Monday, February 14, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 5


 தமிழ்த் திரை உலகின் அட்டகாசமான வில்லன்களில் ஒருவர் பி.எச்.வீரப்பா. வீரப்பா என்றதும்  "  ஹா..ஹ்...ஹா...ஹ்....ஹா ..என்ற வெடிச் சிரிப்பும் ", 'அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" எனும் வசனமும் மனதில் வந்து போவதைத் தவிர்க்க முடியாது. பி.எஸ்.வீரப்பாவைப் போன்றே நம்பியார்,அசோகன் போன்ற வில்லன் நடிகர்களும் சிரிப்பால் மிரட்டினார்கள். பஞ்ச்  வசனம் இல்லாத அந்தக் காலத்தில் "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி எனும் வசனம் பட்டி தொட்டிஎங்கும் எதிரொலித்தது. தெரிந்தோ தெரியாமலோ பஞ்ச் வசனத்தை ஆரம்பித்தி வைத்த  பெருமை வீரபாவைச்சாரும்.

வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் வீரப்பா பேசிய " சபாஷ் சரியான  போட்டி" எனும் வசனமும் இன்று வரை பேசப்படும் பஞ்ச் வசனம்.

எம்.ஜி.ஆர் நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர். ‘ஹா...ஹா... ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள் படத்தில்தான் முதன்முதலாக இந்த இடிச்சிரிப்பை அவர் வெளிப்படுத்தினார். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பால், பின்னர், அதுவே அவரது தனி முத்திரை ஆனது. அந்த சிரிப்புக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பா.

வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. எம்.ஜி.ஆர். நடித்து 1957-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாதேவி படத்தில் ‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற வீரப்பாவின் வசனம் இன்றளவும் பிரபலம். அந்தப் படத்தில் வீரப்பாவின் பெயர் கருணாகரன். சந்தர்ப்பவசத்தால், வீரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, இளவரசியாக வரும் நடிகை எம்.என்.ராஜத்தை அவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்து விடுவார் கள். திருமணம் முடிந்து வீரப்பாவை ‘‘அத்தான்...’’ என்று எம்.என்.ராஜம் அழைப்பார். ஆத்திரத்தை அடக்கியபடி வேதனை கலந்த சிரிப்போடு வேண்டா வெறுப்பாக, ‘‘அப்படிச் சொல்... சத்தான இந்த வார்த்தையிலே கருணாகரன் செத்தான்’’ என்று வீரப்பா கூறும்போது தியேட்டரில் எழும் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும். 1948 முதல்  1984 ஆம் ஆண்டு வரை  சினிமாவில்  இருந்த வீரப்பா தமிழ்,கிந்தி,மலையாளம் உட்பட 12 படங்களைத் தயாரித்தார். அன்றைய பிரபல நட்சத்திரங்களான, சிவாஜி, எம்.ஜி.ஆர்,ஜெமினி, ஜெய்சங்கர் ஆகியோர் அவரின் படங்களில் நடித்தனர்.    ஆனந்தஜோதி, அலயமணி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் பெரு வெற்றி பெற்றன. சினிமாவில் உழைத்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்த வீரப்பா அதே சினிமாவால் முதலை இழந்தார்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,எம்.ஜி.ஆர்,என்.டி.ராமராவ்,வி.என்.ஜானகி,ஜெயலலிதா ஆகிய ஆறு முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமைக்குரியவர்.  1962 ஆம் ஆண்டு வெளியான ஆலயமணி வசூலில் பெரும்  சாதனை செய்தது. கதாநாயகனான   சிவாஜி வில்லனாக சித்திரிக்கப்பட்ட படம் ஆலயமணியை கிந்தியில் தயாரிப்பதற்கு உரிமை கோரி  ஐந்து இலட்சம் ரூபா தருவதற்கு ஒருவர் முன் வந்தார். இன்றைய கணக்கில் சுமார் எட்டு கோடி ரூபா பெறுமதியானது. அதிர்ச்சியில் உறைந்த வீரப்பா அந்த சந்தோசச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்தார். 

வீரப்பாவுடைய நண்பர்கள் அனைஅவ்ரும் பாராட்டினார்கள். ஒரே ஒரு நண்பர் மட்டும் வித்தியாசமாகச் சிந்தித்தார். ஆலயமணி பட  உரிமைக்காக ஐந்து இலட்சம் ரூதா கொடுக்கத் தயாராக இருக்கும் அவர் அதனால் எவ்வளவு இலாபம் அடைவார் என வீரப்பாவின் காதிலே ஓதினார். சாத்தான் ஓதிய வேதம் வீரப்பாவின் சிந்தனையை மழுங்கடித்தது. அவர் சொல்வது சரிபொல் தோன்றியது. கிந்திப்பட தயாரிப்பாலர் மீண்டும் வீரப்பாவைச் சந்தித்துப் பேசினார். வீரப்பா மழுப்பலாகப் பதில் சொன்னார். ஆலயமணி படத்தின் உரிமையை வாங்குவதில் குறியாக இருந்த அவர், இம்முறை  வித்தியாசமாகச் சொன்னார். பட உரிமையைத் தரவேண்டாம் படத்தை நான் தயாரிக்கிறேன்.  இலபத்தை சமமகப் பங்கு போடுவோம் என்றார்.  அந்த யோசனை வீரப்பா ஏற்றுக்கொண்டார்.

வீரப்பாவின் அலுவலகத்துக்குச் சென்ற சாத்தான் மீண்டும்  ஓதியது.  உன்னுடைய படத்தின் இலாபத்துக்காக இன்னொருவனின் கையை ஏன் எதிர் பார்க்க வேண்டும். நீங்களே தயாரித்தால் முழு இலாபத்தையும் எடுக்கலாம். வீரப்பாவின் வாழ்க்கையில் நண்பனின் ரூபத்தில் விதி விளையாட்டை  அரம்பித்தது.

வீரப்பாவின் பீ.எஸ்.வி பிக்சர்ஸ் கிந்திப் பட உலகில் காலடி எடுத்து வைத்தது.ஆலயமணி தமிழில்  மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் என்பதால்  கிந்திப் பட வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றன. சிவாஜி  நடித்த பாத்திரத்துக்கு திலீப்குமாரும், சரோஜா தேவி நடித்த பாத்திரத்துக்கு  வகிதா ரகுமானும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கிந்திப் பட உலகம் வீரப்பாவுக்கு வாழ்த்துக் கூறியது. ஆலயமணி படந்தை கே.சங்கர் இயக்கினார். ஆத்மி என்ற கிந்திப் படத்தை இயக்க ஏ.பிம்சிங் ஒப்பந்தம்  செய்யப்பட்டார். பெரும் எதிர் பார்ப்புடன் மிகுந்த பொருட் செலவில் ஆத்மி படப்பிடிப்பு  நடைபெற்றது. ஆத்மி தியேட்டரில் வெளியானது போட்ட முதலுக்கு அதிகமாகக் கிடைக்கும் என வீரப்பா எதிர் பார்த்தார். தமிழ்ப் படங்களில் கிடைத்த இலாபத்தை கிந்திப் படத்தில் தொலைத்தார் வீரப்பா.

வீரப்பாவின் தோல்வி திலீப்குமாரின் மனதை வாட்டியது.  அவருக்கு உதவி செய்ய வேன்டும் என நினைத்த திலீப்குமார்   "கங்கா ஜம்னா" என்ற தனது படத்தை தமிழில் தயாரிப்பதர்கு வீரப்பாவுக்கு அனுமதியளித்தார். ஆத்மி வெளிவருவதர்கு  10 வருடங்கள்  முன்னதாக 1961   ஆம் ஆண்டு  வெளியாகி  வசூலிரில் சாதனை படைத்த படம் கங்கா ஜம்னா. அதை தமிழில் தயாரிக்க பலர் கேட்டபோதும் திலீப்குமார் மறுத்துவிட்டார்.கங்கா ஜம்னா படத்தின் கதையை எழுதி தயாரித்தவர் திலீப்குமார்.

திலீப்குமார், வைஜயந்திமாலா  ஜோடியாக நடித்த கங்கா ஜம்னா தமிழ்ப் படத்தில் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடித்தனர். எஸ்.ராமநாதனின் தயாரிப்பில் வெளியான  " இரு துருவங்கள்'  என்ற அந்தப் ங்களந்தப் படம்என்ற அந்தப்படம் படு தோல்வியடைந்தது.

தமிழில் வெற்றி பெற்ற ஆலயமணி கிந்தியில் ஆத்மியாகி தோல்வியடைந்தது.  கிந்தியில்  பெரு வெற்றியடைந்த  கங்கா ஜம்னா  தமிழில் இருதுருவங்களாகி  இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. இரண்டு படத் தோல்விகளும் வீரப்பாவை முடக்கின. இரண்டு பெரிய தொல்விகளுக்குப் பின்னரும்  ஆனந்த சிற்பங்கள்,  திசை மாரிய பறவைகள், வெற்றி ஆகிய மூறு படங்களை வீரப்பா தயாரித்தாரவரால் மீண்டும் தலை நிமிர்த்த  முடியவில்லை.

No comments: