Friday, February 18, 2022

பயங்கரவத தடை சட்டத்துக்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்


 பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை   கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  சர்வஜன நீதி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த செயற்திட்டத்தில், அரசியல், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் இளைஞர்கள்  அயுதப்போராட்டத்தைத் தொடங்கியபோது  அதனை அடக்குவதற்காக தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட சட்டம் இன்றளவும்  தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சி ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக மாறிக்கொண்டிருந்தது. 1977 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த ஆயுதக் குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன. 

தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட் இச் சட்டத்தால் சிங்கள, முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு எதிரான சட்டம் என வாளாதிருந்தவர்கள் மீது சட்டம் பாய்ந்தபோதுதான் அவர்கள் விழிப்படைந்தனர். அது எவ்வளவு கொடுமையான சட்டம் என்பதை அனுபவ ரீதியாக ஊணர்ந்தனர்.

1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக ஆறு மாதங்களுக்கு நடை முறைப்படுத்துவதாக கூறியே  அன்றைய அரசாங்கம் அதனைக் கொன்டு வந்தது.   இதுவொரு தற்காலிக சட்ட மூலம் எனவும், ஆறுமாத காலத்திற்கே இது நடைமுறையில் இருக்கும் எனவும் கூறினாலும் இன்றுவரை  அந்தச் சட்டம் பலரை சிறைகு அனுப்பி உள்ளது.  ஒரு அரசாங்கம் அமுல் படுத்தும் சில சட்டங்கலை அடுது பதவிஏற்கும் அரசாங்கம் மாற்றி அமைப்பதுதான் உலக வரலாறு. ஆனால், இந்த பயங்கரவாதச் சட்டம் தமக்குப் பாதுகாப்பானது என அடுத்து பதவியில் இருந்த அரசாங்கங்கள்  நம்பின.

பல இளைஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட்டப் பலரும் சந்தேகம் என்ற ஒரே காரண நிமித்தம், வேறு எந்த அடிப்படைச் சாட்சிகளினது தேவையின்றிக் கைது செய்யப்படவும் காலஎல்லையின்றித் தடுத்து வைக்கப்படவும் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும்  இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியது.  ஒப்புதல் வாக்கு மூலம் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

  பயங்கர வாத நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக  புதிய சட்டங்களை அமுல் படுத்தும் நாடுகள்  மனித உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது.பயங்கரவாத தடைச் சட்டத்தல் கைது செய்யப்பட்டு பல வருடங்களின் பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்படுபவர்களின் எதிர்காலம் பற்றி அரசியல் வாதிகள் சிந்திப்பதில்லை. இளைஞனாக  இருக்கும்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள்,  முதுமையடைந்த பின்னர் விடுதலையான சம்பவங்களும் உள்ளன. அவர் இழந்த இளமையை திரும்பவும் கொடுப்பதற்கு எவராலும்  முடியாது.

18 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் பயங்கரவாத தடை சட்டத் தின் கீழ் இன்றும் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். ஒரு சிலரை பிணையில் விடுவிக்க நட வடிக்கை எடுக்கப்படுள்ளது. ஆனால், இந்த விடுதலைகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகள் மூலமாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இவர்களின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்ட தன் காரணமாகவே இடம்பெற்றுள்ளன.

கொழும்பு கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட  கை எழுத்துப் போராட்ட, வடக்கு, கிழக்கு மாகாணங்கலுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல் களுக்கு அமையவும், புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலி யுறுத்தியதற்கு அமையவும் இப்போது வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் திருத்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார். இதனால் பயங்கரவாத தடைச்  சட்டம் அற்றுப் போகாது. அது உயிர்ப்புடன்தான்  இருக்கப் போகிறது. தமிழ் பேசுபவர்களும், அவர்களுக்கு ஆதரவான சிங்கள மக்களும்  கையெழுத்திடுவதால்   பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது.  ஒட்டு மொத்த மக்களும் குரல்கொடுக்கும் போது சட்டட்தில்  அது அற்றுப் போகும் காலம் உருவாகும்.

No comments: