இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டை துறை முகத்தில் ஒரு வாரம் தங்கி நிற்கப் போகிறது. அந்த ஏழு நாட்கள் உலக நாடுகளின் பார்வை இலங்கையைச் சுற்றியே வட்டமிடப் போகின்றன. இந்தியாவுக்கும் ,சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் இரண்டு நடுகளையும் சுற்றியுள்ள நாடுகளும் சிக்கி உள்ளன. சீனாவின் கரங்கள் இந்தியாவுக்கு அப்பால்பாகிஸ்தானிலும், இலங்கையுந்தேற்கு முனையிலும் வலுவாக உள்ளன. பாகிஸ்தான் இந்தியாவாவுக்கு எதிரி என்பது உலகறிந்த சங்கதி.
நட்பு நாடு என்ற போர்வையில் இந்தியாவுடன் ஒட்டுறவாடும் இலங்கை கொடுக்கும் உபத்திரம் கட்டுக்கடங்காதவை. அதில் தற்போது அரங்கேறி இருப்பது யுவான் வாங் 5 கப்பல் விவகாரம்.அது சீனாவின் உளவுக் கப்பல் என்பது உலகம் அறிந்த உண்மை. யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டையில் நிற்கும்போது உளவுத் தகவல்களைத் திரட்டாது, இராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபடாது என இலங்கை உறுதியளித்துள்ளது. இலங்கையின் உறுதிமொழியை சீனா கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கப்பலில் இருப்பவர்கள் இமைக்காது உளவுத் தகவல்களைத் திரட்டுவதில் வல்லவர்கள்.யுவான் வாங் 5 என்றால் தூரப்பார்வை அல்லது தூரநோக்கு.
தனது
நாட்டு இரகசியங்களை சீனா திரட்டப்போவதாக இந்தியா
அச்சப்படுகிறது. ஆனால், தனது இரகசியங்களை எளிதில்
சீனா கண்டு பிடிக்க முடியாதபடி பாதுகாக்கும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது.
ஆனாலும் தனது கடுமையான
எதிர்ப்பை இந்தியா வெளிப்படுத்துகிறது.இலங்கையின் தென்
பகுதியில் சீனா முகாமிட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியான ராமேஸ்வரத்தில் இந்தியா போர்ப்பயிற்சி செய்கிறது.
இரண்டுக்கும் இடையில் இலங்கை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கிறது.
உலக
நாடுகள் அனைத்தும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. உலக நாடுகளின் கழுகுக் கண்கள் ஏழு
நாட்களும் இலங்கையைச்
சுற்றி இருக்கும்.
யுவான் சுவான் 5 கப்பலின் வருகையை தவிர்க்க முடியாமல்
உள்ளது என இலங்கை அரசாங்கம்
தெரிவித்தது. சீன
தூதரகமும், எம்.பிக்களும், அதிகாரிகளும்
உற்சாக வரவேற்பு கொடுத்ததை அமெரிக்காவும்
இந்தியாவும் ரசிக்கவில்லை.
யுவான்
வாங் - 5 இலங்கை
கடற்பரப்பில் இருக்கும் போது அதன் தானியங்கி
அடையாள அமைப்பை செயற்பாட்டில்
வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,
எனினும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த கப்பலுக்கு அனுமதி
வழங்கப்படவில்லை எனவும், இதனால் ஆகஸ்ட்
16ஆம் திகதி முதல் 22ஆம்
திகதிக்கு இடையில் எரிபொருள் நிரப்பும்
நோக்கங்களுக்காக மட்டுமே கப்பல் வருகைக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட பின்னர் சீனா வலியுறுத்தியுள்ளது.அத்துடன் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் தடையாக இருக்கக் கூடாது எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெங் வென்பின் எச்சரித்துள்ளார்.
அத்துடன்,
“யுவான் வாங் - 5 கப்பல், இலங்கையின் தீவிர
ஒத்துழைப்புடன், இந்தியா - அமெரிக்காவின் கவலைகளுக்கு மத்தியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
யுவான் வாங் - 5 கப்பலின் கடல் அறிவியல் ஆராய்ச்சி
நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவானவை
என்பதை சீனா
மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் உளவுக் கப்பல் இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்அதனை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளதா என்ற கேள்வி அதிகரித்து வருகின்றது.சீனாவிடம் உள்ள உளவுக் கப்பல்களுக்குள் மிக பிரமாண்டமானதும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டதுமான "யுவான் வாங் 5" போர் கப்பல்களின் மூளை என்று வர்ணிக்கப்படுகின்றது.கப்பல் "செயற்கைக்கோள் உளவு மற்றும் ஆய்வுக் கப்பல்" என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது.
இந்தியாவின்
துருவ் கப்பல் சீன உளவுக்
கப்பலுக்கு சவால் விடும் ஆற்றல்
கொண்டுள்ளது என வல்லுநர்கள் கருத்து
வெளியிட்டுள்ளனர். இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை
முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும்
திறனை இக் கப்பல் கொண்டுள்ளது. இந்திய
வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை
நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து
இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உளவுக்கப்பாலான யுவான் வாங் 5 ற்கு
இந்தியாவின் துருவ் கப்பல் சவாலாக
அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
யுவான் வாங் தொடர்களில் பல வகை கப்பல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதுகாப்பு தேவைக்காக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட ஒரே கப்பலாக 'ஐ என் எஸ் துருவ்' உள்ளது.விசாகப்பட்டினத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடற்படை சேவைக்காக இயக்கப்படுகிறது. அங்குதான் இதன் இயங்குதளமும் கட்டுப்பாட்டு மையமும் உள்ளது. இந்த கப்பலை இந்திய கடற்படை சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவு இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த கப்பலில் அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் உள்ளன. இது பல்வேறு அலைவரிசைகளை ஆய்வு செய்யவும், இந்தியாவை கண்காணிக்கும் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் இந்தியாவின் கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கவும் உதவுகிறது எனவும் தெரிவிக்க படுகின்றது.
ஐ.என்.எஸ் துருவ்
என அழைக்கப்படும் இந்த கப்பல், அணு
ஆயுத ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் கண்காணிக்கும்
திறன் கொண்டது.இது இந்திய
பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அணுசக்தி ஏவுகணை
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிரி நீர்மூழ்கிக்
கப்பல்களை கண்காணித்து கடற்படையை எச்சரிக்கவும் கடல் படுகைகளை வரைபடமாக்கும்
திறனையும் துருவ் கொண்டுள்ளது.கண்காணிப்பு
கருவிகள் நிரம்பிய மூன்று குவிமாட வடிவ
தொலைத்தொடர்பு கோபுரங்களை சிறப்பு கொண்டுள்ள இந்த
கப்பலின் எடை 5,000 தொன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த கப்பலில் இருந்து
14 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்க
முடியும் எனவும் இது எதிரி
ஏவுகணைகளை கண்காணிப்பதுடன், உள்நாட்டில் நடத்தப்படும் ஏவுகணைகளின் வழக்கமான சோதனைகளின் தரவை துல்லியமாக வழங்குவதற்கும்
உதவுகிறது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சீனாவின் கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டிருப்பதும் அரசியலாக நோக்கப்படுகிறது.சீனக்கப்பல் இலங்கையை விட்டு வெளியேறினாலும், அதன் தாக்கம் என என்பது ரகசியமாகவே இருக்கும்.
No comments:
Post a Comment