இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி தலை நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கைத் தலைவர்களும், உல்கத் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். இலங்கை சுதந்திரமடைந்து 74 வருடங்கள் கடந்த போதும் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக சுதந்திர தினத்தைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். அதற்கு முக்கைய காரணம் இலங்கையின் அரசியல் பின்புலம். தமிழ் மக்களைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் வாக்கு வங்கி அரசியல் முன்னிலையில் இருபதால் தமிழ்ப் பகுதிகலில் சுதந்திர தினத்தின் கோலாகலம் இல்லாமல் போய்விட்டது.
வடபகுதி மீனவர்களின் போராட்டம்
பற்றிய செய்திகள் யாழ்ப்பாணப் பதிரிகைகளின் முக்கிய செய்திகளாயின. சுதந்திர தினம் பற்றிய செய்திகள்
மீனவரின் போராட்ட செய்தியால் மழுங்கடிக்கப்பட்டன.
தமிழக மீனவர்களின் அத்து மீறல் இந்த வருட சுதந்திரதினத்தை
பின்னுகுத் தள்ளி விட்டது. காலையில் வேலைக்குப் போகும் அனைவரும் மாலையில் பதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால், மீனவர்களின்
வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. கடலுக்குச் செல்லும்
மீனவர் உயிருடன் வீட்டுக்குத் திரும்புவார் என்ற உறுதிமொழியை யாராலும் கொடுக்க முடியாது.
இயற்கை அனர்த்தங்களால் மீனவர்களின் வழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் மாண்டுபோகு
சந்தர்ப்பங்களும் உள்ளன.
தமிழக மீன்வர்களால் இலங்கை
மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது. இலங்கைக் கடலில் அத்து மீறும் தமிழக மீனவர்களால் இலங்கையின் வடபகுதி மீனவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுவரை காலமும் அத்து மீறிய
தமிழக மீனவர்கள் இப்போது இரண்டு மீனவர்களை
கடலில் கொலை செய்ததால் போராட்டம் வீறுகொண்டெழுந்துள்ளது. மீனவர்களின் முன்னைய போராட்டங்களை இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இந்திய அரசாங்கமும்
அதர்கு செவிசாய்க்கவில்லை. தமிழக அரசியல் வாதிகள் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பார்கள். அந்தகுரலும்
தமிழகத்திற்கு அப்பால் கேட்பதில்லை.
அத்து மீறும் தமிழக மீனவர்கள்
தொடர்பாக இருநாட்டு மீனவர் சங்கங்கலும் பேச்சு
வார்த்தைகளை நடத்தின அவற்றில் எது வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரச உயர் தலைவர்கலின்
பேச்சு வார்த்தைகளும் பலனளிக்கவில்லை.
நேற்று சனிக்கிழமை ஐந்தாவது
நாளாக மீன்வர் போராட்டம் போராட்டம் நடத்தினர்.
பருத்தித்துறை மீனவர்கள் தமிழக மீனவர்களால்
மிகம் மோசமாகப் பாதிக்கப்பட்டுளனர். அமைச்சர் மட்டத்தில் ந்டத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்
எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மீனவர்களின்
போராட்டத்துக்கு பொது மக்களும் ஆதரவு
தெரிவித்துள்ளனர். அரச அலுவலகங்கள், வீதிகள் என்பனவற்றை மறித்து போராட்டம் நடத்திய
மீனவர்கள் பொது மக்கலின் அன்றாட நடவடிக்கிகளுக்க் எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இயுரைப் பணயம் வைத்து தொழில்
செய்யும் மீனாவ்ர்களின் பிரச்சினைக்கு உரிய
நிரந்தரத் தீர்வு கானபப்ட வேன்டியது அவசியம்.
இலங்கை கடர்படையால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதும் ,கொல்லப்படுவதும் அதைக்கண்டித்து
தமிழகதில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அடிக்கடி நடைபெறும் சம்பவங்கள். இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கபப்டுவது
இரண்டு நாட்டு மீனவர்கள்தான். ஆகையால் தமிழ்
பேசும் மீனவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்பப்தை இரண்டு நாட்டு அரசாங்கங்களும்
கைவிட வேண்டும். மரணமாகும் மீனவர்கள் தமது
நாட்டுப் பிரஜை என்பதை இரு நாட்டு அரசியல்வாதிகளும் மறந்துன் போய்விடுகிறார்கள்.
ஒரு மீனவர் இறந்தால் அவரது குடும்பம் பாதிக்கப்படும் எனபதை மனதில் நிறுத்த
வேன்டும். அந்தக் குடும்பத்துக்கு நிவாரணம் கொடுப்பதால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. பீனவர்களின் அடிபடித் தேவைகள்ப் பூரத்தி
செய்து அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு
கட்ட வேன்டியடு பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.
இதனை மீனவர் பிரச்சினையாகக்
கருதாது இரன்டு நாடுகளின் பிரச்சினை எனப்தை
மாந்தில் நிறுத்தி தீர்வுகொடுக்க வேண்டியது
அவசியம்.
No comments:
Post a Comment