மேக்ஸ்வெல் - வினி ராமன் ஆகியோரின் திருமணம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் அதிரடி
காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடினார்.
இந்நிலையில், மீண்டும் மேக்ஸ்வல்லை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா வாழ் தமிழ்
பெண்ணான வினி ராமன் என்பவரை மேக்ஸ்வெல் காதலித்து
வந்துள்ளார்.அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல்
ஏற்பட்டது. தற்போது மார்ச் 27ம் திகதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தம்பதியின் புகைப்படங்கள் இணையதளங்களில்
வைரலாகி வருகின்றன. கிரிக்கெட்டர் மேக்ஸ்வெல்
தமிழ்பெண்ணை திருமணம் செய்ய உள்ளதை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவர்களது
திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
திருமண பத்திரிகை பாரம்பரிய
முறைப்படி மஞ்சள் நிற பத்திரிக்கையில் தமிழில் அச்சிடப்பட்டுள்ளதால் இணையத்தில் வைரலாகி
வருகிறது.
இந்திய பெண்மணி வினி ராமன் குறித்து பலர் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர். யார் இவர்? எப்படி கிளென் மேக்ஸ்வெல்லுடன் இவர் காதலில் விழுந்தார் என்று பலரும் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர்.
இவர்கள் இருவரும் இப்போது
அல்ல கடந்த 2013லேயே சந்தித்துவிட்டனர். ஆம் அப்போதில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக
இருந்துள்ளனர். முதலில் வினி ராமனை கிளென் மேக்ஸ்வெல்தான் சந்தித்து பேசி இருக்கிறார்.
அடிக்கடி சந்தித்த இவர்கள் நண்பர்களாக பழகி இருக்கின்றனர். இந்த நிலையில் வினி மீதான
தனது விருப்பத்தை கிளென் மேக்ஸ்வெல் 2017ல் தெரிவித்துள்ளார்.
2017ல் இருந்து இவர்கள் இருவரும் இதையடுத்து டேட்டிங் சென்றுள்ளனர். அதன்பின் அதே வருடம் கிளென் மேக்ஸ்வெல் வினியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பின் வினி கிளென் மேக்ஸ்வெல் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. நிச்சயம் முடிந்த பின் இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. பல நாடுகளுக்கு இவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர்.
ஐபிஎல் தொடருக்காக இந்தியாவுக்குச்
சென்ற போதும், மற்ற தொடர்களின் போதும் கிளென் மேக்ஸ்வெல் வினியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
தமிழ் பின்னணியை கொண்ட வினி ராமன் தமிழ்நாட்டில் பிறந்தவர் கிடையாது. இவர் பிறக்கும்
முன்பே வினியின் பெற்றோர் அவுஸ்திரேலியா சென்றுவிட்டனர். ஆனாலும் தமிழ் பாரம்பரியத்தை
இவர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அதனால்தான் திருமண பத்திரிக்கையை தமிழ் பாணியில் மஞ்சள்
நிறத்தில் அடித்துள்ளனர்.
மெல்போர்னில் பிறந்து வளர்ந்து Pharmacy படித்தவர் வினி ராமன். இவர் மேக்ஸ்வெல் உடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் மேக்ஸ்வெல் மன அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். அந்த காலத்தில் மேக்ஸ்வெல்லுக்கு வினி ராமன் மிகவும் நெருக்கமாக இருந்து உதவி செய்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment