Tuesday, February 15, 2022

பிரிட்டனின் ராணியாகிறார் கமீலா


 ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக  சாள்ஸ் பதவியேற்கும்போது, அவரது மனைவி கமீலா, ராணியாக இருக்க வேண்டும்,'' என, ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.'

குயின் கன்சார்ட்'பிரிட்டன் ராணியாக பொறுப்பேற்று  70 ஆண்டுகளை  எதிர் வரும் ஜூன் மாதம் நிறைவு செய்கிறார், 95 வயதாகும் ராணி எலிசபெத். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ராணி எலிசபெத் கூறியுள்ளதாவது:

இத்தனை ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு, ஒத்துழைப்புக்கு நன்றி; இதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.எனக்குப் பின், என் மகன் சார்ஸ், அரசராக பொறுப்பேற்கும்போதும், இந்த ஆதரவைத் தொடர வேண்டும்.

சாள்ஸ் அரசராக பொறுப்பேற்கும்போது, அவரதுமனைவி கமீலாவை ராணியாக ஏற்க வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற முழு தகுதிஉடையவர் அவர்.இவ்வாறு அவர் கூறினார். பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தின்படி ராணி ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது, அவரது கணவர்கள், 'பிரின்ஸ் கன்சார்ட்' எனப்படும் இளவரசராகவே கருதப்படுவர். ராஜாவாக கருதப்படமாட்டார்கள்.அதே நேரத்தில் அரசர் பொறுப்பை ஏற்கும்போது, அவரது மனைவி 'குயின் கன்சார்ட்' எனப்படும் ராணியாகவே கருதப்படுவர்.

வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales , இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. 1981 ஆம் ஆன்டுஜூலை மாதம் 29 ஆம் திகதி  திருமணம் நடைபெற்றது. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.

1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று விவாகரத்து இறுதி செய்யப்பட்டது. டயானாவிற்கு $ 23 மில்லியனுக்கும், ஆண்டிற்கு 600,000 டொலருக்கும் இடையில் குடியேற்ற விதிமுறைகளும் பதிவாகியுள்ளன. அவர் மற்றும் சார்லஸ் இருவரும் தங்கள் மகன்களின் வாழ்க்கையில் செயலில் இருக்க வேண்டும். கென்சிங்டன் அரண்மனையில் அவர் தொடர்ந்து வாழ்ந்தார், "இளவரசர் வேல்ஸின்" பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார், ஆனால் "ஹெர் ராயல் ஹைனெஸ்" இன் ஸ்டைலிங் அல்ல.  விவாகரத்திலேயே, அவருடன் பணிபுரிந்த பெரும்பாலான தொண்டு நிறுவனங்களும் தங்களை ஒரு சிலருக்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன: வீடற்ற தன்மை, எய்ட்ஸ், தொழுநோய், பாலே, குழந்தைகளுக்கான மருத்துவமனை, மற்றும் ஒரு புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் ஆகியவற்றில் டயானா தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

1996 ஆம் ஆண்டில், டயானா நிலக்கண்ணிகளை தடை செய்வதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் ராயல் குடும்பத்திற்கான விதிமுறைகளை விட நிலப்பிரதேச எதிர்ப்பு பிரச்சாரத்துடனான தனது ஈடுபாட்டிலும் அவர் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில், டயானா 42 வயதான "டாட்" ஃபாய்டு (ஈமட் முகம்மது அல்-ஃபெயட்) உடன் காதலுடன் இணைந்தார். அவரது தந்தை, முகம்மது அல்-ஃபெயட், ஹரோட் துறையின் பல்பொருள் அங்காடி மற்றும் பாரிசில் உள்ள ரிட்ஸ் ஹோட்டல் ஆகியவற்றின் சொந்தக்காரர். தந்தை மற்றும் மகன் ஆகியோரும் ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஆகஸ்ட் 30, 1997 அன்று, டயானா மற்றும் ஃபாய்டு பாரிஸ் நகரில் ரிட்ஸ் ஹோட்டலை விட்டு வெளியேறினர், அல்-ஃபெயேடு குடும்பத்தினர் மற்றும் டோட்டின் மெய்க்காப்பாளர் ஆகியோருடன் காரில் இருந்தார். பப்பராசிகள்  பின் தொடர்ந்ததால் , பாரிஸில் ஒரு சுரங்கத்தில்  கார் மோதி விபத்துக்குள்ளானது. 1997 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 அன்று டயானா மரணமானார்.  உலகமே துயரத்தில் ஆழ்ந்தது.

  2005ல், சாள்ஸ், கமீலாவை திருமணம் செய்தார். கமீலாவுக்கும் இது இரண்டாவது திருமணம்.தற்போது குயின் கன்சார்ட்டாக கமீலா இருக்க வேண்டும் என, ராணி எலிசபெத் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக இருந்த குழப்பங்களுக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளது.

பிரிட்டன் மக்களிடையே நீண்ட நாட்களாகவே ஒரு குழப்பம் நிலவியது. கமீலா, சாள்ஸ் ஸிசின் முதல் மனைவி இல்லை. இருவருமே முதல் திருமணத்தை விவாகரத்து செய்து, மறுமணம் செய்தவர்கள். இதனால் சாள்ஸ்  அரசராக பொறுப்பேற்கும்போது, கமீலாவை, இளவரசி என அழைக்க வேண்டுமா அல்லது ராணி என அழைக்க வேண்டுமா என்ற சந்தேகம் இருந்தது. கமீலாவை ராணியாக பிரிட்டன் மக்கள் அங்கீகரிப்பரா என்ற குழப்பமும் இருந்தது.

பிரின்சஸ் கன்சார்ட் என, அதாவது இளவரசி என அழைக்கப்பட்டால், அவருக்கு அரச குடும்பத்துக்கான மரியாதை கிடைக்கும்; ஆனால் ராணி அந்தஸ்து கிடைக்காது. இந்த குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், தற்போது ராணி எலிசபெத்தே, கமீலாவுக்கு குயின் கன்சார்ட் எனப்படும் ராணிக்கான அந்தஸ்தை வழங்கி விட்டதால், இனி இதற்கு மறு பேச்சு இல்லை. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. பிரிட்டன் மக்களால் கமீலா, 'ராணி கமீலா' என, இனி அழைக்கப்படுவார். குயின் கன்சார்ட் என்றால், அரசரின் ஜோடி என, அர்த்தம்.

No comments: