Wednesday, August 24, 2022

ஆசியக் கிண்ணப் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த 6 வீரர்கள்

ஆசியக் கிண்ண கிறிக்கெற் தொடர் 27 ஆம் திகதி  ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  ஆரம்பமாக உள்லட்து.1984-ம் ஆண்டிலிருந்து நடைபெறும் ஆசிய கோப்பை தொடரின் அதிக ஓட்டங்கள் அடித்த   6 வீரர்களில் முதல் இரண்டு இடங்களில்  இலங்கை வீரர்கள்  உள்ளனர்நான்காவது இடத்தை   பாகிஸ்தான் வீரரும்  ஏனைய இடங்களை இந்திய வீரர்களும்  பிடித்துள்ளனர்

 ],இலங்கையின் துடுப்பாட்ட  ஜாம்பவானான சனத் ஜயசூர்யா,ஆசியக் கிண்ணத் தொடரில்  1,220 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.    25  போட்டிகளில் விளையாடிய  அவருடைய துடுப்பாட்ட சராசரி  53.04 ஆக உள்ளதுஆசியக் கிண்ணப் போட்டியில் சனத் யஜசூர்ய 6 சதங்கள் ,மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். அவருடைய அதிக பட்ச ஓட்டங்கள் 130 ஆகும்.

2 ஆசியக் கிண்ணப் போட்டியில்  கோப்பையில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரரில் இரண்டாவது இடத்தில் குமார் சங்ககாரா உள்ளார். விக்கெட் கீப்பர் , துடுப்பாட்ட வீரரான இவர்  இவர் 24 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 1,075 ஓட்டங் கள் அடித்துள்ளார்.அவருடைய துடுப்பாட்ட சராசரி  48.86 ஆக உள்ளது. அவர் 4 சதங்கள், 8 அரைச் சதங்கள் அடித்துள்ள அவருடைஅய  அதிகபட்சமாக 121 ஓட்டங்கள் அடித்துள்ளார்.


3 மூன்றாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவர் 23 போட்டிகளில் 971 ஓட்டங் கள் அடித்துள்ளார். அதிக ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர்களில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். அவர் இரண்டு சதங்கள் , 7 அரைச் சதங்களை ஆசியக் கிண்ண்னப் போட்டிகளில் அடித்துள்ளார். அவருடைய அதிக ஓட்டங்கள் 114 ஆகும்.


4 பாகிஸ்தானின் சோயப் மாலிக் 4வது இடத்தில் உள்ளார். அவர் 907 ஓட்டங்களை அடித்துள்ளார் அவருடைய சராசரி64.78 ஆக உள்ளது. அவர் 3 சதங்கள் , 4 அரைச் சதங்களை அடித்துள்ளார்.   அதிகபட்சமாக 143 ஓட்டங்கள் அடித்துள்ளார்.


 

5 அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்களில் 5 வது இடத்தில் இந்திய கப்டன் ரோகித் சர்மா உள்ளார். இவர் 27 ஆசியக் கிண்ணப்போட்டிகளில் 883 ஓட்டங்கள் அடித்துள்ளார். சராசரி  42.04. அவர் ஒரு சதம் , 7 அரைச் சதங்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 111 ஓட்டங்கள் அடித்துள்ளார்.


விராட் கோலி ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவர் 16 ஆசியக் கிண்ணப் போட்டிகளில்  766 ஓட்டங்ள் அடித்துள்ளார். அவருடைய துடுப்பாட்ட சராசரி  63.83 ஆக உள்ளது. 3 சதங்களையும், 2 அரைச் சதங்களையும் அடித்துள்ளார்.

இவர்கள்  அணியின் கப்டனாகச் செயற்பட்டவர்கள்.இந்திய வீரர்களான ரோஹித்தும் ,கோலியும் இந்த ஆண்டும் விளையாடுகிறார்கள்.

No comments: