Saturday, January 29, 2022

மிரட்டுகிற‌து தி.மு.க முரண்டு பிடிக்கிறது அ.திமு.க‌


 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் 10 வருட ஆட்சியை அகற்றுவதற்கு ஸ்டாலின் கையில் எடுத ஆயுதங்களில் கமிஷன் - கலெக்ஷன் – கரெப்ஷன் என்ற சொற்தொடரும் அடக்கம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிபீடம் ஏரினால் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்குச் செல்வார்கள் என ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

கடந்த பத்தாண்டுக்கால  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக் ஆட்சியின் போது , முதல்வர் உள்ளிட்ட அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை திராவிட முன்னேற்றக் கழகம்   கிளப்பியது. உள்ளாட்சித் துறை பிளீச்சிங் பவுடர் வாங்கியது முதல் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டது வரை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் புகார்கள் அடுக்கப்பட்டன. 

ஊழல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்களை நடத்தியது.  2020 டிசம்பரில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை ஸ்டாலின் அளித்தார்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊழல் புகார்களை கூட்டணிக் கட்சிகளான பாரதீய ஜனதாக்கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் முன்வைத்து அதிர்ச்சியளித்தன.  ஊழல் இல்லாத இந்தியா எனக் கூறும் பாரதீய ஜனதாத் தலைவர்கள் ஊழல் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம்  ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு பொலிஸ் ஜூலையில்  நடவடிக்கையைத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 20 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த நடவடிக்கை, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக, ஓகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். அடுத்து, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, ஒக்டோபர் மாதம் சி.விஜயபாஸ்கர், டிசம்பர் மாதம் தங்கமணி, ஜனவரி மாதம் கே.பி.அன்பழகன் என மாதம் ஒருவர் வீதம் லஞ்ச ஒழிப்பு பொலிஸாரின் சோதனை நடைபெற்றது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி இடங்களில் சோதனை நடந்தபோது இருந்த பரபரப்பும் முக்கியத்துவமும், தற்போது கே.பி.அன்பழகன் வீட்டில் நடந்த சோதனையின்போது இல்லை.

  சோதனைகள், விசாரணைகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இவர்கள் கைது செய்யப்படவில்லை. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற‌ இருக்கு தகவல் அவருக்கு முன்பே தெரிந்து விட்டது. அதனால் அடுத்த சோதனைகளை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டன. முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி விரட்டிப் பிடிக்கப்பட்டார். அவர் இப்போது  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆட்சியாளர்களின் ஊழலுக்குத் துணைபுரிந்த அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் இப்போது முக்கியமாக எழுந்திருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு நடவடிக்கை குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது 14 புகார்களை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நாங்கள் அளித்தோம். அவற்றின் மீது முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்று கூறினார். அவரிடம், “மாதம் ஓர் அமைச்சர் என்று ரெய்டு போவதையும், அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “அனைத்துப் புகார்கள்மீதும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், ஆடிட்டர்கள் ஆகியோரைக் கொண்ட கட்டமைப்பு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் போதுமான அளவு இல்லை. அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்கான சுதந்திரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், கடந்த ஆட்சியில் ஊழல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளை தற்போதைய அரசு பாதுகாக்கிறது என்றுதான் பார்க்கிறோம் என்றார் அவர்.

ஊழல் வழக்கில் யாரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 1996-ல் ஜெயலலிதா மீதும் பல அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டன. ஆனால், யாரையும் உடனே கைது செய்யவில்லை. ஜெயலலிதாவைக் கைது செய்ததுகூட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான். நினைத்தவுடன் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது. சட்ட நடைமுறைகள் இப்படித்தான் இருக்கின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தருவோம். ஊழல் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், அதற்கும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன என ஹிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தாவைத் தமிழகத்தில் உரிய முறையில் ஏற்படுத்தி, அதன் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கொண்டுவந்துவிட்டால், ஊழல் புகார்களையெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், 2014-க்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய லோக் ஆயுக்தாவை, 2018-ல்தான் தமிழகத்தில் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு, அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. “லோக் ஆயுக்தாவைச் செயல்பட வைப்போம் என்பது தி.மு.க-வின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி. 75 சதவிகிதமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமைப்படும் முதல்வர் ஸ்டாலின், லோக் ஆயுக்தாவை எப்போது செயல்பட வைப்பார்  என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. 

முன்னாள் அமைச்சர்களின் வீடுகள்,அலுவலகங்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்களின் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் பின்னர் வழக்கம் போல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கைகள் வெளியிட்டனர்.  குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் சட்டப்படி குற்றச் சாட்டுகளைச் சந்திப்போம் என சிரித்தவாறு பேட்டியளித்தனர்.

வழக்கை எப்படி இழுத்தடிக்கலாம், எப்படித் தாமதப் படுத்தலாம் எனபதை  முன்னாள் அமைச்சர்கள் அறிவார்கள். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் அப்பீல் செய்யும் வாய்ப்பு உள்ளது.  ஆகையால் இது இப்போதைக்கு முடியும் விவகாரமல்ல.

பிரிட்டிஷ் வீரர்கள் அணியும் உடைகள் மறுசுழற்சி செய்யப்பட்டவை

பீஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் பிரித்தானிய விளையாட்டு வீரர்கள் அணியும் உடைகளை அடிடாஸ் வெளியிட்டது, மறுசுழற்சி செய்யப்பட்ட கடல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காப்புகளை உள்ளடக்கிய வடிவமைப்புகளுடன்.PrimaLoft insulation x Parley Ocean Plastic, கடலோர சமூகங்கள் மற்றும் கரையோரங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட உயர் செயல்திறன் காப்பு, ஹூட் போடியம் ஜாக்கெட் உள்ளிட்ட துண்டுகளாக உள்ளது.

பொருள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட நார்ச்சத்து கொண்டது, மேலும் இது வேகமாக உலர்த்தும், நீடித்த மற்றும் சுவாசிக்கக்கூடியது என்று உற்பத்தியாளர் கூறுகிறார்.

"தைரியம் மற்றும் கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தடுக்கும் வடிவமைப்புடன் யூனியன் கொடியின் சமகால பிரதிநிதித்துவத்தை" காட்டுவதற்காக இந்த உடைகளை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அடிடாஸ் தெரிவித்துள்ளது.நேவி ப்ளூ என்பது பெரும்பாலான ஆடைகளுக்கு அடிப்படை நிறம்.

புதிய சேகரிப்பில் உள்ள பொருட்களில் 40 சதவீதம் பார்லி ஓஷன் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போடியம் ஹூட் ஜாக்கெட், ஒரு போடியம் மிட்-லேயர் ஜாக்கெட் ஆகியவை பாரம்பரிய ஃபிளீஸ்களை விட குறைந்த விகிதத்தில் மைக்ரோஃபைபர்களை உதிர்ப்பதாகக் கூறப்படுகிறது, எனவே சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்,

பிரிட்டிஷ் ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஆண்டி அன்சன், பிரிட்டிஷ் விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட "சின்னமான தோற்றத்தை" பாராட்டினார்.

"டோக்கியோவில் நடந்த கோடைகால விளையாட்டுகளின் வெற்றியைத் தொடர்ந்து, எங்கள் குளிர்கால விளையாட்டு வீரர்கள் பீஜிங்கிற்குச் செல்லும்போது அவர்களுக்கு ஆதரவளிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என்று அன்சன் கூறினார்.

"பயணம் எப்போதும் எளிதானது அல்ல என்றாலும், எங்கள் விளையாட்டு வீரர்கள் நம்பமுடியாத உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் சீனாவில் வெற்றிபெற அவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.

"அடிடாஸ் குழு ஜிபியின் அற்புதமான கூட்டாளியாகத் தொடர்கிறது, மேலும் எங்கள் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவர்கள் பெருமையுடன் அணியக்கூடிய ஒரு சின்னமான தோற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்."

 பிரிட்டிஷ் பாராலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாகி மைக் ஷரோக் மேலும் கூறுகையில்பீஜிங்2022 இல் பாரா விளையாட்டு வீரர்கள் தாங்கள் அணியும் ஆடைகளைப் பார்க்க இது ஒரு "சிறப்பு நாள்" என்று கூறினார். .

Friday, January 28, 2022

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்த ஆண்டகை

இலங்கையில் உள்ள  கத்தோலிக்க மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை எனக்கூறிய கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உரிய விசாரணையை நடத்த உதவியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவுள்ளதாக கடந்த வாரம் கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர். விகாரைகள்,சைவ ஆலயங்கள்,மசூதிகள், பாடசாலைகள்,வைத்தியசாலைகள் போன்றவையும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இரையாகின.எங்கெங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்படக்கூடாதோ அங்கெங்கெல்லாம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அரசாங்கத்தின் மீது நம்பிகை இழந்த காரணத்தினால்  ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைக் கோருவதற்கான  முடிவை எடுத்ததாகவும்  இனிமேலும் அரசாங்கததின் உறுதிமொழியை நம்ப முடியாதெனவும் பேராயர் கூறினார்.பிரதான வல்லரசு நாடுகள் மூலமாகவே இந்தக் கோரிக்கையை விடுக்கவுள்ளதாக அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பேராயர்.

  2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  28 ஆம் திகதி நடைபெற்ற தொடர் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட,  காயமடைந்த  மக்களுக்கு உரிய நீதி இன்னமும் கிடைக்கவில்லை.

 ஈஸ்டர் ஞாயிறு அன்று,   தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தவர்களையும், நட்சத்திக் கோட்டல்களையும் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறைந்தது 253 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள், ஆனால் , இங்கிலாந்து, டென்மார்க், போர்ச்சுகல், இந்தியா, துருக்கி, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பங்களாதேஷ், அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தப்  பயங்கரவாதத் தாக்குதலினால் கொல்லப்பட்டனர்.

நேஷனல் தவ்ஹீத் ஜமாத் (ண்TJ) எனப்படும் அதிகம் அறியப்படாத உள்ளூர் போராளி இஸ்லாமியக் குழுதான் இதற்குக் காரணம் என்று இலங்கை அதிகாரிகள்   தெரிவித்தனர் .முன்னதாக ஐஎஸ் அமைப்பு  தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது. நாட்டை உலுக்குய இத் தாக்குதல் போன்று மேலும்ம் பல தாக்குதல்கள் நடை பெறலாம் என்ற அச்சம் உருவானது.  துரிதமாக நடைபெற்ற விசாரனைகளின் பின்னர்   கிழக்கு நகரமான சாய்ந்தமருதில் உள்ள வீடொன்றை பொலிஸார்  சோதனையிட்டதில் குண்டுவெடிப்பின் மூளையாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய போதகர் சஹ்ரான் ஹாசிமின் உறவினர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் பல இடங்களிலும் இருந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்குவதில் தீவிரமாக செயற்பட்டவர்களில்   பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஒருவர். மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கோட்டாபய வெற்றிபெற்ற பின்னர் அவருடைய அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளின் பின்னரான சூழலில். நம்பிக்கையிழந்து விட்டார்.

ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டிய மகிந்த ராஜபக்ஷ .நாவுக்குச் சென்றார். இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான குற்றச் சாட்டுகள் .நாவில் பாரடுத்தபட்டுள்ளன.

உள்ளகப் பொறிமுறையின் மூலம விசாரணை நடத்தலாம் என இலங்கை அரசாங்கம் அப்போது அறிவித்தது. அரசாங்க்ம் நடத்தும் விசாரணையில் இலங்கைத்  தமிழர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அந்த இடத்துக்கு இப்போது கத்தோலிக்க மக்கள் வந்துள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் ஈஸ்டர் தாக்குதலை  ஜனாதிபதி விசாரணைக்குழு விசாரிக்க ஆரம்பித்தது.

  பொரளை தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸாரால் கைது செய்யப்பட்டவருக்கும் அங்கு வைக்கப்பட்ட குண்டுக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதிப் படுத்தும் காணொழிகள் வெளியாகி உள்ளன.   அந்த  தொடர்பான விசாரணைகள் கூட உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளதென்றும் பேராயர் கூறியுள்ளார்.

பேராயரை  சாந்தப்படுத்த அரசாங்கம்  மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்கலுக்கும் கயமடைந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பேராயர் உறுதியாக இருக்கிறார். ஆணைக்குழுவின் விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து  வருகிறார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரனையில் நம்பிக்கை இழந்த   பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை   நீதிகோரி சர்வதேச சமூகத்தை நாடவுள்ளதாகப் பல முறை கூறியிருந்தார். அது  தொடர்பான எந்த ஒரு முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.  செயற்பாடுகள் எதனையும் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  விசாரணையை நடத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்திருப்பதும் அறிவிப்பில் இருக்குமா அல்லது செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடுமா என்பதை காலம் தான் கூற வேண்டும்.

கொரோனாவை மறக்கடிக்கும் பீஜிங் ஒலிம்பிக்


 சீனாவின் தலை நகரான பிஜிங்கில்  பெப்ரவரி 4ஆம்  திகதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாக உள்ளது. பெப்ரவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  போட்டிகள் அனைத்தும் முடிவடையும். முடிவடையும்.சீனாவின்  வுகான் நகரில் இருந்துதான்  கொரோன ஆரம்பமானதாக உலகம்  குற்றம் சாட்டியுள்ளது.  கொரொனாதாக்கம் ஒரு முறம் இருக்க குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் சீனாவை நோக்கி படையெடுக்க உள்ளனர்.

பெப்ரவரி 4 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்ப வைபவம் நடைபெறூ. டோக்கியோவில் 2020 கோடைகால விளையாட்டு  கொரோனா வைரஸ் தொற்றுநோய்  காரணமாக ஒரு வருடம்  ஒத்திவைக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் நிறைவடைந்து   ஆறு மாதங்களுக்குப் பிறகு பிஜிங்  ஒலிம்பிக் நடைபெற உள்ளது. பீஜிங்  ஒலிம்பிக்  முடிவடியும் வரை கொரோனா பற்றிய செய்திகள் சீனாவில் இருந்து அதிகளவில்  பகிரப்படாது என்பது மட்டும் உண்மை.

சீனாவில் 2008 ஆம் ஆண்டு கோடைகால  ஒலிம்பிக் நடைபெற்றது. இப்போது குளிர்கால ஒலிம்பிக் நடைபெற உள்ளது. கோடை கால,குளிர்கால  ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பெருமை  சீனாவுக்கு  கிடைத்துள்ளது.

  2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு  2015 ஆம் ஆண்டு சீனவுடன் நோர்வே, கஜகஸ்தான் ஆகியவை போட்டியிட்டன. நிதிப் பற்றாக் குறையால் நோர்வே  போட்டியில் இருந்து விலகியது. கோலாலம்பூரில் நடைபெற்ற வாக்கெடுபில் பீஜிங்குக்கு 44 வாக்குகளும், அல்மாட்டிக்கு 40 வாக்குகளும்  கிடைத்தன. நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் பீஜிங் வெற்றி பெற்றது. 2.5  பில்லியன் யுவான் செலவு செய்வதர்கு சீனா திட்டமிட்டது. ஆனால், செலவு பல மடங்க் உயர்ந்துள்ள்து.

1989 இல் தியனன்மென் சதுக்கப் படுகொலைக்குப் பின்னர் சீனா தனது 'மனித உரிமைகளுக்கான இருண்ட காலகட்டத்தில்' உள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதன் ஆண்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. அவர்கள் சின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களை தன்னிச்சையான காவலில் வைத்தல், கட்டாய உழைப்பு, வெகுஜன கண்காணிப்பு மற்றும் அரசியல் போதனை ஆகியவற்றை மேற்கோள் காட்டினர். மங்கோலியன் பள்ளிகளில் மங்கோலியன் மொழியை சீன மாண்டரின் மொழியுடன் மாற்றுவதற்கான முடிவு மற்றும் திபெத்தில் மத சுதந்திரத்தின் கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில், உய்குர் மற்றும் பிற முக்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது, அதை சீனா கடுமையாக மறுத்தது.piய்ஜிங் 2022 விளையாட்டுப் போட்டிகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று பல போராட்டங்கள் மற்றும் அழைப்புகள் உள்ளன. முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெங் ஷுவாய் எங்கிருக்கிறார் என்ற மர்மம் நீடிக்கிறது

டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் - சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் சாங் கௌலி மீது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, சர்வதேச உறவுகள் இன்னும் மோசமாகியது.சீன வலைத்தளமான வெய்போவில் அவர் குற்றச்சாட்டை விவரித்த அவரது ஆரம்ப சமூக ஊடக இடுகையும் நீக்கப்பட்டது.

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா,ஜப்பான் ஆகிய நாடுகள்  இராஜதந்திர ரீதியாக பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கனிக்கின்றன. அதிகாரிகள் எவரும் சீனாவுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால், விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுவதற்கு எதுவித தடையும் இல்லை. கொரோனா அச்சுறுத்தலைக்  காரணம்  காட்டிய வட.கொரியா  சீனாவுக்குச் செல்லப்போவதில்லை  என அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பு குழு சமீபத்தில் ஒரு கருத்தரங்கின் போது விளையாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள், முக்கியமாக விளையாட்டுக்காக சீனாவுக்குச் செல்லும் எவரும் சீன அரசின் 'ஆர்வெல்லியன்' அளவிலான கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள் என்று எச்சரித்தது

மொத்தம் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் ஆறு நகரங்கள் தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்கள் தடுப்பூசி போட வேண்டியதில்லை என்றாலும், இந்த முறை விதிகள் சற்று வித்தியாசமாக உள்ளன.தடுப்பூசி போடாத விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கிராமம் அல்லது விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வந்தவுடன் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நியாயமான மருத்துவ விலக்கு அளிக்கக்கூடிய விளையாட்டு வீரர்களின்  கோரிக்கைகள்  பரிசீலிக்கப்படும். தடுப்பூசி போடப்பட்டவர்கள் அந்த பகுதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு விளையாட்டு வீரரும் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், அதே நேரத்தில் அவர்கள் விளையாட்டுகளின் காலம் முழுவதும் வழக்கமான தினசரி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்

2018 குளிர்கால ஒலிம்பிக்  போட்டியில் , 92 நாடுகள் 102 பதக்க நிகழ்வுகளில் போட்டியிட்டன, தென் கொரியாவின் பியோங்சாங்கில் நடைபெற்றது,   19 நாட்கள் அதிரடிக்குப் பிறகு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது நோர்வே.  மொத்தம் 39 பதக்கங்கள், அதில் 14 தங்கம், மேலும் 14 வெள்ளிகள் 11 வெண்கலம் என தெரிவித்துள்ளனர்.31 பதக்கங்களுடன் ஜேர்மனி இரண்டாவது இடத்திலும், 29 பதக்கங்களுடன் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

 

2022 பீஜிங் ஒலிம்பிக்கில் ஏழு விளையாட்டுகளில் 109 நிகழ்வுகள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளன: பயத்தலான், பாப்ஸ்லெடிங், கர்லிங், ஐஸ் ஹாக்கி, லுஜ், ஸ்கேட்டிங் (ஃபிகர் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்பீட் ஸ்கேட்டிங் இதில் அடங்கும்), மற்றும் பனிச்சறுக்கு (இதில் பனிச்சறுக்கு மற்றும் ஸ்கை ஜம்பிங் ஆகியவை அடங்கும்).

பீஜிங் 2022 இல் ஏழு புதிய நிகழ்வுகள் சேர்க்கப்பட்டன: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பெரிய ஏர் ஃப்ரீஸ்டைல், பெண்கள் மோனோபாப் (அல்லது ஒற்றை நபர் பாப்ஸ்லெட்), ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு ஏரியல்களில் கலப்பு குழு போட்டிகள், ஸ்கை ஜம்பிங் மற்றும் ஸ்னோபோர்டு கிராஸ் மற்றும் ஷார்ட் டிராக் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் கலப்பு ரிலே.

அவர் கலப்பு-பாலின நிகழ்வுகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பெண்களுக்கான நிகழ்வுகளைச் சேர்க்கும் வழிகளில் ஒன்றாகும். பீஜிங்கின் போட்டியாளர்கள் 45 சதவீத பெண்களாக இருப்பது குளிர்கால ஒலிம்பிக் சாதனையாகும்.

பியோங்சாங்கில் 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் கலப்பு-இரட்டையர் கர்லிங் மற்றும் ஆல்பைன் குழு பனிச்சறுக்கு ஆகியவை இருந்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பயத்லான், லுஜ் மற்றும் ஃபிகர் ஸ்கேட்டிங் ஆகியவற்றில் கலப்பு-பாலின போட்டிகள் நடைபெற உள்ளன.

டோக்கியோவில் 2020 கோடைகால ஒலிம்பிக்கில் நீச்சல், டிராக், டிரையத்லான், வில்வித்தை, ஜூடோ மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் ஆண்களும் பெண்களும் ஒரே அணிகளில் போட்டியிடும் ஆறு புதிய போட்டிகள்  சேர்க்கப்பட்டன.

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022 ஐத் தொடர்ந்து பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் 2024 மிலன் குளிர்கால ஒலிம்பிக் 2026 ஆகியவை நடைபெற உள்ளன.2030 குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடத்தும் நாடு எது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவிலை.