Thursday, February 3, 2022

அரசாங்கத்தை அசிங்கபடுத்தும் ஊழல் பெருச்சாளிகள்

ஆட்சி மாறலாம்,காட்சி மாறலாம், அமைச்சர் மாறலாம்,ஆனால் ஊழல்  செய்பவர்கள் மாறுவதில்லை. அரசாங்கம்  மாறும்போது வாய்பாடு போல ஊழல் புகார்களை அடுக்குவார்கள். கடந்தகால ஊழலை விசாரிப்பதற்கு ஆணைக்குழுகள்  கோலாகலமாக அமைக்கப்படும். காலப்போக்கில் மக்கள் அதனை மறந்து விடுவார்கள். ஊழலை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் விசாரணைக்குழுக்கள் காணாமல் போவதை யாரும் கண்டுகொள்வதில்லை.

கோட்டாபய ஜனாதிபதியானதும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கருதப்பட்டது. ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்தார். சில நிறுவனங்களிலும், திணைக்களங்களிலும் ஊழல் தல விரித்தாடுகிறது. அவற்றை இனங்கண்டு தடுப்பதற்குரிய நடவடிகைகளுக்கு ஜனாதிபதி முன்னுரிமை கொடுக்கிறார்..

கைதிகளைத் திருத்தும் சிறைச்சாலைகளில் முறைகேடுகளும், ஊழலும் கலந்து இருப்பதை திடீர் சோதனைகள் மூலம் அறிய முடிகிறது. சிறைச்சாலையை தூய்மைப்படுத்துவதற்காக ஜனாதிபதி புதிய படை அணி ஒன்றை உருவாக்கி உள்ளார்.

 சிறைச்சாலைகளில் நடைபெறும்  ஊழல் மற்றும் முறைகேடுகளை சமாளிக்க முன்னாள் முப்படை வீரர்களை உள்ளடக்கிய 500 பேர் கொண்டஸ்பீட் படையணி” (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ், தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இணங்க, SPEAT Force என்ற படையணி சிறைத்துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை “Sri Lanka Prisons Emergency Action and Tactical Force” (SPEAT Force) என்ற பெயரில், இதன் முதல் குழுவின் 194 பேர் நான்கு மாத நீண்ட பயிற்சிகளை முடித்து   அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் வலுவூட்டப்பட்ட மனிதாபிமான அணுகுமுறையுடன் இந்தப் படையினர் தமது பணிகளை மேற்கொள்வர்கள் எனவும்,

சிறைத் தண்டனை முடிந்து மீண்டும் சமூகத்திற்குள் நுழையும் முன், கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றுவது இந்தப் படையணியின் கடமையாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாவை பிரதமரின் செயலாளர் மோசடி செய்த விவகாரம் சாமானியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிரதமர்  ஹிந்த ராஜபக்ஷ  எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போதே  அவர் செயலாளராக செயற்பட்டார். மோசடி செய்தவருகு எதிராக உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தினாலும், முற்றாக ஒழிக்க முடியவில்லை என்பதால் விவசாய மற்றும் கமநல காப்புறுதிசபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏப்பா தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றத்தை பெற்றுக்கொடுக்க மூன்று முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை இலஞ்சமாக பெற்றமை சம்பந்தமாக   அமைச்சர் ஒருவர் மீது பாரிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  ஆகியோர் மிகப் பெரிய ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச    இணையத்தள வலையெளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்   கூறியுள்ளார்.

 பொருட்கள் சேவைகள் மீதான வரிவிதிப்பு தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற புதிய நகல் சட்டமூலம் ஊழல்மோசடிகளுக்கும் நிதிநெருக்கடிகளுக்கும் வழிவகுக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் எச்சரிக்கை விடுத்துள்ளர். இந்த நகல் சட்டமூலத்தைச சட்டமாக்கி அதன் மூலம் நிதியமைச்சர் தமக்கு நெருக்கமான வர்த்தகர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் ஆகவே இந்த நகல் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இலங்கைத்தீவு ஏற்கனவே மிகமோசமான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இவ்வாறான சட்டமூலங்கள் மேலும் பல ஆபத்துக்களை உருவாக்குமென்றும் கபீர் காசிம் கூறினார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நெருக்கமானவர்கள் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுளன. இவற்றுக்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கையை மக்கள் எதிர் பார்க்கிறார்கள். அத்தியாவ்சியப் பொருட்கலுக்குத் தட்டுப்பாடு, டொலர்  பற்றாக்குறை, மி துண்டிப்பு எனபனவற்றல் அரசாங்கம் தடுமாறுகிறது. இந்த நிலையில் ஊழல் புகார்க்ளும் அரசாங்கத்தை  அசைத்துப் பார்க்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடி தடுப்புக்குழு அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்குப் பொறுப்பாக மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அன்றைய பிஅத்மரின் அலுவலாக்த்தின் கீழ் இயங்கிய   ஊழல் மோசடி தடுப்புகுழு பல சம்பவங்களை விசாரித்ததுஇறுதியில் அதற்கு என்ன நடந்தது, விசாரணை அறிக்கைகள் எங்கு போயின  போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

  இன்றைய ஊழல் புகார்கள் அடுத்து வரப்போகும் தேர்தலில் எதிரொலிக்கும்  மக்கள் அதனைக் கடந்துபோவார்களா இல்லையா என்பது தேர்தல்      முடிவில் தெரியவரும்.

No comments: