உலக நாடுகள்
அனைத்தும்
ரஷ்ய
- உக்ரைன் எல்லையை உன்னிப்பாக
அவதானித்து
வருகின்றன.
உக்ரைனில்
உள்ள
தூதரத
அதிகாரிகள்
சிலரையும்,
தங்கள்
நாட்டுப்
பிரஜைகளையும்
உடனடியாக
அங்கிருந்து
வெளியேறுமாறு
பல
நாடுகள்
அறிவித்துள்ளன.
யுத்தம்
ஏற்பட்டால்
உக்ரைனில்
உள்ள தங்களது மக்களைப்
பாதுகாப்பாக
வெளியேற்றுவதற்குரிய
முன்னேற்பாடுகளை
சில
நாடுகள்
செய்துள்ளன.
சோவியத் ஒன்றியத்தின்
அங்கமாக
இருந்த
உக்ரைன்,
இப்போது
தனி
நாடாக
இருந்தாலும்
வர்த்தகம்,
பொருளாதாரம்
போன்றவற்றுக்கு
ரஷ்யாவையே
அதிகம்
சார்ந்து
நிற்கிறது.
சமீபத்தில்
ஐரோப்பிய
ஒன்றிய
நாடுகளுடன்
வர்த்தக
உறவை
வளர்த்துக்கொள்ளப்
பேச்சு
நடத்தினாலும்,
ஒப்பந்தத்தில்
கையெழுத்திட
முடியாமல்
ரஷ்யாவின்
மிரட்டலுக்கு
அஞ்சிப்
பின்வாங்கியது.
ஐந்து ஆண்டுகளாகப் பொருளாதார மந்த நிலையால் அமிழ்ந்து கிடந்த ஐரோப்பிய நாடுகள் மெல்லத் தலையெடுத்து வளர்ச்சியை எட்டுகின்றன. கிழக்கில் உள்ள உக்ரைன் போன்ற நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை விரிவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றன. தன்னுடைய செல்வாக்குக்குக் கட்டுப்பட்டுக் கிடந்த உக்ரைன், இப்படித் தன்னைவிட்டுப் பிற ஐரோப்பிய நாடுகளுடன் போவதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே, சமாதானமாகப் பேசியோ மிரட்டியோ உக்ரனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்புகிறது. ரஷ்யாவின் பிடியில் இருந்தால் முன்னேறமுடியாது என்பதால் மேற்குலகின் உதவியை உக்ரைன் எதிர்பார்க்கிறது.
பொருளாதார, வர்த்தக
உடன்படிக்கை
செய்வதற்கு
உக்ரைன்
ஜனாதிபதி
யனுகோவிச்
விரும்புகிறார். அதற்குரிய பேச்சு
வார்த்தைகள்
நடைபெற்றன.
உக்ரைன்
மக்கள்
மேற்குலக
நாடுகளுக்கு
ஆதரவாக
ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
மேற்குலக நாடுகளின் உதவியால் ஒப்பந்தம் செய்தால்
உக்ரைனின்
அரசியல்
பொருளாதாரம்
வளர்ச்சியடையும்
என
எண்ணிய
ஜனாதிபதி யனுகோவிச் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குத்
தயாரானார்.
இதனை
அறிந்த
ரஷ்ய
ஜனாதிபதி
புட்டின்
ருத்திரதாண்டவம்
ஆடினார்.
ரஷ்யாவுடன் செய்துகொண்ட
வர்த்தக,பொருளாதார ஒப்பந்தந்த கடன்களின்
முதலையும்,
வட்டியையும்
உடனடியாகத்
தந்துவிட்டு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும்படி
ரஷ்யா
தெரிவித்தது.
ரஷ்யாவின்
நெருக்கடியால்
ஐரோப்பிய
நாடுகளுடனான
ஒப்பந்தங்களில்
இருந்து
யனுகோவிச்
பின்வாங்கினார்.
இதன்
காரணமாக
யனுகோவுச்சுக்கு
எதிராக
உக்ரைனில்
ஆர்ப்பாட்ட்ங்களும்,
போராட்டங்களும்
நடைபெறுகின்றன.
மேற்குலக நாடுகளுடன்
உக்ரைன்
நெருங்கினால் அரசியல் ரீதியாகவும்,
இராணுவ
ரீதியாகவும்
ரஷ்யாவுக்கு
பாதிப்பு
ஏற்படும்.
ரஷ்யாவின்
பிடியில்
இருந்து
உக்ரைன் நழுவிவிட்டால், கருங்கடல்
பகுதியில்
ரஷ்யக்
கடற்படைக்கு
மிகப்
பெரிய
பின்னடைவு
ஏற்படும்.
பல்வேறு
நாடுகளுக்கு
உக்ரைன்
வழியாகச்
செல்லும்
இயற்கை
நிலவாயு,
எண்ணெய்க்
குழாய்ப்
பாதைகளை
ரஷ்யா
இழக்க
நேரும்.
எனவே
உக்ரேனை
மிரட்டிப்
பணிய
வைக்க
ரஷ்யா
முயற்சிக்கிறது.
ரஷ்ய- உக்ரனை
எல்லையில்
போர்
மூண்டால்
யுத்தத்தில்
பங்குபற்றாத
பல
நாடுகளின்
பொருளாதாரம்
பாதிக்கப்படும்.அரபு
நாடுகளைப்
போல்
ரஷ்ய
அரசுக்கும்
பெரும்
பகுதி
வருமானம்
கச்சா
எண்ணெய்,
இயற்கை
எரிவாயு
விற்பனை
வாயிலாகவே
கிடைக்கிறது.
உலகின்
மூன்றாவது
வது
பெரிய
கச்சா
எண்ணெய்
உற்பத்தி
நாடாக
இருக்கும்
ரஷ்யா
உக்ரைன்
மீது
போர்
தொடுத்தால்
அமெரிக்கா,
இங்கிலாந்து உட்படப் பல
வல்லரசு
நாடுகள்
வர்த்தகத்
தடை
விதிக்க்கப்போவதாக என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் கடந்த அமர்வில்
கச்சா
எண்ணெய்
விலை
7வருட
உச்சத்தினை
எட்டியது.
இது
பரலுக்கு
96 டொலருக்கு அதிகமாக
உயர்ந்தது.கச்சா
எண்ணெய்
,எரிவாயு
ஆகையவற்றுக்காக
ரஷ்யாவை
எதிபார்க்கும்
நாடுகள் மேலும் பாதிப்படையலாம்.
ரஷ்ய அரசின்
மிகப்பெரிய
எண்ணெய்
நிறுவனமான
றொச்னெட்,
சீன
அரசு
கட்டுப்பாட்டில்
இயங்கும்
சீனா
நஷனல்
பெட்ரோலியம்
கோர்பரேஷன்
உடன்
சுமார்
80 பில்லியன்
டொலர்
மதிப்பிலான
100 மில்லியன்
மெட்ரிக்
டன்
கச்சா
எண்ணெய்
பெற
10 வருட
ஒப்பந்தட்தை
பெப்ரவரி
4ஆம்
திகதி
செய்துள்ளது.
ரஷ்யா - சீனா
ஆகியவற்றுகு
இடையில் செய்யப்பட்ட இந்த
ஒப்பந்தம்
மூலம்
இரு
நாடுகள்
மத்தியிலான
வர்த்தகம்
அதிகரிப்பது
மட்டும்
அல்லாமல்
நட்புறவும்
பெரிய
அளவில்
மேம்படும். 80 பில்லியன் டொலர்
கச்சா
எண்ணெய்
ஒப்பந்தம்
மூலம் பொருளாதாரத் தடை விதித்தாலும் வருமான
இழப்பைச்
சமாளித்துக்கொள்ள
முடியும்
என்பது
ரஷ்யாவின்
எண்ணம்.
எங்களைவிட்டுப் பிரிந்துசென்றால்,
கடுமையான
பொருளாதார,
வர்த்தகத்
தடைகளுக்கு
உள்ளாக
நேரும்
என்று
உக்ரனை,
ரஷ்யா
கடுமையாக
எச்சரித்திருக்கிறது.
அப்படிப்
போகாமல்
ரஷ்யாவுடனேயே
தொடர்பை
நீட்டித்தால்,
கோடிக்
கணக்கான
ரூபிள்களைச்
செலவழிக்கத்
தயார்
என்று
ஆசைகாட்டுகிறது.உக்ரைனை
இப்போது
இழுக்க
முற்படுவதைப்
போலவே
முன்னரும்
ஐரோப்பிய
நாடுகள்
முயன்றன.
ஆனால்,
அரைகுறையான
இந்த
முயற்சிகளால்
நன்மை
ஏற்படாது
என்பதை
அவர்கள்
மறந்துவிடுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளின்
தலைவர்கள்
பிரேக்
நகரில்
2009-ல்
கூடி,
சோவியத்
ஒன்றியத்திலிருந்து
பிரிந்த
கிழக்கு
ஐரோப்பிய
நாடுகளுடன்
வர்த்தக
உறவை
வைத்துக்கொள்ள
விரும்புவதாக
அறிவித்தனர்.
அப்படி
அறிவித்த
உடனேயே
ரஷ்யா
அதை
வன்மையாகக்
கண்டித்தது.
வர்த்தக
உறவு
என்ற
பெயரில்,
இந்த
நாடுகளைப்
பிரித்து
தனக்கு
எதிராகத்
திருப்பிவிட
மேற்கத்திய
ஐரோப்பிய
நாடுகள்
சதிசெய்கின்றன
என்று
சாடியது.
இந்த
வர்த்தக
ஒப்பந்தம்
ரஷ்யாவுக்கு
எதிரானது
என்று
அப்போது
அதிபராக
இருந்த
மெத்வதேவ்
வன்மையாகக்
கண்டித்தார்.
அந்த மாதம்
‘நேட்டோ’
நாடுகள்
தங்களுடைய
ராணுவப்
போர்
ஒத்திகையை
ஜார்ஜியா
நாட்டில்
நடத்தின.
அந்த
நாடும்
சோவியத்
ஒன்றியத்தின்
அங்கமாக
இருந்து
விடுதலையான
நாடுதான்.
“இந்த நாடுகள் அரசியல்ரீதியாக
நிலையான
ஆட்சியின்
கீழ்
வருவதும்,
வளம்
பெறுவதும்,
வெளிப்படையான
பொருளாதாரக்
கொள்கைகளைக்
கடைப்பிடிப்பதும்
ரஷ்யாவுக்கும்
ஐரோப்பாவுக்கும்
நன்மை
பயக்கும்”
என்று
ஐரோப்பிய
நாடுகளின்
வெளியுறவுக்
கொள்கைத்
துறைத்
தலைவர்
ஜாவியர்
சோலனா
அப்போது
சுட்டிக்காட்டினார்.
உக்ரைனைத் தங்கள்
பக்கம்
கொண்டுவர
அதற்குத்
தேவைப்படும்
நிதியுதவியை
அளிக்க
பன்னாட்டுச்
செலாவணி
நிதியத்திடம்
பேசுகின்றனர்
ஐரோப்பியத்
தலைவர்கள்.
ஆனால்,
அதில்
வேகம்
போதவில்லை.
அதேசமயம்,
புதினைச்
சந்திக்கவிருக்கும்
யனுகோவிச்
தங்கள்
நாட்டுக்குத்
தேவைப்படும்
உதவிகளையும்
சலுகைகளையும்
அதிகம்
வலியுறுத்துவார்
என்று
தெரிகிறது.
யனுகோவிச்சுக்கு எதிராக
மக்கள்
கிளர்ச்சி
செய்வது
ஒருபக்கம்
இருக்கும்
அதே
வேளையில்,
நாட்டின்
பெரிய
தொழிலதிபர்களும்
அவர்களுக்கு
ஆதரவாக
இறங்கியிருக்கிறார்கள்.
உக்ரைன்
அரசின்
ஊழலும்
தொழில்
- வர்த்தகத்தில்
அரசின்
தலையீடும்
அவர்களைக்
கோபப்படுத்தியிருக்கிறது.
அத்துடன்
தங்களுடைய
வீடுகளிலும்
அலுவலகங்களிலும்
திடீர்
திடீரென
சோதனை
போட்டுத்
துன்புறுத்துவதையும்
அவர்கள்
விரும்பவில்லை.
ரஷ்யா உதவிகளைச்
செய்தாலும்,
அந்தக்
கடன்களுக்கு
அநியாய
வட்டி
செலுத்த
வேண்டியிருப்பதாக
உக்ரைன்
அரசு
உயரதிகாரிகளே
தெரிவிக்கின்றனர்.
எனவே,
குறைந்த
வட்டிக்கு
வேறு
யாராவது
கடன்
கொடுத்தால்,
உக்ரைன்
மேற்கு
ஐரோப்பிய
நாடுகளுடன்
செல்வதற்கும்
வாய்ப்பு
இருக்கிறது
என்கிறார்கள்.
பன்னாட்டுச்
செலாவணி
நிதியம்
கடன்
கொடுத்தாலும்,
அவர்கள்
விரும்பும்
பொருளாதாரச்
சீர்திருத்தங்களை
உக்ரைன்
அரசு
வேகமாகச்
செய்யும்
என்பதற்கு
நிச்சயமில்லை.
எனவே,
கடன்
கொடுப்பதும்
ஆபத்துதான்
என்ற
எண்ணமும்
வங்கித்
தலைவர்களிடம்
இருக்கிறது
ரஷ்ய - உக்ரைன்
எல்லை
பகுதிக்கு
100க்கும்
அதிகமான
இராணுவ
டாங்குகள்
சாலையில்
செல்லும்
வீடியோ
சமீபத்தில்
வைரலானது. ஒரு லட்சத்துக்கும் அதிக
வீரர்கள்
அங்கு
குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால்
போருக்கு
ரஷ்யா
வழிவகுக்கிறது
என்ற
குற்றச்சாட்டு
எழுந்தது.
அமெரிக்கா
உள்பட
ஐரோப்பிய
நாடுகள்
ரஷ்யாவை
கண்டித்து
வருகின்றன.ஆனால்
ரஷ்யா,
பயிற்சிக்கு
தான்
படைகளை
குவித்துள்ளதாகவும்,
போர்
தொடுக்கும்
எண்ணம்
இல்லை
எனவும்
மறுத்து
வருகிறது.
இருப்பினும்
தொடர்ந்து
போர்
பதற்றம்
நிலவி
வருகிறது. இதுதொடர்பான செயற்கைகோள்
படங்கள்
வெளியாகி
பதற்றத்தை
இன்னும்
அதிகரித்துள்ளன.
இந்நிலையில்
தான்
உக்ரைன்
எல்லையில்
ரஷ்யா
குவித்துள்ள
படைகள்
குறித்த
படங்கள்
வெளியாகி
உள்ளன.
மேக்சர்
நிறுவன (Maxar) உயர் தொழில்நுட்ப
திறன்
கொண்ட
செயற்கைகோள்
பெலாரஸ்,
கிரிமியா,
மேற்கு
ரஷ்யாவில்
படம்
எடுத்துள்ளன.
இதில்
ரஷ்ய
படைகள்
ஏராளமாக
குவிக்கப்பட்டிருப்பது
தெரியவந்துள்ளது.
ரஷ்ய
- உக்ரைன்
எல்லை
பகுதிக்கு
100க்கும்
அதிகமான
இராணுவ
டாங்குகள்
சாலையில்
செல்லும்
வீடியோ
சமீபத்தில்
வைரலானது. ஒரு லட்சத்துக்கும் அதிக
வீரர்கள்
அங்கு
குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால்
போருக்கு
ரஷ்யா
வழிவகுக்கிறது
என்ற
குற்றச்சாட்டு
எழுந்தது.
அமெரிக்கா
உள்பட
ஐரோப்பிய
நாடுகள்
ரஷ்யாவை
கண்டித்து
வருகின்றன.ஆனால்
ரஷ்யா,
பயிற்சிக்கு
தான்
படைகளை
குவித்துள்ளதாகவும்,
போர்
தொடுக்கும்
எண்ணம்
இல்லை
எனவும்
மறுத்து
வருகிறது.
இருப்பினும்
தொடர்ந்து
போர்
பதற்றம்
நிலவி
வருகிறது. இதுதொடர்பான செயற்கைகோள்
படங்கள்
வெளியாகி
பதற்றத்தை
இன்னும்
அதிகரித்துள்ளன.
இந்நிலையில்
தான்
உக்ரைன்
எல்லையில்
ரஷ்யா
குவித்துள்ள
படைகள்
குறித்த
படங்கள்
வெளியாகி
உள்ளன.
மேக்சர்
நிறுவன
(Maxar) உயர் தொழில்நுட்ப
திறன்
கொண்ட
செயற்கைகோள்
பெலாரஸ்,
கிரிமியா,
மேற்கு
ரஷ்யாவில்
படம்
எடுத்துள்ளன.
இதில்
ரஷ்ய
படைகள்
ஏராளமாக
குவிக்கப்பட்டிருப்பது
தெரியவந்துள்ளது.
இதன்மூலம் தரைவழி,
வான்வெளி
தாக்குதலுக்கு
தயார்
நிலையில்
ரஷ்யா
இருப்பது
உறுதியாகி
உள்ளது.
மேலும்
பெரும்பாலான
படைகள்
உக்ரைனின்
வடக்கு,
வடகிழக்கு
பகுதிகளை
நோக்கி
உள்ளது.
மேலும்
உக்ரைன்
தென்கிழக்கு,
கிரிமியாவில்
அதிகளவில்
ஹெலிகாப்டர்கள்
நிறுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் மட்டுமல்ல, சோவியத் ஒன்றியத்தில் முன்னர் இருந்த மால்டா, ஜோர்ஜியா ஆகியவற்றுடனும் வர்த்தக உறவுகளை வளர்த்துக்கொள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. உக்ரைனில் இப்போது நடக்கும் கிளர்ச்சி வெறும் வர்த்தக உறவுக்காக மட்டுமல்ல, அரசியல், ராணுவக் காரணங்களுக்காகவும் என்பதே உண்மை. இந்தக் கிளர்ச்சியை யார் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment