இலங்கை ஏற்ட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சீனாவையும், இந்தியாவையும் எதிர்பார்க்க
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, அமைச்சர், பசில் ராஜபக்ஷ ,அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
ஆகியோர் அந்த நாடுகளுலுக்கு விஜயம் செய்து
உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனாலும்
அந்த நாடுகள் இலங்கைக்க்குக் கொடுக்கப்போகும்
கடன், இன்றைய நிலைமையைச் சமாளிப்பதற்குப் போதுமானதல்ல.நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடன் மறுசீரமைப்பு அல்லது சர்வதேச நாணய நிதியத்தின்
உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படும் என சர்வதேச
முதலீட்டாளர்களை மேற்கோள்காட்டி பினான்ஸியல் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் 2019 ஆம் பாரிய
வரிக் குறைப்பு செய்யப்பட்டதுடன், கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா துறை வீழ்ச்சியடைந்தது.
வட்டி மற்றும் கடனைத் திருப்பிச்
செலுத்துவதற்காக இந்த ஆண்டு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும். ஆனால்
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியனுக்கு குறைவான அமெரிக்க டொலரே இருக்கிறது.இலங்கை
அரசாங்கத்தின் அடுத்த பெரும் சவால் எதிர்வரும் ஜூன் மாதம் போது ஒரு பில்லியன் டொலர்
இறையாண்மை முறிகளை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சர்வதேச நாணய
நிதியத்தின் உதவியை நாடலாம் என்றும் நிதி அமைச்சர்
பசில் ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார். சர்வதேச
பத்திரம் வைத்திருப்பவர்களுடன் கடன் நிவாரணம் பற்றி இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்நியச் செலாவணி கையிருப்பு
இல்லாததால் மின்வெட்டு மற்றும் எரிபொருள், பால் பவுடர் உள்ளிட்ட இறக்குமதிகளுக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டு இரட்டை இலக்க பணவீக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இலங்கையின் மூன்றில் ஒரு
பங்கு கடன்கள் சர்வதேச பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது மற்றும்
நாடு கடந்த வாரம் $500ம் பத்திரத்தை திருப்பிச் செலுத்தியது. இன்னும் ஒரு பில்லியன்
டொலர் ஜூலையில் வரவுள்ளது.
இந்தியா கிட்டத்தட்ட 1 பில்லியன்
டொலர் நிவாரணம் வழங்கியுள்ளது மேலும் உதவிக்கொரிய பேச்சுவார்த்தை நடைபெற்றூ வருகிறது.
சீனா கடந்த மாதம் $1.5bn மதிப்புள்ள ரென்மின்பி நாணய பரிமாற்றத்தை
வழங்கியது, இருப்பினும் இது டொலர் மதிப்பிலான கடனை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை
என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சீனாவிடம் இருந்து பெறபட்ட கடன் தேவையற்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப்
பயன்படுத்தப்பட்டு நெருக்கடியை அதிகப்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.
கடன் சுமை என்பது இலங்கைக்கு திடீரென ஏற்பட்ட ஒன்று அல்ல. யுத்தம்
முடிந்ததும் இலங்கை சொர்க்க மூமியாகும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. அதற்கேற்றால் போல கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யுத்தத்தால் அழிக்கப்பட்ட அனைத்தும்
நவீன முறையில் கட்டி எழுப்பப்பட்டன. இது வரக் காலமும் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியதுபோல்
இப்போதைய கடனையும் செலுத்தி விடலாம் என்ற நம்ப்பிக்கை அரசாங்கத்துக்கு இருந்தது.
கொரோனா என்ற கொரூரத் தொற்று எல்லாவற்றையும் புரட்டி போட்டது. கொரோனாவில் இருந்து
மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் அனைத்தும்
போராடின. கொரொனவில் இருந்து மக்களை மீட்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமைகொடுத்தது. கொரோனவுடன் உலக நாடுகலின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இலங்கையும் அதர்கு
விதிவிலக்கல்ல. வங்கிய கடனின் வட்டியைச் செலுத்துவதற்கு
கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடன் கொடுக்கும் நாடுகளும், அமைப்புகளும் விதிக்கும்
நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை தயாராக இல்லை. இந்த இடியப்பச் சிக்கலில் இருந்து வெளியேறி மக்களையும்,
நாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது.
No comments:
Post a Comment