உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவின் படையெடுப்பால உக்ரைன் சின்னாபின்னமாகி உள்ளது. சுண்டைக்காய் நாடான உக்ரைனை நசுக்கி விடலாம் என்ற ரஷ்யாவின் நோக்கம் நிறைவேறவில்லை. வல்லரசின் கோர யுத்தத்துக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமன யுத்தம் ஆறுமாதங்களை எட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைனில்
மட்டும் இதுவரை 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது பல பகுதிகளிலும் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன. உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை
குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா முதலில் கூறியது.
ஆனால், இதற்கு மாறாக குடியிருப்பு கட்டிடங்களையும்,மக்கள் கூடும் ரயில் நிலையங்களையும், வைத்தியசாலைகளையும் ரஷ்ய படைகளின் குண்டுகள் பதம் பார்த்தன. உக்ரைனின் கெர்சன் நகரைத்தான் முதன் முதலாக கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர்ந்து பல இடங்களை அடுத்தடுத்து கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியது. உக்ரைனின் பதில் தாக்குதல் ரஷ்யாவுக்கு கடும் சவால் அளித்து வருகிறது. அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உதவிகள் அளித்து வருகின்றன. இதனால் ரஷ்யா எதிர்பார்த்ததைவிட உக்ரைன் அதிக பலம் கொண்டு சண்டையிட்டு வருகிறது.
ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றனர். இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக
உள்ளது. போரில் கைப்பற்றிய நகரங்களைப் பாதுகாக்க முடியாத ரஷ்யப் படைகள் டாங்கிகளையும் கைவிட்டுச்ச் என்றுள்ளன. ஆறு மாதங்களை
கடந்தும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கொஞ்சம் கூட உக்கிரம் குறையாமல் நீடித்துக்கொண்டே
செல்கிறது. குடியிருப்பு கட்டிடங்கள் மீதான
தாக்குதல் போன்றவற்றால் உயிருக்கு அஞ்சி உக்ரைன் மக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக
ஓடியுள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டனர்.
உக்ரைன் ரஷ்யா இடயேயான
போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரத்தை ஐக்கிய
நாடுகள் மதிப்பிட்டு வெளியிட்டுள்ளது. ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை 5,514 பேர்
கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் 7,698 பேர் காயம் அடைந்து இருக்கலாம் என்று ஐநா மதிப்பிட்டுள்ளது.
மேலும், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் மூன்றில் ஒருவர் தங்கள் இருப்பிடத்தை
விட்டு வெளியேறி இருக்கின்றனர் எனவும், உக்ரைனை விட்டு வெளியேறியதில் 50 சதவீதத்தினர்
குழந்தைகள் என்றும் எஸ்டோனியா நாட்டுக்கு மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் அகதிகளாக
அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 67 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர் மேலும், ஏவுகணை,வான்வழி
தாக்குதல், ராக்கெட் தாக்குதல் ஆகியவை மூலமே பெரும்பாலான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 67 லட்சம் பேர் அகதிகளாக
உக்ரைனில் இருந்து வெளியேறி உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில்
ஏற்படும் அகதிகள் நெருக்கடியாக இது மாறக்கூடும் என்று ஐநா ஆணையர் எச்சரித்துள்ளார்.
இருந்தாலும் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முதலில் உக்ரைனில் இருந்து அகதிகளாக சென்றனர்.
இவர்களில் சுமார் 40 லட்சம் பேர் மீண்டும் நாடு திரும்பிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின்
படையெடுப்பால் , உக்ரைனின் பொருளாதாரம்கழுத்தை நெரித்தது. உக்ரைன் மக்கள் பனயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்பான செதத்தை உக்ரைன் சந்தித்தது. ரஷ்ய
வீரர்கள் போர்க்குற்றங்களை
இழைத்துள்ளன. ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரஷ்ய இராணுவம் மிருகத்தனமான வன்முறையின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, ஆனால் ரஷ்ய ஆட்சி அதிகாரப்பூர்வமாக தங்கள் ஸ்லாவிக் சகோதரர்களாகக் கருதும் பொதுமக்களை கற்பழிப்பு, சித்திரவதை , கொலை செய்வதில் வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று நினைத்துப் பார்க்க முடியாது. இன்னும், கியேவின் புறநகரில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் இதைத்தான் செய்தார்கள். பெண்களுக்கும் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக அறியப்பட்ட மரியுபோலில் உள்ள தியேட்டர் மீது ரஷ்யா வேண்டுமென்றே குண்டு வீசியது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம் காலத்தின் சர்ச்சில் ஆகிவிட்டார். அவர் கியேவை விட்டு வெளியேறி மேற்கு உக்ரைன் அல்லது போலந்தில் இருந்து ஆட்சி செய்ய முன்வந்ததை நிராகரிப்பதன் மூலம் போரைத் தொடங்கினார். அவர் தனது தனிப்பட்ட வீரம் மற்றும் தைரியத்தால் உலகை ஊக்கப்படுத்தினார், அதே நேரத்தில் மேற்கத்திய அரசாங்கங்களை மேலும் செய்ய வென்று சுதந்திரத்தின் விலையை உலகிற்கு விளக்கினார்.
ஒரு
போர்த் தலைவராக, ஜெலென்ஸ்கி தனது தளபதிகளை மதித்து, பெரிய மூலோபாய முடிவுகளை அவர்களிடமே விட்டுவிடுவதில் நற்பெயரைக் கொண்டுள்ளார். அவர் உக்ரைனின் தீவிர பாதுகாவலராகவும் மாறினார். அவரது 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பலர் ஜெலென்ஸ்கியின் தேசபக்தி மற்றும் உக்ரைனுக்கான அர்ப்பணிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். பெப்ரவரி 24 வரை, போரை முடிவுக்கு கொண்டுவர சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் காட்டினார். ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை.
உக்ரைன் ஒரு தோல்வியடைந்த நாடு அல்ல. ரஷ்ய படையெடுப்பு தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, உக்ரைனின் வங்கி அமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது. உக்ரைன் பொதுத்துறை ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குகிறது. மருத்துவமனைகள் ,பாடசாலைகள் ஆகியன இன்னும் இயங்குகின்றன. மாநில இரயில்வே மில்லியன் கணக்கான உக்ரைனியர்களை பாதிப்பிலிருந்து வெளியேற்றியது. ரஷ்ய ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க மத்திய தேர்தல் தரவு மூடப்பட்டு வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது. நாடு முழுவதும் மனிதாபிமான பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக அரசாங்க அமைச்சகங்கள் தன்னார்வலர்களுடன் கூட்டு சேர்ந்தன. உக்ரேனின் பலவீனமான அரசு நிறுவனங்கள் போரின் போது வியக்கத்தக்க வகையில் நீடித்து நிலைத்துள்ளன.
ரஷ்யா
உக்ரைன் மீதான படையெடுப்பில் சுமார் 50,000 கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த வீரர்களை இழந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 1,700 டாங்கிகள் அழிக்கப்பட்டதாக பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தலைவர் கூறுகிறார்.
உலக நாடுகளின்
எதிர்ப்பையும் மீறி உக்ரைனை ஆக்கிரமித்த புட்டின்
அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்து நிற்கிறார்.
No comments:
Post a Comment