
முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான்.
இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு
உண்டு. இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை
கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு
மாறியதாம் நாடோடி மன்னன். இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார்.
சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது
கூறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத்
தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில்
மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது. அந்தஅளவுக்கு
அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய
பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே
மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து
எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.எம்.ஜி.ஆரின் அரசியலுக்கு அடிகோலியபடம் நாடோடிமன்னன்.
No comments:
Post a Comment