சிவனின் திருவிளையாடல் கதைகளைத்தொகுத்து 'திருவிளையாடல்' எனும் பெயரில் திரைப்படம் இயக்குவதற்கு முடிவு செய்த ஏ.பி.நாக ராஜன், சிவாஜியிடம் கதையைக் கூறினார்.'திருவிளையாடல்' திரைப்படத்தின் தையைக்கேட்ட நடிகர் திலகம் சிவாஜி, 'என்னண்ணே சடாமுடி எல்லாம் வைச்சுக்கிட்டு நான் சிவனா நடிச்சாஜனங்க த்துக்குவாங்களா?' என்று இயக்குநரிடம்சிவாஜி கேட்டாராம்அதற்குப் பதில் அளித்த நாகராஜன், 'நீங்கள் இந்தப் படத்தில் நடித்த பின் நீங்கள் தான் சிவன் என்றுமக்கள் நிச்சயம் சொல்வார்கள். அப்படிச் சொல்லலைன்னா நான் திரைப்படத்துக்குக் கதை எழுதுறதையும், திரைப்படம் எடுக்கிறதையும் விட்டுவிடுகிறேன்' என்றாராம்.
திருவிளையாடல் படத்தில் நக்கீரராக நடிகர்எஸ்.வி.ரெங்காராவை நடிக்க வைக்கலாம் என்றுஇயக்குநர் ஏ.பி.என் முதலில் நினைத்தாராம். அவர் ஒரு சிறந்த நடிகர்தான் என்றாலும், அந்தப் பாத்திரத்தில் நன்கு தமிழ் பேசி நடிப்பாரா என்ற சந்தேகம்எழுந்ததால் அதனைக் கைவிட்டாராம்.அடுத்து நக்கீரராக நடிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனைத் தேர்ந்தெடுக்கலாமா? என்று நினைத்தாராம்.கவியரசர் நன்றாகத் தமிழ் பேசுவார். ஆனால்அதில் ஒரு கம்பீரம் இருக்காது என்றுஅந்த முடிவை யும் கைவிட்டாராம்.
இறுதியில் சிவாஜி நாடக மன்றத்தைச்
சேர்ந்த நடிகர் தங்கராஜ் என்பவரையே நடிக்க வைப்பது என்றுமுடிவு செய்யப்பட்டுவிட்டது.திருவிளையாடல்
திரைப்படத்தின்படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருந்தது.
மறுநாள் நக்கீரரும், சிவபெருமானும்
நடிக்க வேண்டிய காட்சி படம்பிடிக்கப்பட வேண்டும்.அதற்கு முதல்நாள் படப்பிடிப்புமுடிந்தவுடன்
நடிகர்திலகம் சிவாஜிஇயக்குநர் நாகராஜனை அழைத்து,
'அண்ணே.. நக்கீரராக நீங்களே
நடிச்சிருங்க... அதுதான் நல்லா இருக்கும்' என்றார்.
அதற்கு இயக்குநர் நாகராஜன்,
'நான் நடிப்பதைவிட்டு ரொம்ப நாளாச்சு. இப்பப் போய் நடிக்கவேண்டுமா?' என்றாராம். அத்துடன்
அதில் நடிப்பதற்கு தங்கராஜ் அவர்களை முடிவு பண்ணியாச்சே... அவரே நடிக்கட்டுமே...' என்றார்.ஆனால்
நடிகர் திலகம் சிவாஜி அதற்குச் சம்மதிக்கவில்லை. 'நீங்கள் நடித்தால் தான் சிறப்பாகஇருக்கும்'
என்றிருக்கிறார்..அப்போதும் நடிகாரில் ஏறிவிட்டு,
நாகராஜனைப் பார்த்து 'அண்ணே..
நாளைக்குநீங்க நக்கீரராக நடிப்பதாக இருந்தால் தான் நான்சிவனாக நடிப்பேன். இல்லாவிட்டால்
நான்நாளை படப்பிடிப்புக்கு வர மாட்டேன்' என்றுசொல்லி விட்டு வேகமாகச் சென்று விட்டார்.சிவாஜிக்கு
எதிராகக் கம்பீரமாகத் தமிழ் பேசிநடிப்பதற்குப் பொருத்தமான நடிகர் இல்லைஎன்பதை நீண்ட
யோசனைக்குப் பின்னர் உணர்ந்தநாகராஜன் தானே நக்கீரராக நடிப்பதற்கு முடிவுசெய்தார். அக்கம்மாபேட்டை
பரமசிவம் நாகராஜனின் சுருங்கிய வடிவம்தான் ஏ.பி.நாகராஜன்ஒப்பனையில் திரையில் ஜொலிக்கும்
நக்கீரர்.
திருவிளையாடல் படத்தில் சிவன் சிவாஜியும்,நக்கீரர் நாகராஜனும் விவாதிக்கும் வசனங்களைஅந்தக் காலத்தில் பலர் பாடமாக்கினார்கள்.
திருவிளையாடல் படத்தில் அந்தக்
காட்சிக்குபலத்த கைதட்டல் எழுந்தது. சிவாஜிக்கு எதிராககம்பீரமாகத் தமிழ் பேசி இப்படி
நடிப்பேன் என நாகராஜன் முதலில் நினைக்கவில்லை ஆனால், சிவாஜிஅதனை தெரிந்து நாகராஜனை
நடிக்க அழைத்தார்.அந்தக் காட்சியில் சிவாஜியின் நடிப்பு சிறந்ததா,நாகராஜனின் நடிப்பு
சிறந்ததா எனச் சொல்ல முடியாது.
திருவிளையாடல் படத்தில் சிவன்
சிவாஜியும் தருமி நாகேஸூம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உரையாடும் காட்சியை என்றைக்கும்
மறக்க
முடியாது. கம்பீரமான சிவாஜிக்கு
முன்னால கூனிக்குறுகி நடித்த நாகேஷின் நடிப்பு அற்புதமானது. அவரது உடல் அசைவை யாருமே
இதற்கு முதல் செய்ததில்லை.படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் நாகேஷை வைத்துச்சில காட்சிகளை
நாகராஜன் எடுத்தார். அப்போதுஅங்கே வந்த சிவாஜி கோபமாக முறைத்துப் பார்த்தார். பெரிய
நடிகர்கள் சிறிய நடிகர்களை அ டக்கியாள்வதால் அந்தக் காட்சிகள் திரையில் வருமா இல்லையா
என அங்கிருந்தவர்கள் சந்தேகப் பட்டார்கள்.படப்பிடிப்பு முடிந்து அந்தக் காட்சியைப்
பார்த்தபோது சிவாஜிக்கு மேலாக நாகேஷின் நடிப்பு தெரிந்தது. ஒரு சிலவற்றை வெட்டும்படி
சிவாஜி சொல்வார்என அனைவரும் நினைத்தனர். ' இவன் என்னையேதூக்கி சாப்பிடிட்டான்' எனக்
கூறிய சிவாஜி அந்தக்காட்சி அப்படியே இருக்கட்டும் என்றார்.
No comments:
Post a Comment