நீட் தேர்வு விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துக் கிளம்பியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த காரணிகளில் நீட் விவகாரமும் ஒன்று. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்ற கோஷம் தேர்தலில் ஓங்கி ஒலித்தது. பாரதீய ஜனதாவைத் தவிர மற்றைய அனைத்துக் கட்சிகளும் நீட் விலக்குக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கபப்ட வேண்டும் என்று சொல்லும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனி வழி செல்கிறது.
தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு
ஆளுநருக்கு
அனுப்பி
வைக்கப்பட்ட
மசோதாவை
நான்கு
மாதங்களின்
பின்னர்
அவர்
திருப்பி
அனுப்பிவிட்டார்.
சுடச்சுட
சட்டப்
பேரவையைக்
கூட்டிய
முதல்வர்
ஸ்டாலின்
அதனை
மீண்டும்
ஆளுநருக்கு
அனுப்பினார்.
தமிழக
அரசுக்கும்
மத்திய
அரசுக்க்கும்
இடையிலான
பனிப்போர் இப்போது உச்சத்தில்
உள்ளது.
முதல்வர் ஸ்டாலினால் கூட்டப்பட்ட சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில்ல் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பாட்டாலி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டன. அண்ணா திராவிட முனேற்றக் கழகம், பாரதீய ஜனதாக்கட்சி ஆகியன இக் கூட்டத்தைப் புறக்கணித்தன.
இக்கூட்டத்தில் பேசிய
முதல்வர்
ஸ்டாலின்,
" நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக
நான்
ஆளுநரை
சந்தித்தேன்.
முன்னதாக
அனைத்து
கட்சி
கூட்டத்தை
கூட்டினேன்.
விலக்கு
அளிக்க
தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
11 புதிய
மருத்துவக்
கல்லூரிகளைத்
திறந்து
வைத்தபோது,
பிரதமரிடம்
முறையிட்டேன்.
இப்போது
143 நாட்கள்
எங்கள்
மசோதாவை
தனது
மேசையில்
வைத்திருந்த
பிறகு,
அதை
ஆளுநர்
திருப்பி
அனுப்புள்ளார்"
என்று
தெரிவித்தார்.
மேலும், அவர்,
"நீட்
தேர்வில்
இருந்து
விலக்கு
அளிக்க
வேண்டும்
என்பது
8 கோடி
மக்களின்
உணர்வை
மாநில
சட்டபேரவையில்
ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டது.
இன்றைய
அனைத்துக்
கட்சிக்
கூட்டத்தில்
உங்கள்
கருத்துகளை
தெரிவிக்குமாறு
அரசியல்
கட்சிப்
பிரதிநிதிகளை
அனைவரையும்
கேட்டுக்கொள்கிறேன்",
என்றும்
கூறினார்.
மத்திய அரசுக்கும்
மாநில
அரசுக்கும்
உறவுப்
பாலமாக
இருக்க
வேண்டிய
ஆளுநர்
பல
சமயங்களில்
மாநில
அரசை முடகுக்குவதில் குறியாக இருப்பார். ஜனாதிபதிக்குக்
கொடுப்பதற்காக
மசோதக்கள்
ஆளுநருக்கு
அனுப்பி
வைக்கப்படுவது
வழமை.
மத்திய
அரசுடன்
இணங்கிப்
போனால்
அந்த
மசோதா
ஜனாதிபதிக்கு
அனுப்பி
வைக்கப்படும்.
மத்திய
அரசைப்
பகைத்தால்
மசோதா
திருப்பி
அனுப்பப்படும்.
இரண்டாவது
முறையும்
மசோதா
அனுப்பப்பட்டால்
திருப்பி
அனுப்ப
முடியாது.
ஆனால்,
அதனை
ஜனாதிபதிக்கு
எப்போது
அனுப்ப
வேண்டும்
என்பதற்கான
கால
அவகாசம்
எதுவும்
இல்லை.
ஆகையால் ஆலுநருக்குத் திருப்பி
அனுப்பப்பட்ட
மசோதா
ஆளுநர்
மாளிகையில்
பத்திரமாக இருக்கும்.
மாநில அரசாங்கத்தை இயக்க விடாமல் தடுப்பது தான் ஆளுநரின் வேலை என சிலர் தவறாகக் கருதுவதால் மத்திய அரச்சங்கத்தில் இருந்து கிடைக்க வேண்டியவை உரிய காலத்தில் கிடைப்பதில்லை. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான் என்பதை ஆட்சி அதிகாரம் உணர்வதில்லை. கருணாநிதி,ஜெயலலிதா ஆகியோரின் காலத்திலும் ஆளுநரின் கெடுபிடி இருந்தது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்ச்செல்வமும் முதலமைச்சராக இருந்தபோது ஆளுநரின் கெடுபிடிகளை அனுசரித்துப் போனார்கள். ஆகையால், அவர்களுக்கு மத்திய அரசாங்கத்தால் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.
மேகாலயாவில் இருந்து ரவி
தமிழகத்துக்கு
சென்றபோதே
பிரச்சினையும்
கூடவே
சென்றது.
ஜனாதிபதிக்கு
அனுப்புவதற்காக கொடுக்கப்பட்ட மசோதாவை
ஆளுநர்
கொடுக்கவில்லை
என்றால்
தமிழக
அரசாங்கம்
அடுத்து
என்ன
செய்யப்போகிறது
என்ற
எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
தமிழகப் பிரச்சினைகள் ஒரு புறம்
இருக்க,
அகில
இந்திய
அளவில் தன்னை நிலை நிருத்த
ஸ்டாலின்
காய்
நகர்த்துகிறார்.
திராவிடம், தமிழ்,
சமூக
நீதி,
மதசார்பின்மை,
என
திராவிட
முன்னேற்ற
கழகம்
மீண்டும்
தங்கள்
களத்திற்கான
அடித்தளத்தை
கட்டமைக்க
ஆரம்பித்துள்ளது.
திராவிட
முன்னேற்றக்
கழகத்தின் அடிநாதமாக விளங்கிய
சமூகநீதியை
இப்போது
ஸ்டாலின்
கையில்
எடுத்திருப்பதன்
பின்னால்
அகில
இந்திய
அரசியல்
யுக்தியும்
உள்ளது
என்கிறார்கள்
அரசியல்
நோக்கர்கள்.
சமீபத்தில் மருத்துவ
இடஒதிக்கீட்டில்
ஓ.பி.ஸி.பிரிவினருக்கான
27 சதவீத
இடஒதிக்கீட்டை
முறைப்படி
வழங்க
வேண்டும்
என்று
உச்ச
நீதிமன்றம்
தீர்பளித்தது.
இந்த
விவகாரத்தினை
உச்ச
நீதிமன்றத்திற்கு
கொண்டு
சென்றதில்
தி.மு.கவுக்கு
முக்கிய
பங்கு
உண்டு.
இதன்பிறகு
தமிழக
முதல்வர்
ஸ்டாலின்,
“சமூகநீதிப்
போராட்டத்தை
முன்னெடுத்துச்
செல்லுதல்”
குறித்த
தேசிய
கருத்தரங்கினை
ஆன்லைன்
வழியாக
நடத்தினார்.
இந்த கருத்தரங்கில்
திராவிடர்
கழகம்,
இந்திய
யூனியன்
முஸ்லீம்
லீக்,
ராஷ்டிரிய
ஜனதா
தள்,
திரிணாமுல்
காங்கிரஸ்,
ஆந்திர
மாநில
கல்வித்துறை
அமைச்சர்
உள்ளிட்ட
பலரும்
தங்கள்
கருத்துக்களை
முன்வைத்தனர்.
குறிப்பாக
திராவிட
முன்னேற்றக்
கழகம் பிற்படுத்தப்பட்டோர் இடஒதிக்கீடு
விவகாரத்தில்
மேற்கொண்ட
நடவடிக்கைகளுக்காக
ஸ்டாலினுக்கு
நன்றி
சொன்னார்கள்.
அதோடு,
இந்திய
அளவில்
சமூக
நீதியை
முன்னெடுப்பது
குறித்தான
சிலகருத்துக்களையும்
அவர்கள்
முன்வைத்தனர்.
இதன்பிறகே
அனைத்திந்திய
சமூகநீதிக்கான
கூட்டமைப்பு
திட்டம்
உருவானது.
இந்தியாவில் ஒருகட்டத்தில்
காங்கிரஸ்
கட்சியின்
ஆதிக்கம்
தலைதுாக்கி
நின்றபோது,
ஜனதா
கட்சி
என்கிற
பெயரில்
ஒரு
கட்சியைப்
பல
மாநிலத்தின்
சமூகநீதியை
முன்னெடுத்த
தலைவர்கள்
சேர்ந்து
உருவாக்கினார்கள்.
அந்த
அணி
அன்றைக்கு
அசுர
பலத்துடன்
ஆட்சியிலிருந்த
இந்திரா
காந்தியின்
ஆட்சிக்கே
நெருக்கடி
ஏற்படுத்தியது.
அப்போது
நடந்த
தேர்தலில்
இந்திராவின்
கட்சி
தோல்வியைச்
சந்தித்தது.
அன்றைக்கு
ஜனதாதளத்தில்
இருந்த
பல
தலைவர்கள்,
அந்த
கட்சியிலிருந்து
விலகி
இன்று
வட
மாநிலங்களில்
தனிகட்சியை
நடத்தி
வருகறார்கள்.
அவர்களில்
பலரையும்
தன்
பக்கம்
கொண்டுவர
ஸ்டாலின்
நினைக்கிறார்.
இப்போது,
பா.ஜ.கவின்
மத
அரசியலை
முறையடிக்க
சமூக
நீதி
என்கிற
கருத்தை
கையில்
எடுப்பதால்,
பிற்படுத்தப்பட்ட
மக்களின்
பார்வை
சமூக
முன்னேற்றத்தை
நோக்கி
மாறும்.
இந்திய
அளவில்
இதுபோன்ற
ஒரு
தாக்கத்தை
ஏற்படுத்தினால்
மட்டுமே
அது
எதிர்காலத்தில்
பா.ஜ.கவின்
வீழ்ச்சிக்கு
நல்லது
என்கிற
கருத்தில்
ஸ்டாலின்
இருக்கிறார்.
அதோடு
கருணாநிதியை
அகிலஇந்திய
தலைவர்கள்
துாக்கி
கொண்டாட
காரணமே
மாநில
சுயாட்சிக்கு
அவர்
கொடுத்த
குரலும்,
ராஜமண்ணார்
குழுவின்
அறிக்கை,
சமூக
நீதிக்கான
மண்டல்
கமிஷனை
ஆதரித்து
கருணாநிதியின்
அரசியல்
நகர்வுகளுமே.
ஸ்டாலினும்
தன்னை
தமிழகத்தின்
முதல்வர்
என்கிற
அடையாளத்தோடு
சுருக்கிக்கொள்ளாமல்,
அகில்
இந்திய
அளவில்
சமூகநீதியை
முன்னெடுக்கும்
ஒரு
தலைவராக
தன்னை
தகவமைக்க
நினைக்கிறார்.
காலத்தின் தேவையும்
இப்போது
அதுவாக
இருப்பதால்,
அகில
இந்திய
அளவில்
இந்த
கூட்டமைப்பு
உருவாக்கத்திற்கான
வேலைகள்
வேகம்
எடுத்துள்ளது.
சொல்லப்போனால்,
இந்த
கூட்டமைப்பே
வரும்
நாடாளுமன்ற
தேர்தல்
களத்தில்
ஒன்றாக
இணையும்
நிலைக்கூட
வரலாம்”
என்கிறார்கள்.
கருணாநிதியின் பாணியில்
சமூகநீதியை
முன்வைத்து
ஒரு
அரசியல்
களத்தை
ஸ்டாலின்
கட்டமைக்க
நினைக்கிறார்.
பிரதமர்
பதவிக்கு
ஸ்டாலின்
திட்டமிடுகிறார்
என்கிற
கருத்தை
தி.மு.கவினர்
மறுக்கிறார்கள்.
பிரதமரை
உருவாக்கும்
ஒரு
கிங்மேக்கராகப்
அப்பாவை
போல
தானும்
அகில
இந்திய
அளவில்
அடையாளமாக
வேண்டும்
என்பதே
ஸ்டாலின்
எண்ணத்தில்
உள்ளது.
கருணாநிதியை விட சற்று மேலான அரசியலை ஸ்டாலின் முன்னெடுக்கிறார்.
No comments:
Post a Comment