Tuesday, December 6, 2011

திரைக்குவராதசங்கதி 23

பேரறிஞர் அண்ணாவின் செல்லப்பிள்ளை. நடிப்பிசைப் புலவர் என அண்ணாவால் பட்டம் சூட்டப்பட்டவர். வசனஉச்சரிப்பிலும் பாட்டிலும் தனக்கென ஒருபாணியை வகுத்துக் கொண்டவர் கே. ஆர்.ராமசாமி.குடந்தையை அடுத்து அம்பா சமுத்திரத்தில்ராமபத்திர செட்டியார் குப்பம்மாள்தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தகே. ஆர். ராமசாமி நான்காவது வகுப்புடன்படிப்பை முடித்து விட்டு நாடகத்தில் நடிக்கத்தொடங்கி விட்டார்.பாய்ஸ் கொம்பனி என அழைக்கப்படும்மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கொம்பனியின்சிறுவர் நாடகக் குழுவில் இணைந்தார்.நடிப்பில் ஆர்வம் உள்ள கே. ஆர். ராமசாமிக்கு சிறு சிறு வேடங்களே கிடைத்தன.தனது ஆர்வத்துக்கு உரிய இடம் இதுஅல்ல என்பதை உணர்ந்த கே. ஆர். ராமசாமி, டி.கே. என். சண்முகம் சகோதரர்களின்
நாடகக் குழுவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 13 வயது.
டி.கே. சகோதரர்களின் நாடகக் குழுவில்இணைந்ததும் அவருடைய நடிப்பு மேலும்மெருகேறியது. டி.கே. சகோதரர்களின்மிக முக்கிய நடிகராக கே.
ஆர். ராமசாமி திகழ்ந்தார். தொழில் மீது அவர்வைத்திருந்த பக்தி அவரை உச்சத்துக்குகொண்டு சென்றது.குடந்தையில் சிவலீலா என்ற நாடகம்தொடர்ந்து 38 நாட்கள் நடந்தது. அப்போது கே. ஆர். ராமசாமியின் தகப்பன் மரணப்படுக்கையில் இருந்தார். பகல் முழுவதும் தகப்பனின் அருகில் துக்கம் தோய்ந்த
நிலையில் இருக்கும் கே. ஆர். ராமசாமிஇரவு வேஷமிட்டு ஹேமநாதர் எனும்வேடத்தில் கலகலப்பாகி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்.
ராமாயணம் நாடகத்தில் கே. ஆர். ராமசாமி ஆஞ்சநேயர் வேடமேற்று நடித்தார்.ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கே. ஆர். ராமசாமியின்தகப்பன் மரணமாகி விட்டார்.அன்று மாலை 6 மணி வரை ஆஞ்சநேயராக யாரை நடிக்க வைப்பது என்று தெரியாது நாடகக் குழுக்களும் குழம்பியது. 11மணிக்கு நடிக்க வருவேன் எனகே.ஆர்.ராமசாமி தகவல் அனுப்பினார்.டி.கே. எஸ்ஸின் குழு நடித்த மேனகா,குமாஸ்தாவின் பெண் ஆகிய படங்களில்கே. ஆர். ராமசாமியும்நடித்தார். குமாஸ்தாவின் பெண் படத்தின்உதவி இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகிய இருவரின் மனதிலும் கே. ஆர். ராமசாமி இடம்பிடித்துவிட்டார்.
கே. ஆர். ராமசாமியின்கம்பீரமும் குரலும் நடிப்பும் அன்றையபிரபல நட்சத்திரமான தியாகராஜ பாகவதருக்கு ஈடõக இருந்ததை கிருஷ்ணனும்
பஞ்சுவும் அவதானித்தனர்.தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் கே. ஆர்.ராமசாமியை கதாநாயகனாக்கி படம் இயக்குவது என இருவரும் முடிவு செய்தனர்.
தமது விருப்பத்தை தயாரிப்பாளரிடம் கூறினர். தயாரிப்பாளர் சம்மதித்ததால் 1944ஆம் ஆண்டு கே. ஆர். ராமசாமி திருஞானசம்பந்தராக நடித்த பூம்பாவை வெளியானதுபூம்பாவை படம் சிறப்பாகப் பேசப்பட்டது. கே. ஆர். ராமசாமிக்குநல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. என்றாலும் அடுத்த படம்அவரைத் தேடி வரவில்லை.திரைப்பட வாய்ப்பு இல்லாததனால் மீண்டும் நாடக மேடைப் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கினார் கே. ஆர். ராமசாமி.
மனோகரா நாடகத்தில் கே. ஆர். ராமசாமிமனோகராவாகவும் மனோகராவின் தாயார் பத்மாவதியாக கணேசனும் நடித்தனர்.அதே கணேசன்தான் பின்னர் மனோகராதிரைப்படத்தில் மனோகரனாக நடித்துகலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசினார்.பேரறிஞர் அண்ணாவின் நாடகங்களான ஓர் இரவு, வேலைக்காரி,சொர்க்க வாசல் ஆகியவை படமானபோது அவற்றில் நடித்து படத்துக்குசிறப்புச் சேர்த்தார் கே. ஆர். ராமசாமி.லட்சுமிகாந்தன் கொலைவழக்கி ல் தியாகராஜ பாகவதர் சிறை சென்றதால் அந்தஇடத்தை கே. ஆர். ராமசாமி நிறைவுசெய்தார். துளிவிஷம் படத்தில் கே. ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்தார். நடிகர் திலகம் வில்லனாக நடித்தார்.நாடோடி, அரச கட்டளை, நம் நாடுஆகிய படங்களில் மக்கள் திலகத்துடன்நடித்தார்.1971 ஆம் ஆண்டு நடிப்பிசைப் புலவர்கே. ஆர். ராமசாமி காலமானார் என்றாலும் பாராமுகம் ஏனம்மா, உள்ளம்தேடாதே என்று சொல்லுதே, செந்தமிழ்நாட்டுச் சோலையிலே சிந்து பாடித் திரியும்பூங்குயிலே, கண்ணில் தோன்றும் காட்சியாவும் கண்ணா உந்தன் காட்சியேபோன்ற பாடல்கள் இன்றும் மனதை விட்டுநீங்காது ரீங்காரமிடுகின்றன.
ரமணி
மித்திரன்21/10/2007

Monday, December 5, 2011

தேர்தலுக்குத் தயாராகிறார் வைகோகை கொடுக்குமா சங்கரன் கோவில்?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் பார்வை திஹார் சிறையை நோக்கியே இருந்தது. ஸ்பெக்ரம் விவகாத்தில் சி.பி. ஐ.யினால் கைது செய்யப்பட்ட கனிமொழி பிணையில் விடுதலையாவது சிக்கலாக இருந்தது. கனிமொழி பிணை கோரி சமர்ப்பித்த நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. சிறையில் வாழ்வதற்குத் தன்னைப் பழக்கப்படுத்தினார் கனிமொழி. சிறைக்குச் செல்வது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு புதியதல்ல. ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததை திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஜீரணிக்க முடியாதுள்ளது. கனிமொழி பிணையில் வந்தது கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
கனிமொழி சிறையில் இருந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளைத் தீவிரமாகக் கவனிக்க முடியாத நிலையில் தவித்தார் கருணாநிதி. தமிழக அரசின் கெடுபிடிகளினால் வாக்களித்த மக்கள் கலங்கிப் போயுள்ளனர். எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய விஜயகாந்த் அடக்கி வாசித்தார். தற்பொழுது தான் ஜெயலலிதாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார். கருணாநிதியை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்த விஜயகாந்த், ஜெயலலிதா முதல்வரானதும் என்ன செய்வார் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார். தமிழக மக்கள் படும் துன்பங்களுக்கு விஜயகாந்தும் ஒரு காரணம் தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தார் விஜயகாந்த். அவர் எதிர்பார்த்தது போன்றே கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதேவேளை யாருமே எதிர்பார்க்காத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியையும் மக்கள் அவருக்கு வழங்கினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் செய்த தவறுகளினால் தான் கருணாநிதி முதல்வர் பதவியை இழந்தார்.
எதிர்க்கட்சி என்ற அங்கீகாரமும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லாமல் போனது. ஜெயலலிதா ஆட்சி பீடம் ஏறியதும் தவறுக்கு மேல் தவறு செய்யத் தொடங்கினார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு விரும்பிய விஜயகாந்த் தமிழக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட விஜயகாந்த் தமிழக அரசின் தவறுகளைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். விஜயகாந்தின் காலம் கடந்த ஞானத்தினால் ஆகப் போவது ஒன்றுமில்லை. விஜயகாந்தின் பேச்சுக்கு ஆதரவாளர்கள் கை தட்டுவார்கள். அதனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராகக் களமிறங்க வைகோ தயாராகி வருகிறார். சங்கரன் கோவில் தொகுதி இடைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போகிறது. சங்கரன் கோவில் வைகோவின் சொந்தத் தொகுதி கருணாநிதியும் வைகோவும் ஓரணியில் இருந்தபோது சங்கரன் கோவில் தொகுதியை வைகோவின் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. அதனால் கோபித்துக் கொண்ட வைகோ திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவினால் அவமானப்படுத்தப்பட்ட வைகோவின் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குப் பெற்று தனது பலத்தை நிரூபித்தார் வைகோ.
சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் மரணமாகிவிட்டார். அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. அங்கு தேர்தலை சந்திக்க ஜெயலலிதாவும் வைகோவும் தயாராகி வருகின்றனர். அரசின் இலவசத் திட்டங்கள் சங்கரன் கோவில் தொகுதியில் மிக மும்மூரமாக விநியோகம் செய்யப்படுகின்றன. இடைத் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டங்களை வைகோ நடத்தி வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாகப் போட்டியிட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். ஆகையினால் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்போட்டியிடாது ஒதுங்கலாம் என்ற எதிர்பார்ப்புற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின்போது சங்கரன் கோவில் தொகுதியில் சில இடங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முதலிடம் பிடித்தது. சில இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தையே பிடித்தது. ஆகையினால் செல்வாக்கு இல்லாத சங்கரன் கோவில் தொகுதியில் இருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு கருணாநிதி நெருக்கடி கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விஜயகாந்த், இடதுசாரிகள் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரும் இதே நிலைப்பாட்டை எடுத்தால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி பிரகாசமானதாகி விடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு04/12//11

Sunday, December 4, 2011

மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள்

போர்க்கால துன்பங்களிலும் துயரங்களிலும் சிக்கி அவஸ்தைப் பட்ட மக்களின் குரலாக வெளிவந்துள்ளது ""மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள்'' என்ற கவிதைத் தொகுதி இன்று வெளியாகும். கவிதைகளில் அதிகமானவை காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. வெ.துஷ்யந்தன் என்ற இந்த இளைஞனின் கவிதைத் தொகுப்பில் சராசரி இளைஞனுக்கு உள்ள காதல் கவிதைகளைக் காண முடியவில்லை. மனித வாழ்வின் அவலங்களையும் இயலாமையையும் நறுக்குத் தெறித்தாற் போல் வெளிப்படுத்துகிறார்.
எங்கிருந்தோ வந்தால் என்ற முதலாவது கவிதையைப் படிக்கும்போது இவன் காதலில் விழுந்த கவிஞன் என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதியிலே தான் காதலிப்பது கவிமகள், கவி மங்கை என்று கவிதை மீதான தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
மௌன தேவதை
எல்லோர் இதயங்களிலும்
நிரந்தரவாசியாயிருக்கிறாள்
என்ற வரிகளின் மூலம் மக்கள் மௌனமாக இருக்கும் காரணத்தைப் புலப்படுத்துகிறார். மக்கள் எதற்காக மௌனமாக இருக்கிறார்கள் என்பதையும் மௌனமாகவே புரிய வைக்கிறார்.
வேலை இல்லாது இருக்கும் இளைஞனிடம் வேண்டுமென்றே என்ன செய்கிறாய் எனச் சிலர் கேட்பார்கள். சும்மா இருக்கிறேன் என்ற சொல் இளைஞனின் மனதில் கீறும் ரணங்களை,
""சும்மா'' என்னும் வார்த்தையன்றோ
சுமைகளின் இருப்புகள் எம்
இமைகளின் வழியே நீர் சொரியும்
சும்மா இருத்தல் கூட
ஒரு வகையில்
அணு அணுவாய்
மனதைக் கீறிடும்
சுகம் தரும் சுமைதான்
எனக் கூறுகிறார்.
புதிய கோணத்தில் சிந்தித்து கவிதைகளைப் படைக்கும் இவர் கவிதைக்கான கருக்கள்
என்னிடம் ஏதும் இல்லை என்கிறார்.
முகாரியை மாத்திரம் மீட்டித் திரிந்த
எம் இதய வீணைகளில் எதற்காக
பூ பாளத்தை மீட்ட முனைவதாக
பாசாங்கு செய்து கொள்கிறீர்கள்?
நொந்து போன எங்கள் இதயங்கள்
நொந்ததாகவே இருக்கட்டும்
இந்த மண்ணில் ஆழப் புதைந்து
கிடப்பவை பிணங்கள் மட்டுமல்ல
எங்கள் கனவுகளும்தான்
பிணங்களை மட்டுமே இந்த மண் கண்டதாய் கனவு கண்டு கொள்ளாதீர்
எத்தனையோ நடைப் பிணங்களையும்
இந்த மண் தன்னில் அலைய விட்டு
அழகு பார்த்துக் கொள்கிறது
என்ற கவி வரிகள் இந்த மண்ணின் துன்ப துயரங்களை பட்டியலிடுகின்றன.
எம் சான்றாதார
வாதங்கள் எல்லாம்
""பூதங்களிடம்'' தோற்றுப் போகின்றன
இப்படியே கழிந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு இராக்களும்
எங்களுக்காக மட்டும்
""அச்சப் பிராந்திய இரவுகளாக''
பிரகடனப்படுத்தப்படுகிறதோ?
என்ற வரிகள் எம் மூதாதையரின் வரலாற்றையும் ஆக்கிரமிப்பையும் வெளிப்படுத்துகின்ற அதேவேளை அச்சப்படுத்திய பூதங்களையும் ஞாபக மூட்டுகின்றன.
மீளும் நினைவுகள் 2 என்ற கவிதையின் மூலம் தனது கிராமத்தை மனதில் பதியவிட்டுள்ளார். முத்தான தலைப்புகளில் உள்ள 36 கவிதைகளும் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் புனையப்பட்டுள்ளன. சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமான கவிதைகள் இத் தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன. கவிதைகள் பிரசுரமான ஆண்டைக் குறிப்பிட்டிருந்தால் கவிதைகளின் பின்புலத் தையும் அவரின் வளர்ச்சியையும் அறியக் கூடியதாக இருந்திருக்கும்.
இன்றைய இளம் எழுத்தாளர்களில் பலர் தமது ஆளுமை, திறமை, அனுபவம், அறிவு என்ற வட்டத்துக்கு வெளியே நின்று சிந்திக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகவே வெ.துஷ்யந்தனும் மிளிர்கிறார்.
நூல்: மொழி பெயர்க்கப்படாத
மௌனங்கள்
(கவிதைத் தொகுதி)
ஆசிரியர்: வெற்றிவேல் துஷ்யந்தன்
வெளியீடு: ஜீவநதி, கலை அகம்
அல்வாய்
விலை ரூபா: 200/=
ரமணி
வீரகேசரிவாரவெளியீடு27/11/11

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 14

சினிமாவிலும் அரசியலிலும் எதிரும் புதிருமாக இருந்த மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் கூண்டுக்கிளி. நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் துரோகியின் கதை. எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்தனர்.
பி.எஸ்.சரோராஜாவைப் பெண் பார்த்த சிவாஜி, அவர்தான் தன் மனைவி என்று முடிவு செய்கிறார். விதி வச‌த்தால் சிவாஜியின் நண்பன் எம்.ஜி.ஆரின் மனைவியாகிறார் சரோஜா. இதை அறியாத சிவாஜி பி.எஸ்.சரோஜாவைத்தேடி ஊரெல்லாம் அலைகிறார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவாஜி ரயிலின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தபோபாது எம்.ஜி.ஆர் காப்பாற்றுகிறார். சிவாஜியை வீட்டுக்கு கூட்டிவந்த எம்.ஜிஆர். தன் மனைவி பி.எஸ். சரோஜாவை அறிமுகப்படுத்துகிறார். தனக்கு மனைவியாக வரவேண்டிய பி.எஸ்.சரோராஜா தன் நண்பனின் மனைவியானதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் சிவாஜி.
சிவாஜி செய்த குற்றத்திற்காகக் சிறைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் தன் மனைவியை கவனமாக பார்க்கும் படி கூறுகிறார். உயிர் கொடுப்பான் நண்பன் என்பதற்கிணங்க எம்.ஜி.ஆர் சிறைச்செல்ல நண்பனுக்கு துரோகம் செய்ய திட்டமிடுகிறார் சிவாஜி. தனக்கு தலைவலி என்று கூறி தலைக்கு தைலம் பூசும்படி பி.எஸ்.சரோஜாவிடம் கூறுகிறார். கள்ளம் கபடமில்லாத சரோஜா, சிவாஜிக்குத் தைலம் பூ"கிறார். சரோஜாவின் கைப்பட்டதும் சிவாஜியின் காமத் தீ வெளிப்படுகிறது. தன் இச்சையை சரோஜாவிடம் கூறுகிறார். தான் நண்பனின் மனைவி என்பதை சரோராஜா ஞாபகப்படுத்துகிறார்.
கடுமையான மழை பெய்த ஒருநாள் சரோஜாவை கெடுக்க முயற்சிக்கிறார் சிவாஜி. அப்போது உண்டான மின்னலால் சிவாஜியின் கண் பார்வை பறி போகிறது. தன் தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டணை என்று உணர்ந்த சிவாஜி ஊரை விட்டுச் செல்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த எம்.ஜி.ஆர் நண்பனின் துரோகத்தை மன்னித்து மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.



இரு பெரும் துருவங்கள் நடித்த கூண்டுக்கிளி பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படு தோல்வியடைந்தது. தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது இப்படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் அமைதியாக பார்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்சரோஜா, கொட்டாபுளி ஜெயராமன், ஈ.ஆர்சகாதேவன், டிகே.கல்யாணம், குச‌லகுமாரி, டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து ஆயோர் நடித்தனர். திரைக்கதை வச‌னம் விந்தன். பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ். கவி.காமு.ஷெரீப், மருதகாசி, விந்தன். இசை கே.வி.மகாதேவன். கொஞ்சுங் கிளியான பெண்ணை கூண்டுகிளி ஆக்கிவிட்டு கொட்டு மேளம் கொட்டுறது ச‌ரியா தப்பா என்ற டி.எம்.எஸ்ஸின் குரல் இன்றும் மனதை வருடுகிறது. இயக்கம் டி.ஆர்.ராமண்ணா.
1954 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தபோது சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் நட்ச‌த்திரங்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. விதி வச‌த்தால் அதுவே முதலும் கடைசியுமான படமானது. ரசிகர்களை அமைதிப்படுத்தி இருவரும் இணைந்து நடித்திருக்கலாம். இருவரும் இணைந்து நடிக்காததற்கு தமிழக அரசியலும் ஒரு முக்கிய காரணம்.
ரமணி
மித்திரன்13/11/11

Friday, December 2, 2011

திரைக்குவராதசங்கதி 22

ஒரு நாள் நடிகர் திலகத்தின் படத்தைப் பார்த்து விட்டு பஸ்ஸுக்காக காத்து நின்ற போது இயக்குனர் பி. மாதவன், விஜயகுமாரைக் கண்டு தனது படத்தில் நடிக்க அழைத்துச் சென்றார். பி. மாதவனிடமும் விஜயகுமார் ஏற்கெனவே வாய்ப்புக் கேட்டு சென்றிருந்தார்."பொண்ணுக்கு தங்க மனது' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார் விஜயகுமார். விஜயகுமாரிடம் இருந்துமுருகன் வாய்ப்பை தட்டிப் பறித்த சிவகுமாரும் பொண்ணுக்கு
தங்க மனசு படத்தில் நடித்தார். சிவகுமார் என்றஒருவர் சினிமாவில் இருப்பதால் விஜயகுமார் என்றபெயரை பி. மாதவன் சூட்டினார்.
கமல், ரஜினி ஆகியோரின் காலத்தில் கதாநாயகனாகநடித்த விஜயகுமார் பின்னர் அவர்களின் தந்தையாக நடித்தார். மிகச் சிறந்த குணசித்திர நடிகராக விஜயகுமார் இருக்கிறார்.சிறந்த கதாநாயகர்களில் ஒருவராக விஜயகுமாரை தமிழ்சினிமா உலகம் ஏற்றுக் கொண்டது. ஒரே மாதிரியான பாத்திரத்தில் நடித்த விஜயகுமார் வித்தியாசமான பாத்திரங்களைத் தேடினார். கதாநாயகனான விஜயகுமாருக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தது. நடிப்புத்தானே என்பதற்காகவில்லனாக நடித்தார்.மதுரையில் நடந்த விழாவுக்கு சென்ற விஜயகுமாரைச்சூழ்ந்து கொண்ட அவரது ரசிகர்கள் கதாநாயகனாக நடித்தஉங்களை வில்லனாக பார்க்க நாங்கள் விரும்பவில்லைஎன்றனர். தனது ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள பாசத்தில்நெகிழ்ந்து போன விஜயகுமார் அன்றிலிருந்து நடிப்புக்குமுழுக்கு போட்டார்.
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல் நகரில் மனைவி மஞ்சுளாவின்பெயரில் சைவ உணவகம் ஒன்று ஆரம்பித்தார். விஜயகுமார் சைவ உணவகம் மிகவும் பிரபல்யமாகி வாடிக்கையாளர்களை ஈர்த்தது. விஜயகுமார் சினிமாவைத் துறந்துமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.மூன்று வருடங்களின் பின்னர் விஜயகுமார் சென்னைக்குவந்த போது மணிரத்தினத்திடம் உதவியாளராக கடமையாற்றிய இயக்குநர் சுபாஷ் விஜயகுமாரைச் சந்தித்துமணிரத்தினத்தின் படத்தில் நடிக்கும்படி அøழப்பு விடுத்தார்.விஜயகுமார்மறுத்துவிட்டார்.இரண்டு பெண்டாட்டி காரனின் கதை. கதையைத்தூக்கி நிறுத்தும் அப்பாவின்பாத்திரத்தில் நடிகர்திலகம் நடிக்க வேண்டியகேரக்டர் அவர் நடித்தால்அவர்தான் ஜொலிப்பார்.கதை இரண்டாம் பட்சமாகிவிடும் நீங்கள் நடித்தால் நீங்களும் பேசப்படுவீர்கள் படமும் வெற்றி பெறும் என்றுசுபாஷ் கூறினார். சுபாஷின் வற்புறுத்தலினால் மணிரத்தினத்தைசந்தித்தார் விஜயகுமார். மணிரத்தினம் கதையைக்கூறியதும் அடடா இப்படிப்பட்ட படத்திலா நடிக்க மறுத்தேன் என்று வருந்தினார்
விஜயகுமார்.பிரபு, கார்த்திக், விஜயகுமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான அக்கினி நட்சத்திரம் என்ற அப்படம் பெரு வெற்றிபெற்றது. அதன் பின்னர் விஜயகுமார் பிஸியான நடிகராகிவிட்டார். குணச்சித்திர பாத்திரமா கூப்பிடு விஜயகுமாரைஎன்று அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
அவிநாசி மணி இயக்கிய ஜானகிசபதம் என்ற படத்தில்நடித்தபோது அங்கு சுறுசுறுப்புடன் பணியாற்றிய உதவிஇயக்குநர் ஒருவரைப் பார்த்து விஜயகுமார் வியந்தார். விஜயகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்த டூயட்காட்சி ஒன்றை பிறேம் பிறேமாக எப்படி எடுக்க வேண்டும்என அந்த இளைஞர் விபரித்தார். அந்த இளைஞனின் கற்பனையில் மனம் லயித்த விஜயகுமார் தயாரிப்பாளரிடம்அந்த இளைஞனின் கற்பனையைக் கூறி அவர் கூறுவது
போல் பாடல் காட்சியை மீண்டும் எடுப்பதாக இருந்தால்கால்ஷீட் தருகிறேன். அதற்கான பிலிம் செலவை நானேபொறுப்பேற்கிறேன் என்றார். நேரம் இல்லாமையால் அப்பாடல் காட்சியை திரும்ப எடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் கூறினார். விஜயகுமாரின் எண்ணம் வீண் போகவில்லை அந்த இளைஞன்தான்சினிமாவை கிராமத்துக்குஅழைத்துச் சென்ற பாரதிராஜா, பாரதிராஜாவின் படங்கள்பெரு வெற்றி பெற்றன. பாரதிராஜாவின் வெற்றியில் விஜயகுமார் மகிழ்ச்சியடைந்தார்.பாரதி ராஜாவின் இயக்கத்தில் கிழக்குச் சீமையிலே என்றபடத்தைத் தயாரிக்க கலைப்புலி தாணு திட்டமிட்டார். அண்ணன்
தங்கை பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் அப்படத்தில் தங்கையாக நடிக்க ராதிகாவை தேர்வு செய்தார்கள்.அண்ணனாக விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என்றபோது விஜயகுமாரை வைத்து நான் இயக்கமாட்டேன்என்று ஒரேயடியாக பாரதிராஜா கூறிவிட்டார்.மிகச் சிறந்த விஜயகுமாரை வைத்து படமெடுப்பதில்லைஎன்ற பாரதிராஜாவின் சபதத்தைக் கேட்டவர்கள் அதிர்ந்துவிட்டனர். 16 வயதினிலே படத்தின் பிரிவியூ காட்சிக்குவரும்படி அøழத்திருந்தேன். அவர் வரவில்லை எனதுஅழைப்பை மதிக்காதவரை வைத்து படமெடுப்பதில்லைஎன்று தீர்மானித்துவிட்டேன் என்றார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் சபதத்தை விஜயகுமாரிடம் கலைப்புலிதாணு கூறினார். நடிகர் திலகம் நடிக்க வேண்டிய பாத்திரம்நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கலைப்புலி தாணு.
பாரதிராஜாவின் சபதத்தை கேள்விப்பட்ட விஜயகுமார்உடனடியாக பாரதிராஜாவின் வீட்டுக்குச் சென்றார். விஜயகுமாரைக் கண்ட பாரதிராஜா அவரை அன்புடன் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் பொதுவான விசயங்கள்பற்றிப் பேசினார்கள். 16 வயதினிலே பிரிவியூ காட்சியைப்பார்ப்பதற்கு வர முடியாத நிலையை விஜயகுமார் விளக்கினார். படப்பிடிப்பு முடிந்தால் வருகிறேன் என்று கூறியதைநினைவு படுத்தினார். படப்பிடிப்பை இடையில் விட்டால்தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டம், பிஸி நடிகனின் அன்றாடநாள் கூட அவனுக்குச் சொந்தமில்லை என்று விஜயகுமார் கூறினார். விஜயகுமாரின் கருத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த பாரதிராஜா மனம் மாறினார். விஜயகுமார்,ராதிகா நடிப்பில் கிழக்குச் சீமையிலே வெற்றி பெற்றது. பாரதிராஜாவின் அந்திமந்தாரை என்ற படத்தில் விஜயகுமார்நடித்தார். அப்படத்துக்கு மத்திய அரசின் விருது கிடைத்தது.அப்படத்தில் நடித்த விஜயகுமாருக்கு சிறந்த நடிகருக்கானசிறப்புப் பரிசை தமிழக அரசு கொடுத்தது. சிறந்த நடிகருக்கான விருதை மத்திய அரசு விஜயகுமாருக்குக் கொடுக்காததற்கு பாரதிராஜா மனம் வருந்தினார்
ரமணி
மித்திரன்

Wednesday, November 30, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 13




குடும்பத்தை வழிநடத்தவேண்டிய அண்ணன், தம்பியின் மனைவியைச் சீரழிக்க முயற்சி செய்யும் ஒருவரிக்கதை தான் வாலி. கூட்டுக் குடும்பம் பண்பாடு கலாசாரம் என்ற கட்டுக் கோப்பிலிருந்து வெளியேறும் ஒரு காமுகனைப் பற்றிய கதையை தடம் மாறாமல் முடிந்திருக்கிறார் எஸ்.ஜேசூர்யா.
ஒரே உருவம் கொண்ட இரட்டைப் பிறவியான அண்ணன் வாய்பேச‌ முடியாதவன். தம்பி உல்லா ச‌மான பேர்வழி. அழகான ஒரு பெண்ணைக் கண்டு மையல் கொள்கிறான் அண்ணன். அவளை யே மனைவியாக்க வேண்டும் என்று தேடி அலைந்து தோல்வி அடைகிறான் அண்ணன். தான் ஒரு தலையாகக் காதலித்த பெண் தம்பியின் மனைவியானதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். தம்பியின் மனைவி என்றாலும் பரவாயில்லை அவளை அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறான்.
தம்பியின் முதலிரவு ஏற்பாடு தடல்புடலாக நடக்க ஆத்திரம் மேலிடத் துடிக்கிறான் அண்ணன். கனகச்சிதமாகத் திட்டமிட்டு முதலிரவைத் தடை செய்கிறான். உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி தம்பியின் மனைவியைக் குழப்புகிறான். அண்ணன் யார் தம்பி யார் என்று தெரியாது குழம்புகிறாள் தம்பியின் மனைவி. அண்ணனின் ச‌தியை அறிந்த தம்பியும் மனைவியும் அதிர்ச்சியடைகின்றனர். அண்ணனைத் திருத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அண்ணன் சுட்டுக் கொல்ல‌ப்படுகிறான்.
வாய்பேச‌ முடியாத அண்ணனாகவும் தம்பியாகவும் இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார் அஜித். நாயகன் அஜித்தையும் வில்லன் அஜித்தையும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். அஜித்தின் திரையுலக வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்திய படம் வாலி. அண்ணன் அஜித், தம்பி அஜித் ஆகிய இருவருக்கும் இணையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றவர் நாயகி சிம்ரன்.
1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் மிகச் சிறந்த ஒரு நடிகையான ஜோதிகா அறிமுகமானார். வாலி படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவர் தலையைக் காட்டினாலும் பின்னர் தவிர்க்க முடியாத நடிகையாக பரிணமித்தார். விவேக், லிவிங்ஸ்டன், இந்து, அஜித் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தரமான படங்களையும் வில்லங்கமான படங்களையும் தந்த எஸ்.ஜே.சூர்யா திரைகதை எழுதி இயக்கினார். ஆபாச‌ம், விரச‌ம் எதுவும் அதிகமாக இல்லாது சிறந்த முறையில் உருவாக்கினார் எஸ்.ஜே.சூர்யா.
நிலவைக் கொண்டு வா, சோனா ஓ சோனா, ஏப்ரல் மாதத்தில், வானில் காயுதே வெண்ணிலா ஆகிய பாடல்கள் தேனிசை தென்றல் தேவாவின் இசையில் மனதைக் கவ‌ர்ந்தன. நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வாலி திரைப்படம் வசூலில் புதியசாதனை செய்தது.


ரமணி

மித்திரன்27/11/11

Tuesday, November 29, 2011

ஜெயலலிதாவின் அதிரடியால்திண்டாடும் தமிழகம்

பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் தமிழக அரசு தாறுமாறாக உயர்த்தியதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி மீது நம்பிக்கை இழந்த மக்கள் ஜெயலலிதா மீது அதிக நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற அரியாசனத்தில் அவரை அமர்த்தினார்கள். கருணாநிதி செய்த தவறினால் தான் ஆட்சி அதிகாரத்தை இழந்தார் என்பதை உணர்ந்த ஜெயலலிதா தரமான ஆட்சியைத் தருவார் என்றே எதிர்பார்ப்பு மேலோங்கியது.
குடும்ப ஆட்சியிலிருந்து மீண்ட தமிழகம் குழப்ப ஆட்சியில் சிக்கியுள்ளது. ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனேயே கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்தத் தொடங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அவமான நடவடிக்கைகளைத் தாங்கிக் கொண்டு இடதுசாரிகளும், சரத்குமாரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். அவமானத்தைக் கண்டுபொறுக்க முடியாத விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கத் தொடங்கி விட்டார். கூட்டணிக் கட்சிகளைப் படுகுழியில் தள்ளிய ஜெயலலிதா பொதுமக்கள் மீது பெருஞ்சுமையைத் தூக்கி வைத்துள்ளார்.
எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றை மத்திய அரசு உயர்த்தும்போது கண்டன அறிக்கை போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயலலிதா நகர பஸ் கட்டணத்தை 50 சதவீதமாகவும் புறநகர் பஸ் கட்டணத்தை 60 சதவீதமாகவும் பால் விலையை 25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளõர். இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா. தமிழக அரசின் கடன் சுமையை நீக்குவதற்கு ஒரு இலட்சம் கோடி கடனாகத் தருமாறு பிரதமர் மன்மோகனைச் சந்தித்தபோது ஜெயலலிதா கோரிக்கை விடுத்தõர். அந்தக் கோரிக்கைக்கான பதிலை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ஆகையினால் விலையைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டதனால் கீழ்மட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை அதிகரிப்பினால் தமிழக அரசின் மீது மக்கள் சீற்றம் கொள்ளக் கூடாது என்பதில் ஜெயலலிதா அவதானமாக செயற்பட்டுள்ளார். விலை அதிகரிப்புக்கும் தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மத்திய அரசு கை விரித்ததனால் தான் விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் தோன்றி விளக்கமளித்துள்ளார் ஜெயலலிதா. விலை உயர்வுக்கு தமிழக அரசு மீது மக்கள் கோபம் கொள்ளாது மத்திய அரசின் மீது எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்றே தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். இந்த அணுகு முறை அவருக்கு எதிராகவே மாறும் நிலை உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை உயர்ந்துள்ளது. மின் கட்டணமும் விரைவில் உயரும் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக ஆட்சி மாற்றத்துக்குஇவைகாரணமாக அமையலாம்.தமது ஆட்சி பறிபோகும் என்றுமின் வாரியத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் அன்றே திருவாய் மலர்ந்தருளினார்.
பொருட்களின் விலையை உயர்த்தாது ஆட்சி நடத்த முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. விலை அதிகரிக்கப்படும் போது பொதுமக்களைப் பாதிக்காது அதிகரிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் விலை அதிகரிப்பு மக்களின் தலையில் பாரிய சுமைகளை ஏற்றியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது ஒரே தடவையில் இவ்வளவு அதிகமாக விலை உயர்த்தப்படவில்லை எனது ஆட்சிக் காலத்தின் போது பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பெருமையாக அறிக்கை விட்டுள்ளார் கருணாநிதி. பஸ் கட்டணத்தை நேரடியாக உயர்த்தாது மறைமுகமாக உயர்த்தியதாக கருணாநிதி மீது குற்றம் சாட்டப்படுகிறது. மறைமுக விலை உயர்வு மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை.
திரõவிட முன்னேற்றக் கழகம் விட்ட தவறுகள் காரணமாக தமிழக ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது. தமிழக ஆட்சி அதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டரை வருடங்கள் உள்ளது. ஆகையினால் இந்த விலை அதிகரிப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் விலை அதிகரிப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள ஜெயலலிதா தயவு தாட்சண்யமின்றி பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் அதிகரித்துள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு என்பனவற்றின் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தயாராகின்றன. எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தமிழக அரசுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆளும் கட்சியை அனுசரித்து அரசியல் நடத்தி வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைத் தாக்கத் தொடங்கி விட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த விஜயகாந்த் இப்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா தன்னை அவமதித்ததனால் ஜெயலலிதாவின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார் விஜயகாந்த். ஆளும் கட்சியை அனுசரித்துப் போவதைக் கைவிட்டு உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படப் போவதாக உணர்த்தியுள்ளார்.
சட்ட சபை இடமாற்றம், சமச்சீர் கல்வி, ஊழியர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றினால் கடும் விமர்சனத்துக்குள்ளான தமிழக அரசு பஸ் கட்டணம், பால் விலை அதிகரிப்பினால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளதை ஆட்சி பீடம் ஏறி ஆறு மாதங்களுக்கிடையில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தைநீதிமன்றத்தி நாடவேண்டியநிலை மக்களுக்கு ஏற்பட்டது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், மக்களின் உயர்வுக்குப் பாடுபடுவதும் அரசாங்கத்தின் கடமை என்பதை ஜெயலலிதா உணரத் தவறிவிட்டார். ஆட்சி பீடம் ஏறியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பழிவாங்க ஆரம்பித்தார். இப்போது பொது மக்களின் தலையில் கை வைக்கத் தொடங்கி விட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆட்சியின் போது ஏற்பட்ட கடன் சுமையைச் சமாளிக்கவே பஸ் கட்டண, பால் விலை உயர்த்தப்பட்டது என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மா



வீரகேசரிவாவாரவெளியீடு27/11/11