Thursday, August 4, 2022

செஸ் ஒலிம்பியாட்டை திரும்பி பார்க்க வைத்த "மூதாட்டி"


 சென்னையில் தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், 78 வயதான மூதாட்டி ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்று அசத்தி வருகிறார் மொனாக்கோவைச் சேர்ந்த மூதாட்டி ஜூலியா லேபல் அரியாஸ் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். இது பார்வையாளர்கள் மட்டுமல்லாது போட்டியாளர்களையும் உற்சாகமாக்கியுள்ளது.

1927 முதல் நடத்தப்பட்டு வரும்  கெள‌ரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும்.

 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்கியது. இந்தியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தபோதுதான் 'சதுரங்க விளையாட்டு' தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த விளையாட்டு மீதான அனைவரது பார்வையும் இந்தியா மற்றும் இந்திய அணி மீது திரும்பியிருக்கிறது.

 10 நாள் போட்டியை நடத்த 1 கோடி டாலர்களை தமிழக அரசுக்கு வழங்கியது. இதில்1700 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். உலகின் தலைசிறந்த அணியான ரஷ்யாவும், சீனாவும் இந்த ஒலிம்பியாடில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஏறக்குறைய எல்லா முன்னணி நாடுகளும் தங்கள் சிறந்த வீரர்களுடன் கலந்துகொள்ள இருக்கின்றன.

 சிறப்பாக நடத்து வரும் செஸ் போட்டியில், 78 வயதான மொனாக்கோவைச் சேர்ந்த மூதாட்டி ஜூலியா லேபல் அரியாஸ் பங்கேற்று அசத்தி வருகிறார். விளையாட்டு என்றாலே அது இளைஞர்களுக்கு மட்டுமானது என்று பலரும் நினைத்து வரும் நிலையில் இந்த மூதாட்டி களத்தில் இறங்கியுள்ளார். பங்கேற்பாளராக மட்டுமல் இல்லாது தற்போது வரை விளையாடிய போட்டியில் 2 வெற்றியையும் அவர் பதிவு செய்துள்ளார். மூதாட்டியின் இந்த விளையாட்டு பாணி பார்வையாளர்கள் மட்டுமல்லாது சக போட்டியாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாலஸ்தீனைச் சேர்ந்த  8வயதுச் சிறுமியும் 78 வயதுப் பாட்டியும் அனைவ‌ரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

 

No comments: