Monday, March 25, 2019

ஹைதராபாத்தை விரட்டி வென்றது கொல்கட்டா


ஐபிஎல் தொடரின் இரண்டாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கட்டா நைற் ரைடர்ஸ் ஆகியவறுக்கிடையே போட்டி கொல்கட்டா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் மூன்று விக்கெற்களை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தது. கடினமான இலக்கை விரட்டிய கொல்கட்டாவுக்கு  நான்கு விக்கெற்களை இழந்து 183 ஓட்டங்கள் அடித்து  ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. கடைசி மூன்று ஓவர்களில் ரசல்ஸ், சுப்பமன் ஜோடி அதிரடியாக விளையாடி ஹைதராபாத்திடம் இருந்து வெற்றியைப் பறித்தார்கள். கடைசி 11 பந்துகளில் 39 ஓட்டங்கள்  அடித்த ரசல்ஸ் ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கட்டா கப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பந்தைச் சேதப்படுத்தியதால் விளையாடத் தடை விதிக்கப்பட்ட டேவிட் வானர் ஹைதராபாத்துக்காக களம் இறங்கினார். ஹைதராபாத் அணித் தலைவ்ர் கேன் வில்லியம்சன் காயமடைந்ததால் புவனேஸ்வர் குமார் தலைமையேற்றார்.


  ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக களம் இறங்கிய வானர், பேர்ஸ்டோவ் ஜோடி நம்பிக்கையளித்தது.  118 ஓட்டங்கள் எடுத்தபோது 39 ஓட்டங்களில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். வானருடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். தடை தாண்டிவந்த வானர் 53 பந்துகளில் மூன்று சிக்ஸர், ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய யூசுப் பதான் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.விஜய் சங்கர் ஆட்டமிழக்காது 25 பந்துகளில் 40 ஓட்டங்கள் அடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். மணீஸ் பாண்டே ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்த ஹைதராபாத் 181 ஓட்டங்கள் எடுத்தது. ரசல் இரண்டு விக்கெற்களையும் பியூஸ் சாவ்ல ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

182 என்ற கடினமான இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொல்கட்டா ஆரம்பத்தில் தடுமாறியது. ஆரம்ப்த் துடுப்பாட்ட வீரரான கிறிஸ்லின் ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார்.  ஆரம்பத்தில் தடுமாறிய நிதுஷ் ரானா, ரொபின் உத்தப்பா ஜோடி பின்னர் அதிரடி காட்டியது. இவர்கள் இருவரும் 80 ஓட்டங்கள் எடுத்தபோது உத்தப்பா 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் இரண்டு ஓட்டங்களுடன் வெளியேறினார். ரானாவுடன் ரசல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய ராணா 47 பந்துகலில் மூன்று சிக்ஸர் எட்டு பவுண்டரி அடங்கலாக 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

15.3 ஓவர்களில்  4 விக்கெற்களை இழந்து 118 ஓட்டங்கள் எடுத்தபோது களம் இறங்கிய ரசல், சுப்மன் ஜோடி ஹைதராபாத்தின் வெற்றிக் கனவைத் தகர்த்தது.  கடைசி மூன்று ஓவகளில் முறையே  19.21.14 ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்கள். ரசல் சந்தித்த 11 பந்துகளி, முறையே 6,6,4,1,4,6,4,0,6,1 ஓட்டங்கள் அடித்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரசல் நான்கு சிக்ஸர் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்கள் அடித்தார். ஷுப்மன்கில் 18 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்ட  நாயகன் விருது ரசலுக்ல்கு வழங்கப்பட்டது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியடைந்த் ஹைதராபாத் இம்முறை முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது.



Sunday, March 24, 2019

சென்னை சுழலில் சிக்கிய பெங்களூர்


டோனியா,கோலியா - ரெய்னாவா,கோலியா சென்னையா,பெங்களூரா போன்ற எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற போட்டியில் டோனியும் ரெய்னாவும் வெறி பெற்றனர்.   சென்னை சுப்பர் கிங்ஸ், ரோயல் சலஞ்ச் பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே சென்னையில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் ஏழு விக்கெற்றால் சென்னை வெற்றி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி, களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்டாடிய பெங்களூர் 17.1ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து 70 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.

 பெரிதும் எதிர்பார்கப்பட்ட கோலி, ஆறு ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் இல்லாத ஹர்பஜன்னின் பந்தை அடித்த இந்திய அணித்தலைவர் அணிக்குள் வருவதும் போவதுமாக உள்ள ஜடேஜாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மொயின் அலி, டிவிலியஸ் ஆகிய இருவரும் தலா ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய ஹெட்மெயர் ஓட்டம் எதுவும் எடுக்கது ஹர்பஜனின் பந்தை தட்டி விட்டு ஓட முற்படுகையில் மின்னலைப் போல் பாய்ந்து தடுத்த ரெய்னா பந்தை டோனியிடம் கொடுத்டு ரன் அவுட் ஆக்கினார்.


சென்னைக்கு சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் எட்டு ஓவர்களில் முக்கியமான நாகு விட்கெற்களை இழந்து 39 ஓட்டங்கள் எடுத்தது. செனையின் மூன்ரு சுழல் பந்து வீரர்களும் எட்டு விக்கெற்களை  வீழ்த்துனர்.  ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பர்த்தீப் பட்டேல், பிராவோ வீசிய முதல் பந்தை கேதார் ஜாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  பட்டேல் அதிக பட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.  ஏனைய அனைவரும்  ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். பட்டேல் கோலி ஜோடி  அதிக பட்சமாக 16 ஓட்டங்கள் எடுத்தது.

நான்கு ஓவர்கள் பந்துவீசிய ஹர்பஜன் 20  ஆடங்களைக்கொடுத்து மூன்று விக்கெற்களை வீழ்த்தினார். நான்கு ஓவர்க வீசிய இம்ரான் தாஹிர் ஒன்பது ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெற்களை வீழ்த்தினார். ஜடேஜா இரண்டு விக்கெற்களைக் கைப்பற்றினார்.

71 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்குடன் களம் இறங்கிய சென்னை 17.4 ஓவர்களில்  மூன்று விக்கெற்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.  மூன்றாவது ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்காத வட்சன் ஆட்டமிழந்தார். இரண்டாஅது விக்கெற்றில் ஜோடி சேர்ந்த  ரெய்னா, ராயுடு ஜோடி 32 ஓட்டங்கள் எடுத்தது.21 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்த ரெய்னா ஆட்டமிழந்தார்.15 ஓட்டங்கள் அடித்தபோது ஐபிஎல் 117 போட்டியில்  ஒரு செஞ்சரி 35 அரை செஞ்சரி  அடங்கலாக 5000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற முத்திரையை ரெய்னா பதித்தார்.  164 போட்டிகளில் 4954 ஓட்டங்கள் அடித்த கோலி இரண்டாவதி இடத்திலும் 173 போட்டிகளில் 4493 ஓட்டங்கள் அடித்த ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


ராயுடு  28 ஓட்டங்கள் அடித்தார்.  கேதார் ஜாதவ் ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களையும் ஜடேஜா ஆட்டமிழக்காது ஆறு ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.


Friday, March 22, 2019

விசுவாசிகளைக் கைவிட்ட பன்னீர்ச்செல்வம்.


ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துனுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் ஓ. பன்னீர்ச்செல்வம், தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். சசிகலா,தினகரன்,எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களின் அதிகாரப்போக்கைப் பிடிக்காதவர்கள் பன்னீர்ச்செல்வத்தின்  பின்னால் அணிதிரண்டனர். ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய பலம் அவர்களுக்கு இல்லை. என்றாலும் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை தொண்டர்கள் விரும்பவிலை. நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்  தனது மகன் ரவீந்திரநாத்துக்கு பன்னீர்ச்செல்வம் சீற்  வாங்கிக் கொடுத்ததால் அவரை நம்பிச்சென்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 37 தொகுதிகளில் வெற்ரி பெற்றது. பாரதீயஜனதாக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியிலும்  வெற்றி பெற்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் வசமே தற்போது உள்ளன. தமிழகம் புதுவை உட்பட 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆறு எம்பிக்களுக்கு  மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்புக் கொடுத்துள்ளது. அந்த ஆறுபேரும் எடப்பாடியின் ஆதரவாளர்கள். பன்னீர்ச்செல்வத்தின் விசுவாசிகளான 10 எம்பிக்களில் ஒருவருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எடப்பாடியின் கை ஓங்கி, கையறு நிலையில் பன்னீர் இருப்பதை இது  உணர்த்துகிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்க  முயற்சிக்காத பன்னீர்ச்செல்வம் தனது மகன் போட்டியிடுவதற்கு அனுமதி வாங்கிக் கொடுத்ததை அவருடன் இருப்பவர்கள்  ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஓ.பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தபோது பிரிந்தவர்கள் இணைந்துவிட்டார்கள் மனங்கள் இன்னமும் இணையவில்லை என பன்னீரின் ஆதரவாளரான ராஜ்யசபா உறுப்பினர்  மைத்திரேயன் தெரிவித்தார். அது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஸ்டாலின்,கனிமொழி,அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னிறுத்தப்பட்டதால் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தைப் பொறுக்க முடியாத பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார். துணை முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லபாவின் மகன் ராஜ் சத்தியன் ஆகியோர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை தமது வாரிசுகளைக் களம் இறக்க முடியாமல் மெளனமாக இருந்த தலைவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அதிருப்பியுற்ற முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். யாதவ இன வாக்குகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்றத் தேதலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமையால் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் மார்க்கண்டேயன் விழாத்திகுளம் சட்ட சபை இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். 18 சட்டசபை இடைத்தேர்தலைக் குரிவைத்டு காய் நகர்த்தும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு ஸ்டாலினின் தலைமையில் தமிழகத் தலைவர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிப்பதற்கு தினகரன் சத்தமில்லாமல் காய் நகர்த்துகின்றார். தினகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கலை அரசன், ஸ்டாலினின் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியலை ஆரம்பித்த கலை அரசன்  மீண்டும் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ளார்.
எதிர்பார்புகள் நிறைவேறாமையால் கட்சிமாறும் படலம் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் நெருங்கும்போது இன்னும் சிலர் கட்சிமாற வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் சிலகட்சிகளில்  பாரிய மாற்றங்கள் ஏற்பாடும்.

சூரன் ஏ.ரவிவர்மா.

Wednesday, March 20, 2019

தேர்தலுக்கு முன்பே தோற்றுப்போன கூட்டணி


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்ததாகப் பெருமைப்பட்ட தலைவர்கள் இப்போது சிறுமைப்பட்டு நிற்கிறார்கள். ஜெயலலிதாவின் பிரதான எதிரியான ராமதாஸுக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்தது. தேர்தல் நாள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே  பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு எம்பி பதவி உறுதியானது. பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து  கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்த விஜயகாந்துக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர்  புயூஸ் கோயல், தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட பலர் வியஜகாந்தின்  வீட்டிற்குச் சென்றும் அங்கிருந்த யாரும் பிடிகொடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கதவைச் சாத்தியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடன் சரணடைய வேண்டிய நிலைக்கு விஜயகாந்தின் கட்சியான தேசிய முற்போக்கு  திராவிடக் கழகம் தள்ளப்பட்டது. ராமதாஸுக்குக் கொடுக்கபப்ட்ட ஏழு தொகுதிகளைப் பெற ஒற்றைகாலில் நின்ற தேசிய முற்போக்கு திராவிடக்  கழகம் நான்கு தொகுதிகளுடன் அடங்கியது.

பரம எதிரிகளான ராமதாஸும் வியஜகாந்தும் ஒற்றுமையாக தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வியஜகாந்தின் வீட்டுக்குச் சென்ற ராமதாஸ் பழைய பகையை மறந்ததாக சிரித்துக்கொண்டு சொன்னார்.  அந்தக் காட்சியப் பார்த்தவர்களும் சிரித்தார்கள். அரசியல் பதவி மோகத்தால் ராமதாஸ் மிகவும் கீழா இறங்கிச் சென்றுவிட்டார்.

புதிய தமிழகம்,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என் ஆர். காங்கிரஸ் ஆகியவற்ருக்கு தலா ஒருதொகுதியைக் ஒடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகுதியான 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கும் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியும் கலந்துகொள்ளவில்லை. தாம் எதிர்பார்த்த  எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமையால் அக்கட்சிகள் அந்தக் கூட்டத்தைப் பகிஷ்கரித்ததாகத் தெரியவருகிறது. தமக்கு வெற்ரி வாய்ப்பு உள்ள தொகுதிகளை ஒதுக்காமையால் கூட்டணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தலைவர்கள், கையைக் குலுக்கி போஸ் கொடுத்தார்கள். ஆனால் அவை எல்லாம் நடிப்பு என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பகிஷ்கரிப்புச் செய்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக மேடையேறிப் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி மேலெழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு  முன்னரே தலிவர்கள் ஆளுக்கொருபக்கம் திரும்பி இருப்பதை தொண்டர்கள் எப்படி நோக்குவார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் மீது பிரேமலதாவும் சுதீஷும் கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் முழு மனதுடன் பணி செய்ய மாட்டார்கள்.  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வேலையை அவர்கள் குறைத்துவிட்டார்கள்.

ஊழல்மிகுந்த மாநிலம் தமிழகம் என மோடியின் நிழலான அமித் ஷா சான்றிதழ் வழங்கினார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழலைப் பட்டியலிட்டு தமிழக ஆளுநரிடம் கையளித்தது பாட்டாளி மக்கள் கட்சி, சட்டசபையில் துணிச்சலுடன் ஜெயலலிதாவை எதிர்ட்துக் கேள்வி கேட்டவர் கப்டன் என பிரேமலதா ஞாபகப் படுத்தியுள்ளார். விஜயகாந்துக்கும் ராமதாஸுக்கும் இடையிலான பகை என்றைக்கும் மாறாதது. இவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது போல நடிக்கிறார்கள். அந்தக் கட்சிகளின் எதிர்காலம் தொண்டர்களின் கையில் இருக்கிறது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Friday, March 8, 2019

தலைமை இல்லாது கூட்டணியை குழப்பும் தேமுதிக



கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் அரசியல் சாணக்கியர்களையே தடுமாறச்செய்தவர் விஜயகாந்த். ரசிகர் மன்றங்களை அரசியல் அலுவலகங்களாக்கி கருப்பு எம்ஜிஆர் அன்ர பெயருடன் தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனவில் கம்பீரநடைபோட்டவர். மக்களுடனும் கடவுளுடனும் கூட்டணி என்ற விஜயகாந்தின் சத்தியப்பிரமாணத்தில் மயங்கியவர்கள் அவருக்கு வாக்களித்தனர். கருணாநித்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடான அரசியல் தலைவராகவே சிலர் விஜயகாந்தைப் பார்த்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வீழ்த்துவேன் என கங்கணம் கட்டி அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள் அந்தக் கட்சிகளிடன் சரணடைந்ததுதான் வரலாறு. என்வழி தனிவழி என்ற ரஜினியின் சினிமா வசனத்தை நிஜத்தில் நடை முறைப்படுத்தியவர் விஜயகாந்த். கருணாநிதியின் வெற்ரி தோல்வியையும் ஜெயலலிதாவின் வெற்றி தோல்வியையும் ஒரு காலத்தின் வைகோவும் ராமதாஸும் தீர்மனித்தனர். அந்த இடத்தை விஜயகாந்த் பிடித்ததால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கடுப்பாகினர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் விஜயகாந்தின் பக்கம் சென்றதால் விஜயகாந்தை தனது கட்சிக் கூட்டணியில் இணைத்தார் ஜெயலலிதா. அன்று சரிந்த விஜயகாந்தின் செல்வாக்கு இன்று படுபாதாளத்தில் விழுந்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிகளின் கூட்டணிப்பேரம் முடிந்து விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளை வைத்துக்கொண்டு தன்னுடன் இணைந்த கட்சிகளுக்கு 20 தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது. விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவதென்று முடிவெடுக்க முடியாமல் விஜயகாந்தின் கட்சி தடுமாறுகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை குன்றியதால்  அவருடைய மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சுதீஷும்  கூட்டணிப்பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்துகின்றனர். அமெரிக்கவின் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய  விஜயகாந்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ரஜினி, ஸ்டாலின், சரத்குமார் ஆகியோ சென்று பார்வையிட்டனர். உடல் நலம், பற்றி விசாரிக்கச்சென்றவர்கள் அங்கு அரசியலும் பேசி இருப்பார்கள். எவரும் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. விஜயகாந்தின் அரசியல் எதிரியான ராமதாஸின் கட்சிக்கு கொடுத்த தொகுதிகளுக்கு  குறையாமல் தமக்கும்  தரவேண்டும் என சுதீஷ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 10 சத வீதமாக இருந்த விஜயகாந்தின் வாக்கு வங்கி இரண்டு சதவீதமாக இருப்பதனால் ராமதாஸுக்குக் கொடுத்த ஏழு தொகுதிகளைக் கொடுக்க அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மறுக்கிறது.

மத்திய அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களும் சுமார் 20 நாட்களாக பிரேமலதாவுடனும் சுதீஷுடனும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. தமது மதிப்பை உயர்த்துவதற்காக ஸ்டாலின் வந்து அரசியல் பேசினார்  என ஒரு குண்டை பிரேமலதா தூக்கிப் போட்டார். அதற்கும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மசியவில்லை. பிரதமர் மோடி, தமிழகத்தில் பங்குபற்றும் அரச வைபவத்தில் வைபவத்தில்  கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற வேண்டும் என பாரதீய ஜனதாத் தலைவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் விரும்பினார்கள்.  மாலையில் மோடியின் கூட்டம். அன்று நண்பகல் ஹோட்டல் ஒன்றில் மத்திய அமைச்ச்ர் பியூஸ் கோயலுடன் சுதீஸ் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அன்று முடிவு எட்டப்படும் என அனைவரும் காத்திருந்தபோது துரை முருகனின் பேட்டி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.

 பாரதீயஜனதா அமைச்சருடன் சுதீஷ் பேச்சு வார்த்தை நடத்திய அதே  நேரத்தில், வியஜகாந்தின் கட்சிப் பிரமுகர்களான அழகாபுரத்து முருகேசனும் முன்னாள் பொருளாளர் இளங்கோவனும் துரை முருகனைச்  சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகக்  கூட்டணியில் இடம் கேட்டார்கள். தனது கட்சியின் மதிப்பை சுதீஷ் உயர்த்திப் பேசிக்கொண்டிருகும்போது பத்திரிகையாளர் முன்பாக சுதீஷின் இரட்டை வேடத்தை துரை முருகன் வெளிப்படுத்தினார்.  மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வியஜகாந்தின் படம் அகற்றப்பட்டு தமிழிசையின் படம் காட்சிப்படுத்தப்பட்டது.

விஜயகாந்தின் வருகைக்காகக் காத்திருந்த ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டார்.  இதனைத் தெரிந்துகொண்டும் வியஜகாந்தின் கட்சிப் பிரமுகர்கள் துரை முருகனைச் சந்தித்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. பேரம் படியாத்ததால் அணி மாறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றது. விஜயகாந்தின் கட்சியினர் இரண்டு அணிகளுடனும் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தினர். அகிக தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க் வேண்டும் என்பதே அவர்களது முடிவு. அதனாலேயே இரண்டு பக்கமும் பேசி தமது மதிப்பை உயர்த்த முயன்றனர்.
இரண்டு பக்கமும் போக்குக் காட்டியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் தொகுதிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இருக்கிறது. கூட்டணியா தனித்துப் போட்டியா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்ல என பிரேமலதாவும் சுதீஷும் தெரிவித்துள்ளனர். அரசியல் அரங்கில் அவமானப் பட்டு நிற்பதால் பிரேமலதாவும் சுதீஷும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன்  தலைவர்களையும் மோசமாக விமர்சிக்கின்றனர்.

தமிழக சட்ட சபையிலும் பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் விஜயகாந்த், பேசியவையும் அவர்  காட்டிய சைகைகளும் இன்றும் சாட்சியாக இருக்கின்றன. கூட்டணிக்காக காலில் விழுகிறார்கள் என  விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சொன்னதை அரசியல் தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லை.  தமது தரப்பு விளக்கத்தைத் தெரிவிப்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுதீஷும் பிரேமலதாவும் வெளிப்படுத்திய ஆவேசமும் பதைபதைப்பும் பத்திரிகையளர்களை வெறுப்பேற்றியுள்ளது.

இத்தனை களேபரங்களுக்குப் பின்னரும் விஜயகாந்தின் வருகைக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனிக் கதவை அகலத்திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Wednesday, February 20, 2019

மோடியிடம் சரணடைந்த லேடியின் விசுவாசிகள்


கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகியவற்றால் புகைந்து கொண்டிருந்த தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதீய ஜனதாக் கட்சி சேரும் என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி  வைப்பதில்லை என சபதம் ராமதாஸ் இரட்டை இலையின்கீழே ஒதுங்கியுள்ளார். தன்னுடன் கூட்டணி சேர்வதற்கு மோடி மேற்கொண்ட முயற்சிகளை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை மோடியின் ஆசைகள் எவையும் நிறைவேறவில்லை. ஜெயலலிதா இறந்த பின்னர் தான் நினைத்தபடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப்படைக்கிறார் மோடி.
 தமிழகத்தை ஆட்சி செய்வது ஊழல் கட்சி எனக்கூறி அந்த ஊழல்கள் பற்றிய புத்தகத்தை வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிசெய்தவர் ராமதாஸ்.தமிழக அரசு செய்த ஊழல்கள் பற்றிய விபரப் பட்டியலை தமிழக ஆளுநரிடம் கையளித்தவர் ராமதாஸ். தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கிய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டேன் என சபதம் செய்தவர் ராமதாஸ். அவை எல்லாவற்றையும் மூட்டை கட்டிப் பறணில் வைட்துவிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகளும் கூடிதலாக ஒரு ராஜ்ய சபை உறுப்பினர் வழங்கவும் இணக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடபகுதியிலும் கொங்கு மண்டலத்திலும்  பாட்டாளி மக்கள் கட்சிக்கு செல்வாக்குள்ளது. ஆகையினால் இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ராமதாஸின் மகன் அன்புமணிக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட்டால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றி பெறுவார். அதே போல் பாட்டாளி மக்கள் கட்சியின் ஏனைய ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகமே. ஜெயலலிதாவு ஒரு முறை பட்டாளி மக்கள்கட்சிக்கு ஏழுதொகுதிகளைக் கொடுத்தார் அந்தத்தேர்தலில் ஒரு தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறவில்லை.

ராமதாஸ், அன்புமணி ஆகியோரைப் போன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மிகப்பிரபலமானவர் காடுவெட்டி குரு. காடுவெட்டி குருவின் பேச்சைக் கேட்பதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். அவருடைய இறுதிக் காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கைகொடுக்கவில்லை என்ற வருத்தம் உடும்பத்தவரிடம் இருக்கிறது. அன்புமணி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக காடுவெட்டி குருவின் தாயார் அறிவித்துள்ளார். தேர்தல் காலமொன்றின் போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். இந்தத் தேர்தலில் குரல் கொடுக்கப்போவதில்ல என ரஜினி அறிவித்துள்ளார்.  ரஜினியின் ரசிகர்கள் அதனை மறந்திருக்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரானவர்கள் அதனை ஞாபகப்படுத்துவார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல. தமிழக அரசைத் தக்கவைப்பதே அதன் முக்கிய குறிக்கோளாகும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகளையும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளையும் விட்டுக்கொடுத்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.அதற்குப் பிரதி உபகாரமாக  தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடக்கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழக சபாநாயகரினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  21 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி இழந்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் தமிழக அரசு தப்பிப் பிழைக்கும். இல்லையேல் அறுதிப் பெரும்பான்மையை இழந்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் துணையுடன் ஏழு தொகுதிகளுக்கு  மேல் வெற்றி பெறாலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் நம்புகிறார்கள்.

தமிழக சட்ட மன்றத்தில் காலியாக உள்ள  21  தொகுதிகளின் உறுப்பினர்களும் தினகாரனின் ஆதரவாளர்கள். அவர்களில் செல்வாக்குள்ளவரான செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார். ஒன்றரை வருடங்களாக 21 தொகுதிகளிலும் அபிவிருத்தி எவையும்  நடைபெறவில்லை. அந்தத் தொகுதிகளில் வெற்றி பெறவர்கள் பதவி இழந்ததால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலட்த எதிர்ப்பு இருக்கும் என்பது உண்மை.

பலமான கூட்டணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்பது ராமதாஸின்  விருப்பம். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பாட்டாளி மக்கள் கட்சிப் பிரமுகர்கள் இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான பேரம் படியாததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி சங்கமித்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியை விரும்பாத பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் ராஜேஸ்வரி கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். கட்சித்தலைவர்கள் பொன்னாடை போர்த்தி,கைகுலுக்கி ஒற்றுமையாகிவிட்டனர்.  தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.

மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி, தமிழகத்தைக் கண்டு கொள்ளவில்லை. நீட் தேர்வு ,மேகதாது அணக்கட்டு என்பனவற்றின் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு தரவில்லை என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்துக்கு நன்மை செய்யும் தேசியக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அடிக்கடி சொன்னார்கள். அதை எல்லாம்  புறந்தள்ளி பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கியுள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியின் செயலர் எச். ராஜாவின் மீது தமிழக மக்கள் கடுமையான கோபத்திலுள்ளனர்.  அவருடைய இனவாத, மதவாதப் பேச்சுகளை இலகுவில் மறக்க முடியாது. பெண்களை இழிவுபடுத்திப் பேசிய எச். ராஜாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது எனபதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளதாம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அனைவரும் பாரதீய ஜனதாவுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். மூத்த உறுப்பினரான தம்பித்துரை வெளிப்படையாக பாரதீய ஜனதாக் கட்சியை விமர்சிக்கிறார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாரதீய ஜனதாக் கட்சியை அக்குவேறு ஆணி வேறாக விமர்சித்தார் தம்பித்துரை. இந்தக் கூட்டணியை தம்பித்துரை விரும்பவில்லை. பாரதீய ஜனதாக் கட்சிப் பிரமுகரான சுப்பிரமணியன் சுவாமிக்கும் இந்தக் கூட்டணியில் விருப்பமில்லை. வெற்றிக் கூட்டணி என சகலரும் சொல்லிவருகையில் அதற்கு எதிர்மாறாக இந்தக் கூட்டணி வெற்றி பெறாது என சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாமரை மலரும். பாரதீய ஜனதாவின் தலைமையில் கூட்டாணி அமையும் என முழங்கிய தமிழைசை அமைதியாக ஓரத்தில் நின்று நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். மோடிக்கும் பாரதீய ஜனதக் கட்சிக்கும் எதிரான மனநிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நோட்டாவுக்குக் குறவாக வாக்குப் பெற்ற பாரதீய ஜனதாக் கட்சியின் வெற்றி கூட்டணி கட்சிகளின் கையில்தான் உள்ளது.

சூரன்.ஏ.ரவிவர்மா

Sunday, February 10, 2019

பலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்


இநதிய நாடாளுமன்றத்  தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சகல அரசியல் கட்சிகளும் பலமான  கூட்டணியில் போட்டியிட ஆர்வம் கொண்டிருக்கையில்  தமிழகத்தின் சகல தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக கமல் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியை உருவாக்கிய கமல் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியுடவில்லை. அந்தக் கட்சிக்கான வாக்கு விகிதம் என்ன எனவும் சரியாகக் கணிக்கப்படவில்லை. தனித்துப் போட்டி என்ற கமலின்முடிவு அவரின் தன்னம்பிக்கையைப் புலப்படுத்துகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கமல் சந்தித்தது  அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி இல்லை என கமல் உறுதியாகக் கூறியிருந்தார். இந்துத்துவாவின் மீது அதிக மோகம் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சியுடன் கமல் சேரமாட்டார். ஆகையால் காங்கிரஸுடன் கமல் சேர்வார்  என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினால் ராகுல் காந்தி பிரகடனப்படுத்தியபின்னர் அரசியல் கள நிலவரம் மாறிவிட்டது. ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய வேளையில் ஸ்டாலினின் பிரகடனம் காங்கிரஸுக்கும்  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரித்தது.

திராவிட முன்னாற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிரான வாக்குகளைக் கவர்வதற்கு கமல் காய் நகர்த்துகிரார். இதே பாணியில்தான் விஜயகாந்த், அரசியலில் முன்னேறினார். அரசியலுக்கு வரப்போவதாக கமலுக்கு முன்னர் ரஜினி அறிவித்தார். அவரின் அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கிறது.  சினிமாவின் நடிப்பதில் ரஜினி அதிக ஆர்வம் காட்டுகிறார். என் வழி தனி வழி என்பது ரஜினியின் பிரபலமான சினிமா வசனம். அதனை கமல் நிஜமாக்கிவிட்டார். தமிழகத்தின் பலம் வாய்ந்த கட்சிகள் ரகசியமாகக் கூட்டணிப்பேச்சு வார்த்தை நடத்துகின்றன. கமல் துணிந்து களத்தில் இறங்கிவிட்டார். பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்ட கமல் அரசியல் தலைவராகிவிட்டார்.

தமிழகத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து முதல்வராகிய பெருமை எம்ஜிஆரையே சாரும். எம்ஜிஆருடன் சேர்ந்ததால் ஜெயலலிதாவும் முதல்வராகினார். கர்நாடகாவில் நடிகர் என்.டி.ராமராவ் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். அரசியல் கட்சி அமைத்த ஏனைய நடிகர்கள் பலமான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத்திலும்  சட்டசபையிலும் உறுப்பினரானார்கள். சிலர் தோல்வியடைந்தனர்.  கால மாற்றத்தில் அவர்களின் கட்சியும் காணாமல் போய்விட்டது. இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் கமல், கட்சியை ஆரம்பித்துள்ளார்.

கமலுடன் கூட்டணி சேர்வதற்கு எந்தக் கட்சியும் தயாராகவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பலமான கூட்டணியை அமைப்பதற்கு முயற்சி செய்யும்போது கமல் தனித்து விடப்பட்டார். தன்னுடைய நிலமையைப் புரிந்துகொண்ட கமல் துணிச்சலுடன் தனியாகக் களம் இறங்கிவிட்டார்.  நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது கமலின் நோக்கமல்ல. தமிழகத்தில் தனக்குரிய செல்வாக்கைப் பரீட்சிப்பதற்கான களமாக தேர்தலை அவர் கருதுகிறார்

சூரன்.ஏ.ரவிவர்மா.