Monday, August 29, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 32


  தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், காமெடியன் ஆகிய பாத்திரங்களில்  நடிப்பவர்கள் தொடர்ந்தும் அதே பாத்திரங்களில் நடிப்பார்கள். விதி விலக்காக சிலர் மாரி நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள். சிவாஜி கணேசன் கதாநாயகனானக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபோதுவில்லனாக நடித்து அசத்தினார்.இளம் வாலிப வயதில்  62 வயது  முதியவராக வி.கே.ராமசாமி நடித்தார். நகைச்சுவை நடிகரான நாகேஷ் குணசித்திர பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை  கலங்க வைத்தார்.வில்லனாக அறிமுகமான ரஜினி,சத்தியராஜ்,சரத்குமார் ஆகியோர் கதாநாயகனாகி  விட்டனர். விஜய் சேதுபதி வில்லன் பாத்திரத்தை விரும்பி ஏற்கிறார். இவற்றை தமிழ் சினிமாவின்  மாற்றங்கள் எனலாம்.

சிவாஜி,எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழகத்தின் ஜேம்ஸ் பொண்ட்  என்ற பட்டத்துடன் ஜொலித்த ஜெய்சங்கர் வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற தகவல்  வெளியானதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், ஜெய்சங்கர் மறுப்பெதுவும் தெரிவிக்காமல் உடனடியாக ஒப்புக்கொண்டது அவரது ரசிகர்களுக்குத்  தெரியாது. ஜெய்சங்கரை மட்டுமல்லாது முத்துராமனையும் வில்லனாக்கினார்கள். கராத்தே மணியை வில்லனக நடிக்கக் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். பினர் ரஜினியின் பிரதான வில்லனாக கராத்தே மணி விளங்கினார்.

சினிமாவில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் ஒதுங்க் இருந்த ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்கத் திட்டமிட்டது. கதாநாயகனாக  கமல்  நடிக்க அதை கே.பாலசந்தர் இயக்கப்போவதாகவும்,  இன்னொரு படத்தி கே. பாக்கியராஜ இயக்குவதாகவும்  அறிவிப்பு வெளியானது.  அதற்கான ஒப்பந்தங்களும்  முடிக்கப்பட்டன. திட்டமிட்டபடி  தொடங்க முடியாததால் இரண்டு படங்கலும் கைவிடப்பட்டனர்.   பஞ்சு அருணாச்சலத்துக்கு ரஜினிகாந்த்   கொடுத்திருந்த கால்ஷீட்டை ஏவி.எம். நிறுவனத்துக்காக  விட்டுக் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம்.சரவணன். சரவணன் கேட்டதால் மறுப்புச் சொல்லாத பஞ்சு அருணாச்சலம் விட்டுக்கொடுத்தார்.

ரஜினி கதாநாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க யாரைத் தெரிவு செய்வதென்பதில்  குழம்பினார்கள். அந்தப் படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என  பஞ்சு அருணாச்சலம் தெரிவித்தார். அந்த யோசனை அனைவருக்கும் புதியதாக  இருந்தது. ஜெய்சங்கர் இதற்குச் சம்மதிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கேட்க யாருக்கும் துணிவு இல்லை. ஜெய்சங்கரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதால் பஞ்சு அருணாசலம்  தயங்கினார்.என்னை கதாநாயகனாகப் பார்த்த நீயா வில்லனாக்குகிறாய் எனக் கேட்பார் என தயங்கினார்.அந்தப் பிரச்சினைக்கு ஏவிஎம் சர்வணன்  முற்றுப்புள்ளி வைத்தர். ஜெய்சங்கருடன் தான் கதிப்பதாகத் தெரிவித்தார்.

ஜெய்சங்கரைச் சந்தித்த சரவணன் தயங்கித் தயங்கி,  நாங்கள் ரஜினிகாந்தை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் ‘முரட்டுக் காளை’படத்தில் வித்தியாசமான ஒரு வில்லன் பாத்திரம் இருக்கிறது. அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான், பஞ்சு, முத்துராமன் ஆகிய அனைவரும் நினைக்கிறோம்…”என்று சரவணன்  சொன்ன அடுத்த நிமிடமே, “நான் நடிக்கிறேன்…” என்று கூறிவிட்டார் ஜெய்சங்கர்.

“நீங்கள் நன்கு யோசித்து உங்கள் முடிவை சொன்னால் போதும்” என்று சரவணன் சொன்னபோது, “இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இங்கு இருக்கும் நீங்கள், பஞ்சு, முத்துராமன் ஆகிய மூவருமே என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்கள். எனக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய விஷயத்தை செய்யச் சொல்லி நீங்கள் யாராவது சொல்வீர்களா..? அதனால்தான் யோசிக்காமல் நான் சரி என்று ஒப்புக் கொண்டேன்…” என்று ஜெய்சங்கர் சொன்னபோது நண்பர்கள் மேல் ஜெய்சங்கர் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்து அந்த மூவருமே அசந்து போனார்கள்.

முரட்டுக்காளை பெரு வெற்ரி பெற்று ஜெய்சங்கருக்கும் புதியதொரு திருப்பத்தைட்க் கொடுத்தது. கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கரை ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக் காளை’யில்  வில்லனாக அறிமுகப்படுத்தியது போல ஏவி.எம். நிறுவனத்துக்காக ரஜினி நடித்த இன்னொரு படமான ‘போக்கிரி ராஜா’ படத்தில் வில்லனாக முத்துராமனை அறிமுகப்படுத்தலாம்  என்ற யோசனையையும்   எம்.சரவணனுக்கு  சொன்னவர்  பஞ்சு அருணாச்சலம்தான்.“நல்ல யோசனை” என்று அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்ட சரவணன் அவர்கள்   “முத்துராமனைப்  பார்த்து பேசி அவரை   ஒப்புக் கொள்ள வைக்கும் பொறுப்பு உங்களுடையது” என்று அந்தப் பொறுப்பை பஞ்சு அருணாச்சலத்திடமே ஒப்படைத்தார்

முத்துராமனுக்கு வாய்ப்புகள்  குறைந்த நேரம் குணசித்திர பாத்திரங்க்கலில் நடித்தார். தொடர்ந்தும் அப்படியான பாத்திரத்தில் நடிக்காது ஒதுங்கி இருந்தார்.அந்த நேரம் அவரை சந்தித்த பஞ்சு அருணாச்சலம் ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கின்ற விவரத்தை அவருக்கு எடுத்துக் கூறி அதில் வில்லன் வேடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்ட முத்துராமன் திகைத்து விட்டார். ஏவிஎம்மில் இருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்தபோது வில்லனாக நடிப்பதா என யோசித்தார்.சாதுரியமாக் மறுத்தார். நிறைய உழைத்துவிட்டேன். வீட்டில் ஓய்வாக இருக்க விரும்புகிறேன் என  முத்துராமன் சொன்னார்.

நெகட்டிவாக  இருந்தாலும் அது ஒரு நல்ல  பாத்திரம்  அதனால்  யோசனை செய்யாமல் இந்தப் படத்தில நடிங்க. இது காமெடி கலந்த வில்லன் பாத்திரம். நீங்க நடித்தால் நிச்சயம் அந்த கேரக்டர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.இன்னொன்றையும் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை அடையும். அதுக்கு அப்புறம் பத்து சினிமா கம்பெனி கார்கள் தினமும் உங்க வீட்டு வாசல்ல கியூவில் நிற்கும். அதனால், எனக்காக நீங்கள் இந்தப் படத்தில் நடியுங்கள்.எல்லாம் சரியாக  வரும்…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.

முத்துராமன் அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டவுடன்  அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் பல மாற்றங்களை செய்தார்  பஞ்சு. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தப்படத்தின் படப்படிப்பு முடிவடையும் முன்னரே ஒரு படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றிருந்த  முத்துராமன் இறந்துவிட்டதால் அவருடைய பாத்திரம் அந்தப் படத்திலே சிறப்பாக அமையவில்லை.         


‘போக்கிரி ராஜா’வைத் தொடர்ந்து  ஏவி.எம். நிறுவனத்துக்காக பஞ்சு அருணாச்சலம்  பணியாற்றிய ரஜினிகாந்த் படமாக ‘பாயும் புலி’ அமைந்தது.  தனது தங்கையைக் கொன்றவனை கதாநாயகன்  பழி வாங்குகின்ற அந்தக் கதையில் கராட்டி கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்.

ஜெய்சங்கர், முத்துராமனைத் தொடர்ந்து புதிய வில்லனைத் தேடினார்கள். அப்போது இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் பெயர் கூறப்பட்டது. அவர் நடிக்க  மறுத்துவிட்டார். கராட்டி படம் என்பதால் கராட்டிமணி வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிலநாட்களின்  பின்னர் கதாநாயகனிடம் அடிவாங்கினால் மானவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று மறுத்துவிட்டர். ஜெய்சங்கருக்கு அழைப்புச் சென்றது.

 நடந்தது எல்லாவற்றையும் அவருக்கு விளக்கமாகக் கூறி “வில்லன் பாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டவுடன் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து சரவணன் அவர்களிடம் நீட்டினார் அவர்.அந்தக் காகிதத்தில் “கராத்தே மணியால் ஏவி.எம். நிறுவனத்துக்கு ஏதோ சிக்கல். அதனால் அந்த பாத்திரத்தில் நடிக்கத்தான் என்னை அழைத்திருக்கிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளப் போகிறேன்…” என்று எழுதி வைத்திருந்தார் அவர்.

“அன்று காலைவரை அந்தப் பாத்திரத்துக்காக அவரை அழைக்கப்  போகிறோம் என்று எங்களுக்கே தெரியாது. ஆனால், அவர் எப்படி எல்லாவற்றையும் சரியாக கணித்து எழுதியிருந்தார் என்று எங்கள் எல்லோருக்குமே ஆச்சர்யம்” என்று அந்த நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.

வில்லனாக நடிக்க மறுத்த கராட்டி மணி, ரஜினியின்  சில படங்களுக்கு வில்லனாக நடித்தார்.  அவர் அன்புக்கு நான் அடிமை, ரங்கா, அஞ்சாத நெஞ்சங்கள், விடியும் வரை காத்திரு தங்ககோப்பை, கோழி கூவுது போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.

 

No comments: