Monday, August 22, 2022

உயிரோடு விளையாடும் மருந்துகளின் விலையேற்றம்


 

பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கையில் பொருட்களின் விலை கண்டபடி ஏறி உள்ளது. மா,சீனி,பால்  ,அரிசி போன்ற‌வற்றுக்கு கட்டுப்பாட்டு விலை உள்ளது. ஆனால், கட்டுக் கோப்பில்லாமல் அவை விற்பனை செய்யப்பட்டன. பால்மா குடித்தவர்கள்,  தேநீருடன் திருப்தியடைகின்றனர்.  பிஸ்கற்ர்றின் விலை உயர்வார் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருள்,எரிவாயு விலை ஏற்றாம் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்ந்த உணவு தேவை இல்லை என்றால் வாங்காமல் விட்டுவிடலாம். மருந்துகளை அப்ப்டி விட்டுவிட்டுப் போக  முடியாது. மருந்துடன் உயி வாழ்பவர்கள்  இதனால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 60 மருந்து பொருட்களின் விலை  40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 வாரத்துக்கு முன்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் 2வது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

உணவு, பெட்ரோல், டீசல் உள்பட அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மருந்து விலை ஏற்றம் என்பது மக்களை இன்னும் சிரமத்தில் தள்ளும். மேலும் ஏற்கனவே பணப்பிரச்சனையில் இருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வானது இன்னும் கூடுதல் பிரச்சனையாக அமையும்.

நோய்எதிர்ப்பு சக்திக்கான ஆன்ட்பாடி, வலி நிவாரணிகள்(பெயின் கில்லர்), இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கனவே அறுவை சிகிச்சைகள் கைவிடப்பட்டுள்ள நிலையில் மருந்து பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து விற்பனை நிலையங்களுக்கு  ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன், தற்போதைய நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 10% மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன.   மருந்துகளின் விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்துள்ளது என சங்கத்தின் ஊடகச் செயலாளர் ஏ.எச்.டி.எஸ்.சுரங்கா தெரிவிதுள்ளார்.

 தற்போதைய மருந்து விலைகள்,மின்வெட்டு காரணமாக மருந்து விற்பனை நிலையங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சில மருந்துகள் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், விலை உயர்வால் மக்கள் மருந்துகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ற்போது மக்கள் வாங்கும் சக்தியை இழந்து வருவதால் மருந்துகளை வாங்க முடியாத நிலை உள்ளது

 மூன்று மாதங்களுக்கு ஒரே நேரத்தில் மருந்துகளை வாங்கும் மக்கள், இப்போது ஒரு வாரத்திற்கு மட்டுமே அவற்றை வாங்குகிறார்கள்.

  புற்றுநோய்க்கான மருந்துகள், குழந்தைகளுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள்,  ஆஸ்துமாவுக்கான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.  எரிபொருள் நெருக்கடி காரணமாக தீவு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 இலங்கையில் உள்ள  சுமார் 6,000 மருந்தகங்கள் விரைவில் மூடப்படுவதைத் தடுக்க மருந்தகங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.   ஹாட்லைன்கள் மூலம் ஒரு நாளைக்கு 350 க்கும் மேற்பட்ட  அழைப்புகள்  மருந்துகள் கேட்கின்றன.  இந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் இல்லாமல்,  சேவையை நடத்த முடியாது, இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். 

எரிபொருள் தட்டுப்பாடு இத்துறையை நேரடியாக பாதித்த போதிலும், அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இன்னும் கிடைக்கவில்லை. இன்சுலின் மற்றும் சப்போசிட்டரிகள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட வேண்டும், மேலும் அவை செயல்படுவதற்கு ஜெனரேட்டர்கள் தேவை, அதே நேரத்தில் மருந்துகள்சகல  மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் எரிபொருள் தேவை. கோவிட்௧9 காலத்தைப் போலவே இந்த  சேவையையும் அத்தியாவசியமாக்குமாறு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும்   பதில் கிடைக்கவில்லை.

மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதது இப்போதைக்குச் சாத்தியமில்லை. மருந்து விநியோகிப்பதற்கான எரிபொருளைத் துரிதமாகக் கொடுப்பதற்குரிய ஏற்பாட்டை காலதாமதமின்றி அரசாங்கம்  மேற்கொள்ள வேண்டும்.

 

No comments: