Thursday, February 3, 2022

அரசாங்கத்தை அசிங்கபடுத்தும் ஊழல் பெருச்சாளிகள்

ஆட்சி மாறலாம்,காட்சி மாறலாம், அமைச்சர் மாறலாம்,ஆனால் ஊழல்  செய்பவர்கள் மாறுவதில்லை. அரசாங்கம்  மாறும்போது வாய்பாடு போல ஊழல் புகார்களை அடுக்குவார்கள். கடந்தகால ஊழலை விசாரிப்பதற்கு ஆணைக்குழுகள்  கோலாகலமாக அமைக்கப்படும். காலப்போக்கில் மக்கள் அதனை மறந்து விடுவார்கள். ஊழலை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் விசாரணைக்குழுக்கள் காணாமல் போவதை யாரும் கண்டுகொள்வதில்லை.

கோட்டாபய ஜனாதிபதியானதும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கருதப்பட்டது. ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார். சில நிறுவனங்களிலும், திணைக்களங்களிலும் ஊழல் தல விரித்தாடுகிறது. அவற்றை இனங்கண்டு தடுப்பதற்குரிய நடவடிகைகளுக்கு ஜனாதிபதி முன்னுரிமை கொடுக்கிறார்..

கைதிகளைத் திருத்தும் சிறைச்சாலைகளில் முறைகேடுகளும், ஊழலும் கலந்து இருப்பதை திடீர் சோதனைகள் மூலம் அறிய முடிகிறது. சிறைச்சாலையை தூய்மைப்படுத்துவதற்காக ஜனாதிபதி புதிய படை அணி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

 சிறைச்சாலைகளில் நடைபெறும்  ஊழல் மற்றும் முறைகேடுகளை சமாளிக்க முன்னாள் முப்படை வீரர்களை உள்ளடக்கிய 500 பேர் கொண்டஸ்பீட் படையணி” (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ், தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இணங்க, SPEAT Force என்ற படையணி சிறைத்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை “Sri Lanka Prisons Emergency Action and Tactical Force” (SPEAT Force) என்ற பெயரில், இதன் முதல் குழுவின் 194 பேர் நான்கு மாத நீண்ட பயிற்சிகளை முடித்து   அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் வலுவூட்டப்பட்ட மனிதாபிமான அணுகுமுறையுடன் இந்தப் படையினர் தமது பணிகளை மேற்கொள்வர்கள் எனவும்,

சிறைத் தண்டனை முடிந்து மீண்டும் சமூகத்திற்குள் நுழையும் முன், கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றுவது இந்தப் படையணியின் கடமையாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாவை பிரதமரின் செயலாளர் மோசடி செய்த விவகாரம் சாமானியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிரதமர்  ஹிந்த ராஜபக்ஷ  எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போதே  அவர் செயலாளராக செயற்பட்டார். மோசடி செய்தவருகு எதிராக உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தினாலும், முற்றாக ஒழிக்க முடியவில்லை என்பதால் விவசாய மற்றும் கமநல காப்புறுதிசபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏப்பா தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றத்தை பெற்றுக்கொடுக்க மூன்று முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை இலஞ்சமாக பெற்றமை சம்பந்தமாக   அமைச்சர் ஒருவர் மீது பாரிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  ஆகியோர் மிகப் பெரிய ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச    இணையத்தள வலையெளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்   கூறியுள்ளார்.

 பொருட்கள் சேவைகள் மீதான வரிவிதிப்பு தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற புதிய நகல் சட்டமூலம் ஊழல்மோசடிகளுக்கும் நிதிநெருக்கடிகளுக்கும் வழிவகுக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் எச்சரிக்கை விடுத்துள்ளர். இந்த நகல் சட்டமூலத்தைச சட்டமாக்கி அதன் மூலம் நிதியமைச்சர் தமக்கு நெருக்கமான வர்த்தகர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் ஆகவே இந்த நகல் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இலங்கைத்தீவு ஏற்கனவே மிகமோசமான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இவ்வாறான சட்டமூலங்கள் மேலும் பல ஆபத்துக்களை உருவாக்குமென்றும் கபீர் காசிம் கூறினார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நெருக்கமானவர்கள் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுளன. இவற்றுக்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கையை மக்கள் எதிர் பார்க்கிறார்கள். அத்தியாவ்சியப் பொருட்கலுக்குத் தட்டுப்பாடு, டொலர்  பற்றாக்குறை, மி துண்டிப்பு எனபனவற்றல் அரசாங்கம் தடுமாறுகிறது. இந்த நிலையில் ஊழல் புகார்க்ளும் அரசாங்கத்தை  அசைத்துப் பார்க்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடி தடுப்புக்குழு அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்குப் பொறுப்பாக மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அன்றைய பிஅத்மரின் அலுவலாக்த்தின் கீழ் இயங்கிய   ஊழல் மோசடி தடுப்புகுழு பல சம்பவங்களை விசாரித்ததுஇறுதியில் அதற்கு என்ன நடந்தது, விசாரணை அறிக்கைகள் எங்கு போயின  போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

  இன்றைய ஊழல் புகார்கள் அடுத்து வரப்போகும் தேர்தலில் எதிரொலிக்கும்  மக்கள் அதனைக் கடந்துபோவார்களா இல்லையா என்பது தேர்தல்      முடிவில் தெரியவரும்.

Tuesday, February 1, 2022

உக்ரேன் மீது சைபர் தாக்குதல் ரஷ்யாமீது சந்தேகம்


 உக்ரேனின்  70 அரசாங்க இணையதளங்களை குறிவைத்து "பாரிய சைபர் தாக்குதல்"  ரஷ்யாவால் நடத்தப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இணையத் தாக்குதலால் உக்ரைன் அரசாங்கத்தின் இணையத்தளங்கள் குறிவைக்கப்பட்டன.   இந்தக் குற்றச்சாட்டை - கிரெம்ளின் மறுத்துள்ளது.

  உக்ரைனுடனான பதட்டங்களுடன் தொடர்புடைய புதிய ரஷ்ய சைபர் தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலையின் காரணமாக, பிரிட்டனின் இணைய பாதுகாப்பு மையம்   நிறுவனங்களை தங்கள் இணைய பாதுகாப்பை சரிபார்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.

நேஷனல் சைபர் செக்யூரிட்டி சென்டரின் (என்சிஎஸ்சி) செயல்பாட்டு இயக்குனர் பால் சிசெஸ்டர்  கருத்துத் தெரிவிக்கையில்,   "உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பாக இங்கிலாந்து நிறுவனங்களுக்கு எந்த குறிப்பிட்ட இணைய அச்சுறுத்தல்களும் எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அவர்கள் நெகிழ்ச்சியுடன் இருப்பதை உறுதிசெய்ய வழிகாட்டுதலைப் பின்பற்றவும்."பல ஆண்டுகளாக, சைபர் ஸ்பேஸில் தீங்கிழைக்கும் ரஷ்ய நடத்தையின் வடிவத்தை நாங்கள் அவதானித்துள்ளோம். உக்ரைனில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள், நாங்கள் முன்பு கவனித்த இதேபோன்ற ரஷ்ய நடவடிக்கைகளின் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது"  என்றார்.

உக்ரைன் ஜனாதிபதியின்  உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகரான ஓலெக்சிய் Dஅனிலொவ், அந்த நேரத்தில் ஸ்க்ய் ணெந்ச் இடம், தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா இருப்பது 99.9% உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார் .

உக்ரைனின் எல்லைகளுக்கு அருகில் ரஷ்யா 100,000 துருப்புக்களையும் ஆயுதங்களையும் குவித்துள்ளதால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது

ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிரிமியாவை இணைத்து கிழக்கில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு - இராணுவ அணிதிரட்டல் அதன் அண்டை நாடு மீது ஒரு புதிய ரஷ்ய படையெடுப்பு மேற்கத்திய தலைநகரங்களில் அச்சத்தைத் தூண்டியுள்ளது.

உக்ரைனில் உள்ள அரசாங்க தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய இராணுவ உளவுத்துறை நோட்பெட்யா தாக்குதலை நடத்தியதாக இங்கிலாந்து முன்பு குற்றம் சாட்டியது.

சைபர் விரோதங்கள் என்பது ஒரு வகையான தாக்குதல் ஆகும், இது போரின் வாசலில் அல்லது ஒரு உடல், இராணுவ படையெடுப்பின் ஒரு பகுதியாக நடக்கும்.

சைபர் ஆயுதங்கள் புவியியல் எல்லைகளை மதிக்காததால், உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் மோதல் யாரையும், எங்கும் எவ்வாறு பாதிக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்.

"வழிகாட்டுதல் ஒரு தாக்குதலுக்கு பலியாகும் அபாயத்தைக் குறைக்கும் செயல் நடவடிக்கைகளைப் பின்பற்ற நிறுவனங்களை ஊக்குவிக்கிறது" என்று சைபர் மையம் கூறியது.

சைபர் தாக்குதலால் பாதிக்கப்படும் நாடுகள்  எந்தவொரு அமைப்பும் அந்த சம்பவத்தை NCSC  க்கு புகாரளிக்க அறிவுறுத்தப்படுகிறது

பீஜிங் ஒலிம்பிகில் இளவரசி அன்னே கலந்துகொள்ள மாட்டார்.


 கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இளவரசி அன்னே இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான இளவரசி சீனத் தலைநகருக்குப் பயணம் செய்வதில் உள்ள "சிரமங்களை" மேற்கோள் காட்டி, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.பீஜிங்கில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஐஓசி கூட்டங்களில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

ஐஓசியின் ஆறாவது நீண்ட கால உறுப்பினர் இளவரசி அன்னே தவறவிட்ட இரண்டாவது தொடர்ச்சியான ஒலிம்பிக் விளையாட்டு இதுவாகும். கொரோனா  காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு டோக்கியோவில் மறுசீரமைக்கப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

2018 ஆம் ஆண்டு பியோங்சாங்கில் நடைபெற்ற குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் அவர் கலந்துகொண்ட கடைசி ஒலிம்பிக் போட்டியாகும்.  "இளவரசி ராயல் இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பெய்ஜிங்கில் நடைபெறும் ஐஓசி கூட்டங்களிலும் அல்லது விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமடைந்தார்" என்று பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை கூறுகிறது.

இளவரசி அன்னே 1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீலில் குதிரையேற்ற அணியில் உறுப்பினராக இருந்தபோது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் முதல் உறுப்பினரானார்.

கனேடிய நகரத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், பாலினப் பரிசோதனையை மேற்கொள்ளாத ஒரே பெண் போட்டியாளர் அவர் மட்டுமே, ஏனெனில் அவரது அரச அந்தஸ்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

டென்னிஸ் உலகில் சரித்திரம் படைத்த நடால்


  17 ஆண்டுகள்.. 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.. மீண்டும் ஃபீனிக்ஸாய் திரும்பிவந்த ரஃபேல் நடால்!

2022 அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி  நடைபெற்றது. இதில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வதேவ் ஆகிய இருவரும் மோதினர். இறுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியை  2  - 6, 6 -  7,6  - 4, 6 -  4, 7  - 5 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வென்று சம்பியனானார். அத்துடன் தன்னுடைய 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இதன்மூலம் ஆடவர் டென்னிஸ் பிரிவில் 21 கிராண்ட்ஸ்லாம் தொடர்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2005ஆம் ஆண்டு ரஃபேல் நடால் முதல் முறையாக தன்னுடைய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

 இந்தப் போட்டியில் தொடக்கத்தில் முதல் இரண்டு செட்களையும் மெட்வதேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றார்.இரண்டு செட்களிலும் நடால் போராடித்தோற்றார்.

அதன்பின்னர் சுதாரித்து கொண்ட ரஃபேல் நடால் மூன்றாவது, நான்காவது சுற்றை வென்றதால்  போட்டி விறுவிறுப்பானது. இதனால் இரண்டு பேரும் தலா 2 செட்களை வென்று இருந்தனர். இதன்காரணமாக போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க 5ஆவது செட் நடைபெற்றது. இந்த ஐந்தாவது செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக இந்தப் போட்டி சென்றதால் இரு வீரர்களும் சற்று சோர்வு அடைந்து காணப்பட்டனர். இருப்பினும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.ஐந்தாவது செட்டில்மெத்தேவ் வெற்றி பெற்றதால் அவருக்கு வெற்ரி வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பினர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் காயத்தால் அவதிப்பட்ட  நடால் அவுஸ்திரேலிய ஒலிம்பிகில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. நடாலின் அனுபவம்  வெற்ரியைத் தேடிக்கொடுத்தது. மெத்தேவ் தவறு செய்யும் வரை காத்திருந்து நடால் வெற்றி பெற்றார்.

களிமண் நாயகன் என வர்ணிக்கப்படும் நடால் அவுஸ்திரேலிய அரங்கில் சளைக்காது விளையாடினார். முதல் இரண்டு மணி நேரம் மெத்தேவின் கை ஓங்கி இருந்தது. கடசி மூன்று மணித்தியாலதில் மெத்தேவிடம் இருந்த வெற்றிக் கனியை நடால் தட்டிப் பறித்தார். மெத்தேவின் 120 மணி வேக சேர்வீஸ்களை நடால் லாவகமாகத் திருப்பி அனுப்பினார்.

ஐந்தாவது செட்டில் இரு வீரர்களும் தலா 5 கேம்களை வென்று இருந்தனர். இறுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியை 2 - 6, 6- 7,6 - 4, 6 -  4, 7  - 5 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வென்று   தன்னுடைய 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

  ரஃபேல் நடால் இரண்டாவது முறையாக அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அவர் 13 பிரஞ்சு ஓபன், 4 யுஎஸ் ஓபன், 2 விம்பிள்டன் ஓபன், 2 அவுஸ்திரேலியன் ஓபன் என மொத்தமாக 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

டென்னிஸ் உலகில் ரோஜர் ஃபெடரர்,ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் இந்த மூன்று பேர் ஆதிக்கம் செலுத்திய அளவிற்கு வேறு யாரும் செய்ததில்லை. 40 வயதாகும் ரோஜர் ஃபெடரர்  2018ஆம் ஆண்டு கடைசியாக அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.  உள்ள ரஃபேல் நடால் தன்னுடைய 34ஆவது வயதில் 2020 பிரஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று தன்னுடைய 20 கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார்.  மூன்றாவதாக உள்ள நோவக் ஜோகோவிச் தன்னுடைய 34ஆவது வயதில் 2021 விம்பிள்டன் பட்டம் வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார். இவர்களில் யார் 21ஆவது கிராண்ட்ஸ்லாம் தொடரை வெல்வார் என்ற போட்டி நிலவியது. கொரோனா தடுப்பு ஊசி காரணமாக அவுஸ்திரேலியாவில் இருந்து ஜோகோவிச் நாடு கடத்தப் பட்டதால் அவரது 1 ஆவதி கிராண்ட்ஸால் கனவு கலைந்தது.

2003ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக வென்று ஃபெடரர் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 2005ஆம் ஆண்டு ரஃபேல் நடால் பிரஞ்சு ஓப்பன் பட்டத்தை வென்று தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 2008ஆம் ஆண்டு அவுஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

கிட்டதட்ட 2003 முதல் 2021 வரை இந்த மூவரும் சேர்ந்து 61 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.  டென்னிஸ் விளையாட்டில் ஒரு ஆண்டிற்கு 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறும். கடைசியாக நடைபெற்ற 74 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இந்த மூவர் மட்டுமே 61 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்கள்

 ரோஜர் ஃபெடரர்   அவுஸ்திரேலியன் ஓபன் 6  ,பிரஞ்சு ஓபன் 1 விம்பிள்டன் 8 , யு எஸ் ஓபன் 5

ரஃபேல் நடால்   அவுஸ்திரேலியன் ஓபன்   2  ,பிரஞ்சு ஓபன்  13  விம்பிள்டன்   2 , யு எஸ் ஓபன்  4

நோவக் ஜோகோவிச்  அவுஸ்திரேலியன் ஓபன்   9, பிரஞ்சு ஓபன் 2,விம்பிள்டன்  6, யு எஸ் ஓபன்  3

பீட் சம்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.