Tuesday, February 8, 2022

ஐபிஎல் மெகா ஏலம் 2022 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு

ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியல் பற்றிய அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகஅணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அவர்களின் பெயரை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. அந்த வீரர்கள் போக இந்தியா மற்றும் உலக அளவில் இருந்து ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1214 வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

விண்ணப்பங்களை ஆராய்ந்து தணிக்கை செய்த ஐபிஎல் நிர்வாகம் அதிலிருந்து 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது. இதில் 228 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் என்றும் 355 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடதவர்கள் எனவும் தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம் ஐசிசி துணை உறுப்பு நாடுகளில் இருந்து 7 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளது.

இதில் அதிகபட்ச அடிப்படை விலை தொகையான 2 கோடி ரூபாய்க்கு 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்ச அடிப்படை விலை தொகையான 1.5 கோடிக்கு 20 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதேபோல் ரூபாய் 1 கோடி அடிப்படை விலையில் அதிகபட்சமாக 34 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பங்களாதேஷ்,  அயர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா 5 வீரர்களும், 3 நமீபியா வீரர்களும், 2 ஸ்காட்லாந்து வீரர்களும், அமெரிக்கா, ஸிம்பாப்வே மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு வீரரும்  தேர்வாகி உள்ளனர்.

 பங்கேற்க ஒவ்வொரு அணிகளிடமும் எவ்வளவு தொகை மீதமுள்ளது மற்றும் எத்தனை வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

1. சென்னை சூப்பர் கிங்ஸ் : எம்எஸ் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னையிடம் 48 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 21 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்யலாம்.

  2. டெல்லி கபிட்டல்ஸ் : டெல்லி அணியிடம் மீதம் 47.5 கோடிகள் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 21 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்ய முடியும்.

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கொல்கத்தாவிடம் 48 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 21 இந்தியர்களையும் 6 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்யமுடியும்.

4. மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 48 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 21 இந்திய வீரர்களையும், 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

 5. சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் : ஹைதெராபாத் அணியிடம் 68 கோடிகள் உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்ய முடியும்

 6. ராஜஸ்தான் ராயல்ஸ் : ராஜஸ்தான் அணியிடம் 62 கோடிகள் மீதியுள்ளது. அந்த அணி 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்யலாம்.

7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : பெங்களூரு அணியிடம் 57 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

8. பஞ்சாப் கிங்ஸ் : பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மற்ற அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 72 கோடிகள் உள்ளது. அந்த அணியால் 23 இந்திய வீரர்களையும் 8 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

9. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் : புதிய லக்னோ அணியிடம் 59 கோடிகள் மீதி உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டவர்களையும் தேர்வு செய்ய முடியும்.

 10. அஹமதாபாத் : புதிய அஹமதாபாத் அணியிடம் 52 கோடிகள் மீதம் உள்ளது. அந்த அணியால் 22 இந்திய வீரர்களையும் 7 வெளிநாட்டு வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.

ஒரு வீரருக்காக பல் அணிகள் போட்டியிட்டால் பல கோடி செலவு செய்தால் வாங்கும் வீரர்களின் தொகை மாறி விடும்.

ஐபிஎல் இல் மீண்டும் ஸ்ரீசாந்த் 

 

 

கிரிக்கெட் சூதாட்ட பிரச்சனை காரணமாக தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் மீண்டும் ஐபிஎல்லில் விளையாட காத்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய அவர் ஏழு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். பின்னர் தன் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு மேல்முறையீடு செய்த ஸ்ரீசாந்த் அந்த வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் தற்போது 38 வயதில் மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் இதுவரை 44 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

 கடந்த ஆண்டு தன் மீது இருந்த புகாரை வழக்கின் மூலம் வென்ற ஸ்ரீசாந்த் கேரளா அணிக்காக ரஞ்சி போட்டிகளில் களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்திற்க்கான பட்டியலில் தனது பெயரை இணைத்த அவர் தற்போது 590 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவரது குறைந்தபட்ச அடிப்படை விலையாக 50 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments: